என் மலர்tooltip icon

    அரியலூர்

    • உரியவர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்
    • பாராட்டி சான்றிதழ் வழங்கிய அரியலூர் மாவட்ட எஸ்.பி.

    அரியலூர்,

    அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள வாரணவாசி மருதையாற்று பாலம் வழியாக அரியலூர் நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு பை கீழே கிடந்தது. அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 7½ பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், அந்த நகையை அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் இருவரையும் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    • செங்குந்தர் பருத்திப்பட்டு நெசவாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உறுப்பினர்களை நீக்கியதாக குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் 4 வது குறுக்கு தெருவில் உள்ள செங்குந்தர் பருத்தி பட்டு நெசவாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 165 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் பாவு வாங்கி புடவை நெய்து வந்த நிலையில் ஒரு சில குடும்ப காரணம், உடல் நலக்குறைவு காரணமாக புடவை நெய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.இந்நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக பட்டு நெய்வதற்கு பாவு வாங்க வந்த போது கூட்டுறவு சொசைட்டி உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டனர். ஆகையால் பாவு இல்லை என கூறி உள்ளனர்இதனையடுத்து தொடர்ந்து ஒருமாத காலமாக இழுத்தடிப்பு செய்தும் வந்துள்ளனர்நீக்கம் செய்யப்பட்டதற்கு எந்தவித முன் அறிவிப்பும் வழங்க வில்லை என கூறி ஆத்திரமடைந்த நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் சுமார் 10 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனையடுத்து கூட்டுறவு சொசைட்டி தலைவர் லலிதா புருஷோத்தமன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்

    .

    • ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது
    • கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆமணக்கந்தோண்டி மற்றும் புதுச்சாவடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவநேசன், மைதீன் ஷா, உதயதுல்லா, கணேசன், தனவேல், மாவட்ட செயற்குழு பாலசுப்ரமணியன், இந்திராணி, சர்மிளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு மணிவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.இதில் புதுச்சாவடியில் பட்டா மாற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சாவடியில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை இடித்து புதிய கட்டிடம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை பயன்பாட்டை முறையற்ற முறையில் விவசாய நிலத்துக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கையும், ஆமணக்கந்தோண்டி ஊராட்சியில் உள்ள முதியோர் மாற்றுத்திறனாளி விதவை ஆகியோர்களுக்கு அரசு உதவி தொகை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇதில் மாவட்ட குழு பத்மாவதி, ஒன்றிய குழு தோழர் ரவீந்திரன், பூபாலன், பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
    • 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவிக்கையில், முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களு க்கான ஓய்திவூய உதவி தொகை பெறுவதற்கான விண்ண ப்பங்கள் அளிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்தியப்போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் (இ) வயது வரம்பு 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். (ஈ) விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000ல் இருந்து ரூ.15000க்குள் இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள், வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் பெற தகுதி இல்லை. எனவே அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் 20.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்.19.04.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் அவர்களை 7401703499 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • ஏரிகளை தூர்வார வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • முள்புதர் மண்டி பூச்சுகள் அண்டி வருவதால் பொதுமக்களுக்கு தொந்தரவு

    அரியலூர்,

    அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 286 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21,600 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் நகர் பகுதியிலுள்ள ஏரிகளை தூர்வார வேண்டும் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் சமூக ஆர்வலர் சுகுமார் கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த  மனுவில், அரியலூர் நகரில் 20 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட செட்டி ஏரி  ஒரு காலத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதரமாக விளங்கியது. தற்போது இந்த ஏரியை தூர்வாரப் படாமல் இருப்பதினால், ஏரியைச் சுற்றி முள் புதர்கள் மண்டி கிடப்பதினால், பூச்சி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடரமாக விளங்கி வருகிறது. மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.  எனவே ஏரியை தூர்வார மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே போல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்டதுரை ஏரியையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • மது விற்ற 2 பெண்போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்கள் கைது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகதாசின் மனைவி அமுதா (வயது 47), அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரையின் மனைவி அம்சவெள்ளி(47) ஆகியோர் அப்பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து அமுதா, அம்சவெள்ளி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • துர்நாற்றம் வீசுவதால் கழிவு நீர் கால்வாயை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • 25 மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதே பகுதியில் சில கோழிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர், இந்த வாய்க்கால் வழியாகத்தான் செல்கிறது. கோழி கழிவுகள், தனியார் நிறுவனங்களின் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் வங்கி, ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சரக்கு ஆட்டோக்களும் அப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ள பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே சுமார் 25 மீட்டர் தூரமுள்ள இந்த சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் 2 புறமும் தடுப்புச்சுவர் அமைத்து சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு
    • ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் சிவமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.சட்டதிருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன் கொள்கைபரப்பு துணைசெயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்டதுணை செயலாளர் லதாபாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசா, நகரசெயலாளர் முருகேசன், கருணாநிதி , ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அறிவழகன், உட்பட மாநில மாவட்ட நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பார்வையாளர் சபாபதிமோகன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும், சட்டமன்ற தொகுதியில் 50ஆயிரம் பேர் சேர்ப்பது குறித்தும் விரையில் தேர்தலுக்கு வலுவான பூத்கமிட்டி அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • மகாமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்

