என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் பாசப்போராட்டம்- இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் தாய் குரங்கு
    X

    தாய் குரங்கை படத்தில் காணலாம்.

    சிதம்பரத்தில் பாசப்போராட்டம்- இறந்த குட்டியுடன் சுற்றி திரியும் தாய் குரங்கு

    • பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.
    • குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் வசித்து வருகிறது. இங்கு குரங்குகள் கூட்டமாக நடராஜர் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிவகங்கை குளம், மேல வீதி, காசுக்கடை தெரு பகுதிகளில் விளையாடி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் காசுக்கடை தெரு பகுதியில் குட்டி குரங்கு ஒன்று இறந்தது. ஆனால் இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு விடாமல் அரவணைத்து கொண்டு அப்பகுதியில் சுற்றி வருகிறது.

    மேலும் கூட்டமாக சேர்ந்து கொண்டு பாசப்போராட்டம் நடத்தி வருகிறது. குட்டி குரங்கு இறந்து துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் குட்டி குரங்கு உயிருடன் இருப்பதாக எண்ணிக் கொண்டு பாசத்துடன் குட்டி குரங்கை பராமரித்து வரும் தாய் குரங்கின் பாசம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

    குட்டிக்கு உயிர் கொடுக்கும் எண்ணத்துடன் வாய் வைத்து ஊதுவதும், அதன் மீது காது வைத்து பார்ப்பதும், பிறகு தூக்கி கொண்டு ஓடுவதுமாக இருந்து வருகிறது. பலர் எவ்வளவோ முயற்சி செய்தும் தாய் குரங்கிடம் இருந்து குட்டி குரங்கை பிரிக்க முடியவில்லை.

    இந்த குரங்கின் பாசப்போராட்டம் பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×