search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியை தூர்வார கோரிக்கை
    X

    ஏரியை தூர்வார கோரிக்கை

    • ஏரிகளை தூர்வார வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • முள்புதர் மண்டி பூச்சுகள் அண்டி வருவதால் பொதுமக்களுக்கு தொந்தரவு

    அரியலூர்,

    அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 286 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21,600 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் நகர் பகுதியிலுள்ள ஏரிகளை தூர்வார வேண்டும் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் சமூக ஆர்வலர் சுகுமார் கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், அரியலூர் நகரில் 20 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட செட்டி ஏரி ஒரு காலத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதரமாக விளங்கியது. தற்போது இந்த ஏரியை தூர்வாரப் படாமல் இருப்பதினால், ஏரியைச் சுற்றி முள் புதர்கள் மண்டி கிடப்பதினால், பூச்சி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடரமாக விளங்கி வருகிறது. மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்டதுரை ஏரியையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    Next Story
    ×