பண்ருட்டி அருகே செங்கல் சூளை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகம் செங்கல் சூளை தொழிலாளி. வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
பண்ருட்டி அருகே செங்கல் சூளை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர், திடீர்குப்பம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). செங்கல் சூளை தொழிலாளி.திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்ல ப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com