என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே போலி டாக்டர் கைது
- கடலூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
- தொடர்ந்து கிருபாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
நடுவீரப்பட்டு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் போலி டாக்டர் வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுவீரப் பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் சுகாதார துறை யினர் அதே பகுதியில் உள்ள கிருபாநிதி (வயது 51) என்பவர் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கிருபாநிதி அரசு அனுமதி இல்லாமல், உரிய மருத்துவ சான்றிதழ் இல்லாமலும் மருந்து, மாத்திரை, மருத்துவ உபகர ணங்கள் வைத்திருந்தும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கிருபா நிதியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் டாக்டர் ஒருவரிடம் உதவி யாளராக பணிபுரிந்து வந்ததும், தற்போது பொது மக்களுக்கு வீட்டில் சென்று சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருபாநிதியை அதிரடியாக கைது செய்தனர்.






