என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்செரிதல் விழா
- மகாமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்
அரியலூர்,
அரியலூர்காந்தி மார்க்கெட் பகுதியில் இச்சிலிமரத்து மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்செரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.இதனை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்அடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலம் பேருந்து நிலையம், தேரடி வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களம், ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






