பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி அருகே  மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை சிறுகிராமத்தை சேர்ந்தவர் லட்சு மணன் (26) கூலித்தொழிலாளி .இவர் நேற்று இரவு 8மணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் பண்ருட்டி அடுத்த சேமகோட்டை எஸ்.ஏரிபாளையம் கேட் சேலம் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லட்சுமணன்தலையில் பலத்த அடிபட்டுசம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தொழிலாளி லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com