    அரியலூர்,

    அரியலூர்காந்தி மார்க்கெட் பகுதியில் இச்சிலிமரத்து மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்செரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.இதனை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்அடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலம் பேருந்து நிலையம், தேரடி வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களம், ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
    • டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை தனியார் பேருந்தில் வந்தனர். திருமண விழா முடிந்ததும் சாப்பிட்டு விட்டு, உடனடியாக அதே பேருந்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் அந்த பேருந்து, ஜெயங்கொண்டத்தை அடுத்த தேவனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர். அப்போது திடீரென்று அந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டவர்கள் பலத்த காயங்களுடன் போராடினர்.

    பஸ் கவிழ்ந்தது தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பேருந்தில் பயணம் செய்த 52 பேரும் பலத்த காயம் அடைந்தனர். குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • மேலண்குழியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் நிலைகளை ஐகோர்ட் வக்கீல்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
    • நான்கு ஏரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள மேலண்குழி ஊராட்சியில் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4 ஏரிகள் ஆக்கமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆக்கிரமி க்கப்பட்ட ஏரிகளை ஆய்வு செய்ய வழக்குரைஞர் மது தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு, மேலண்குழியிலுள்ள 4 ஏரிகளையும் ஆய்வு செய்தது.அப்போது வழக்குரை ஞர்கள் குழுத் தலைவர் மது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-இப்பிரச்னையை பார்க்கும் போது நாட்டில் நடக்கும் தவறுகள் அரசியல் வாதிகள் உடையது இல்லை என்பது தெரியவருகிறது.இந்த தவறுகள் முழுவதும் அதிகாரம் உள்ளவர்களால் நடக்கிறது. வருவாய் துறையும் , காவல்துறையும் நேர்மையாக இருந்தால் இது போன்று தவறுகள் நடக்காது. இவர்களது தவறுகளினால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.எனவே எங்களது ஆய்வுப் பணிகளை சிறப்பாக செய்துள்ளோம்.ஆய்வு அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

    • 40 ஆண்டு காலம் குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்படடது
    • வீடுகள் இடிக்கப்படுவதை கண்டு கதறி அழுத பொதுமக்கள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகர்பாளையம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி (60) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மகன்கள் பாலமுருகன், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன் மற்றும் மகள் ஆனந்தி பேரக்குழந்தைகள் ஆசிரா மாதேஷ் ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் களுக்கு பட்டா வழங்கப்பட்டு மீதமுள்ள காலி இடத்தில் புண்ணியமூர்த்திக்கு வீட்டுமனை ஏதும் இல்லாததால் அங்கு கூரை வீடாக இருந்ததை மாற்றி ஆஸ்பட்டா சீட் போட்டு கடந்த 40 ஆண்டு காலமாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.அதற்குச் சான்றாக சர்வே எண் 622/2 என்னில் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் கட்டி வருகின்றனர். மேலும் ஊராட்சி மூலம் இலவச கழிப்பிட வசதிக்காக கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இடம் ஆக்கிரமிப்பு என கூறி மாற்று இடம் வழங்காமலேயே வருவாய் துறையினர் கட்டி இருந்த வீட்டை இடித்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கால அவகாசம் கேட்டும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் குடும்பத்துடன் கண்ணீர் மல்க போராடினர். இருப்பினும் அதிகாரிகள் செவி சாய்க்காமல் வீடுகளை இடித்து அகற்றினர்.இதுகுறித்து சம்பவம் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரமசிவம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்மணிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டனர். இருப்பினும் அதிகாரிகள் கால அவகாசம் தர இயலாது என மறுத்து விட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டா வழங்க மேல் அதிகாரியிடம் கலந்து பேசி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் அதே பொது இடத்தில் சர்வே எண் 622/3 ல் ஒரு நபருக்கும் 622/4 ல் ஒரு நபருக்கும் என இரண்டு நபருக்கு இடம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இதுபோன்று ஏழைகளை துவம்சம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் என வருவாய்த் துறையினர் உள்ளிட்ட காவலர்கள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    ×