என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
- இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் வரை மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வரிசையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
- அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு ஈரோட்டிலிருந்து போலீசார் வந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பெரியாரை பற்றி நான் பேசுகிறேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டதாக கூறுகிறார்கள். பெரியார் பேசியதை எடுத்து பேசுகிறேன்.
* பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
* பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது.
* தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.
* அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்.
* தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே என்று அவர் கூறினார்.
- ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டம்.
- கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.
கோவை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாதம் கோவை வர உள்ளார். கோவை மாவட்ட பா.ஜ.க. புதிய அலுவலகம் பீளமேட்டில் கட்டப்பட்டு உள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த அலுவலகம் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது.
இதன் திறப்பு விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதற்காக வருகிற 25-ந்தேதி அவர் கோவை வருகை வருகிறார். மறுநாள் (26-ந் தேதி) பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதுதவிர மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
அமித்ஷா பங்கேற்கும் கூட்டங்களில் தமிழக பா.ஜ.க. முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிய உள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறார்.
கோவை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர, மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் பேசுகையில் கோவைக்கு வருகை தரும் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோவை விமான நிலையத்தில் ஜமாப், பஞ்சவாத்தியங்கள் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்க வேண்டும், வழிநெடுக தோரணங்களும், கட்சிக் கொடிகளும் அலங்கார வளைவுகளும் அமைத்து அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளையும் ஒவ்வொரு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது அமித்ஷா வருகை தொடர்பான நிகழ்ச்சிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்படும் என்றனர்.
- எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
- தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?
* எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
* தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
- சென்னை, காட்டாங்குளத்தூரில் மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்கள் நடத்த உள்ளார்கள்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 27-வது தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு தருமையாதீனம் 26-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்கள்.
இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் (தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில்) நடைபெற்றுள்ளன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தருமையாதீன சைவசித்தாந்த மாலைநேரக்கல்லூரி தொடங்கப்பெற்று சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது 27-வது குருமகாச ன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை நட்சத்திர குருமணிகளும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனமும் இணைந்து 6-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டினை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் வருகிற மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்களில் நடத்த உள்ளார்கள்.
சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள் எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் குருமகாசன்னிதானங்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட் டிற்கான சிறப்பு மலர் ஒன்றும், ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கோவையாகவும், 10-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
இம்மாநாட்டினை முன்னிட்டு முதற்கட்டமாக சிறப்பு மலர்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என 3 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம்.
- ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
ஏற்காடு:
ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். தாவரவியல் பூங்காவில் டேலியா, பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு ஆகிய மலர் விதைகள் நூற்றுக்கு மேற்பட்ட தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் மட்டும் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதனால் தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.
எனவே கோடை விழா தொடங்கும்போது, நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63, 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
- தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது.
- மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தியில் ரிலீசானது. அப்போ மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
நீங்கள் சொன்னீர்களா? தமிழில் மட்டும் தான் என் படம் ரிலீசாகும் என்று.. நான் தமிழன்.. தமிழை போற்றுபவன்.. தெலுங்கில் ரிலீஸ் செய்யக்கூடாது. ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லையே.
பலமொழிக்கொள்கை உங்களுக்கு தேவைப்படுவதைப்போல குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும்.
இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது என்று கூறினார்.
- கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்.
- மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்
அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை
இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?
இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?
பாராளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
- குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?
படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.
படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.
சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?
இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.
வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.
- இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
- சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவரை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும், அரசியல் தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிராக சீமான் மீது தமிழ் நாடு முழுக்க பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராக ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமான் விசாரணைக்கு ஆஜராக கோரி நேரில் சம்மன் வழங்கினர். பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கள் தொடர்பான சீமான் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






