என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கழிவு நீர் கால்வாயை மூட கோரிக்கை

- துர்நாற்றம் வீசுவதால் கழிவு நீர் கால்வாயை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 25 மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
அரியலூர்,
ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதே பகுதியில் சில கோழிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர், இந்த வாய்க்கால் வழியாகத்தான் செல்கிறது. கோழி கழிவுகள், தனியார் நிறுவனங்களின் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் வங்கி, ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சரக்கு ஆட்டோக்களும் அப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ள பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே சுமார் 25 மீட்டர் தூரமுள்ள இந்த சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் 2 புறமும் தடுப்புச்சுவர் அமைத்து சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.