என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரோட்டில் கிடந்த 7.5 பவுன் தங்க நெக்லஸ்
- உரியவர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்
- பாராட்டி சான்றிதழ் வழங்கிய அரியலூர் மாவட்ட எஸ்.பி.
அரியலூர்,
அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள வாரணவாசி மருதையாற்று பாலம் வழியாக அரியலூர் நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு பை கீழே கிடந்தது. அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 7½ பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், அந்த நகையை அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் இருவரையும் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
Next Story






