என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
    • போதையில் இருந்த வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சிங்கியில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் மதுக்கடையில் கொள்ளையடிக்க சென்றார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கை கழட்டினார். பின்னர் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் நிரப்பி கொண்டார்.

    ஹார்ட் டிஸ்க் கழற்றியாதால் தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என நினைத்தார்.

    கடையில் இருந்த விலை உயர்ந்த பல ரகமான மது பாட்டில்களை பார்த்ததும் அவருக்கு மதுகுடிக்க ஆசை ஏற்பட்டது. கடையில் தரையில் அமர்ந்து ஒவ்வொரு பாட்டிலாக எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

    வயிறு முட்ட குடித்தார். சிறிது நேரத்தில் வாலிபருக்கு போதை தலைக்கேறியது. இதனால் கடையின் உள்ளேயே குறட்டை விட்டபடி தூங்கினார்.

    காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் மது போதையில் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டனர்.

    அவரது அருகே ரூபாய் நோட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. வாலிபரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சி செய்தனர். அவர் எழுந்திருக்கவில்லை.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை எழுப்பப்படாத பாடுபட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலிபரை மீட்டு ராமையம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கும் அவருக்கு போதை தெளியவில்லை. மதியத்திற்கு மேல் வாலிபருக்கு லேசாக போதை இறங்க ஆரம்பித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். அதன்படி தனது தலையில் முடி இல்லாததால் விக்கு வைத்துக் கொண்டார். ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சினிமா நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக பிரபலங்களுடன் செல்பி போட்டோ எடுத்து போல மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    திருமண ஆன்லைன் வலைதளங்களில் இவரது படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவரை தொடர்பு கொண்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நித்யா இளம் பெண்களை காபி ஷாப் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இளம் பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது கையில் உள்ள வெட்டு காயங்களை காண்பித்தார்.

    இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களது செல்போன் எண்களை வாங்கி நீண்ட நேரம் பேசி மயக்கினார். வாட்ஸ் அப்பில் பெண்களை கவரக்கூடிய வகையில் தகவல்களை அனுப்பினார்.

    இதனை உண்மை என நம்பிய இளம் பெண்கள் நித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளதாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார் .

    ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக இளம் பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். நித்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கச்சி பவுலி போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மீது இதுவரை 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.

    • 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
    • அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது. புஷ்பா படத்துக்காக சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு 2023 இல் வழங்கப்பட்டது.

    சிறந்த படம், சிறந்த இயக்குனர் தேசிய விருதும் புஷ்பா படம் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.

    இதற்கிடையே 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

     

    மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும்  அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசிய சம்பவமும் நிகழ்ந்தது.

    எனவே அல்லு அர்ஜுன் - தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அல்லு அர்ஜுன் படங்களை மாநிலங்களில் ஓட விடமாட்டோம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்,

    இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலீஸ்கரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று தெலுங்கானா அமைச்சர் சீத்தாக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படமான ஜெய் பீம், அதிகார வர்க்கத்தால் பழங்குடியினர் படும் பாடுகளை குறித்தும், அவர்களுக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற்றுத்தர முடியும் என்பது குறித்தும் பேசிய படமாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
    • அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்

    'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுனுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அல்லு அர்ஜுனிடம் கீழ்கண்ட கேள்விகளை போலீசார் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

    1. புஷ்பா - 2 சிறப்பு காட்சிக்கு நீங்கள் வருவதற்கான அனுமதியை காவல்துறை மறுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

    2. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் நீங்கள் சிறப்பு காட்சிக்கு வருவதற்கான முடிவை எடுத்தது யார்?

    3. திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்களா?

    4. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?

    5. தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றுவதற்கு நீங்கள் அனுமதி வாங்கினீர்களா?

    6. தியேட்டருக்கு வெளியே ரசிகர்களுடன் பழக உங்களுக்கு அனுமதி உண்டா?

    கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜுன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜுன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கடாபள்ளி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஐதராபாத் சிக்கடாபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இரண்டாவது முறையாக இன்று ஆஜராகி உள்ளார். அவருடன் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். இதன்பின் நடிகர் அல்லு அர்ஜூனிடம் காவல்துறையினர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






    • அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது.
    • ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், போத் மண்டலத்தை சேர்ந்தவர் ஷேக் தவ்பிக். இவர் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையில் இருந்து நேற்று 2 கோழிக்குஞ்சுகள் வந்தது. 2 கோழிக்குஞ்சுகளும் தற்போது நலமாக உள்ளது. இந்த அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை டாக்டர் ஒருவர் கூறுகையில்:-

    மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறித்துள்ளது என்றார்.

    • அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.
    • மறுமுனையில் மும்பை போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் "டிஜிட்டல் கைது" மோசடியால் ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். பண மோசடி செய்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்ட்டிருப்பதாகவும், இதற்காக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.

    முதலில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு, சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்காக மும்பை கோலாபா சைபர் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

    அதன்பின்னர் போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியிருக்கிறார். 'பண மோசடிக்காக உங்களின் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும், இல்லாவிட்டால் நேரடியாக வந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்னபடி ஸ்கைப் ஆப் டவுன்லோடு செய்து, மறுமுனையில் மும்பை போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

    அப்போது, அந்த நபர் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாக கூறி போலியான வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, சில வங்கிக் கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி உள்ளார். கைது நடவடிக்கைக்கு பயந்த சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு ரூ.11.8 கோடி அனுப்பியிருக்கிறார்.

    இருப்பினும், அந்த நபர்கள் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியபோது, சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.
    • சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நாராயணன் பேட்டை, தன்வாடாவை சேர்ந்தவர் மல்லேஷ். இவரது மாமா கர்ரெப்பா மற்றும் சிலர் தங்களது 600 ஆடுகளை பல்நாடு மாவட்டத்தில் மேய்த்து வந்தனர்.

    நேற்று அதிகாலை புதுக்காலு நெடுஞ்சாலையில் மேம்பாலம் வழியாக ஆடுகளை ஓட்டி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.

    பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ் சக்கரத்தில் சிக்கி 146 ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. சாலை முழுவதும். ஆட்டின் உடல்கள் சிதறியபடி ரத்தம் வழிந்தோடியது. ஆட்டின் உரிமையாளர்கள் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆடுகள் இறந்து விட்டதாகவும், இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது.
    • பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காச்சி குடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது.

    ரெயில் காட்வாலா, ராஜோலி ரெயில் நிலையங்களை கடந்து நேற்று இரவு கடவாலா ரெயில் நிலையத்திற்கு வந்தது நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து ஏறி, இறங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.


    இதனைக் கண்ட பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் ரெயில் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் ரெயில் பெட்டியை ஊழியர்கள் சரி செய்த பிறகு காலதாமதமாக ரெயில் மீண்டும் சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

    • காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ஐதராபாத்:

    புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்லு அர்ஜூன் வீட்டின்மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரசிகர்கள் ஆன்லைனில் அவர்களது கருத்தை அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
    • பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும் வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நேற்று தெலுங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுக்குறித்து நடிகர் அல்லு அர்ஜூ அவரது தரப்பு கருத்தை முன் வைத்தார்.

    இச்சம்பவத்தை குறித்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆன்லைனில் அவர்களது கருத்தை அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்களை வீசி தக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதுதொடர்பாக கிடைத்த முதற்கட்ட தகவலில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

    பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும் வீட்டின் மீது கற்களை வீசியும் மாணவர் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலையிட்டு, பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) 8 பேரை கைது செய்து, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    • வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
    • தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். அவரது வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.

    3 மணி நேரம் கழித்து தனது பிடியிலிருந்து வாலிபர் சிறுமியை விடுவித்தார். சீரழிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றார்.

    வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.

    ஆக்ரோஷத்துடன் வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர்.

    அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். வெளியே இருந்த சிறுமியின் உறவினர்கள் வாலிபரை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டனர்.

    அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்து வாலிபர் உள்ளே இருக்கும்போதே வீட்டுக்கு தீ வைத்தனர். தீ வீடு முழுவதும் பரவியது.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் சிறுமியின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் வாலிபர் வீடு மீது கற்களை வீச தொடங்கினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதனை கண்ட கிராம மக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும் போலீசாரின் 2 வாகனங்களை தாக்கி தீ வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கிராம மக்களை கட்டுப்படுத்தினர். மேலும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீடு மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×