search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகள் இடித்து அகற்றம்
    X

    வீடுகள் இடித்து அகற்றம்

    • 40 ஆண்டு காலம் குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்படடது
    • வீடுகள் இடிக்கப்படுவதை கண்டு கதறி அழுத பொதுமக்கள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகர்பாளையம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி (60) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மகன்கள் பாலமுருகன், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன் மற்றும் மகள் ஆனந்தி பேரக்குழந்தைகள் ஆசிரா மாதேஷ் ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் களுக்கு பட்டா வழங்கப்பட்டு மீதமுள்ள காலி இடத்தில் புண்ணியமூர்த்திக்கு வீட்டுமனை ஏதும் இல்லாததால் அங்கு கூரை வீடாக இருந்ததை மாற்றி ஆஸ்பட்டா சீட் போட்டு கடந்த 40 ஆண்டு காலமாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.அதற்குச் சான்றாக சர்வே எண் 622/2 என்னில் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் கட்டி வருகின்றனர். மேலும் ஊராட்சி மூலம் இலவச கழிப்பிட வசதிக்காக கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இடம் ஆக்கிரமிப்பு என கூறி மாற்று இடம் வழங்காமலேயே வருவாய் துறையினர் கட்டி இருந்த வீட்டை இடித்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கால அவகாசம் கேட்டும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் குடும்பத்துடன் கண்ணீர் மல்க போராடினர். இருப்பினும் அதிகாரிகள் செவி சாய்க்காமல் வீடுகளை இடித்து அகற்றினர்.இதுகுறித்து சம்பவம் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரமசிவம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்மணிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டனர். இருப்பினும் அதிகாரிகள் கால அவகாசம் தர இயலாது என மறுத்து விட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டா வழங்க மேல் அதிகாரியிடம் கலந்து பேசி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் அதே பொது இடத்தில் சர்வே எண் 622/3 ல் ஒரு நபருக்கும் 622/4 ல் ஒரு நபருக்கும் என இரண்டு நபருக்கு இடம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இதுபோன்று ஏழைகளை துவம்சம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் என வருவாய்த் துறையினர் உள்ளிட்ட காவலர்கள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×