என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு 1000 பேருக்கு 6 மாத உறைவிடப்பயிற்சி தரப்படும்.
மகளிர் வேலைவாய்ப்பை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சையில் ரூ.120 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
- கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
சென்னை:
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் எப்போது என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த 2-ந்தேதி 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவரது கட்சியை பதிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விஜய் கட்சி தொடங்கியதால் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பாரா? கூட்டணி அமைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அதற்கும் தனது அறிக்கையின் மூலம் விடை சொன்னார். அதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் கட்சிக்கான கொடி, சின்னத்தை தயார் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். சின்னத்தை பொறுத்தவரை பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதற்கு ஏற்ற வகையில் சின்னத்தை தேர்வு செய்யும்படி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே நான்கைந்து சின்னங்கள் பரிசீலனையில் உள்ளது. மேலும் புதிய சின்னங்களையும் தேட தொடங்கி இருக்கிறார்கள்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. தலைமையின் அழைப்பை ஏற்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் நேற்று மாலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
இன்று காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி வருமாறு:-
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.
கூட்டத்தில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது, மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட தலைவர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
- நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
- சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம்" எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள். எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்தர சிகிச்சைப்பிரிவு, ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி. வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல். 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மக்கள்தொகை மற்றும் அவற்றுக்கான பெருகிவரும் தேவைகளை நிறைவுசெய்ய சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்புக் குழாய்கள், கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல்திறன் போதுமானதாக இல்லை. எனவே, வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பதவிகளுக்கான கட்டமைப்புகள், படப்பிடிப்பிற்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
- பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.
நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.
அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்
பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.
பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.
அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது.
- நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்குமான சமநீதி, சமநிதியை வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அறிவிப்பும் ஈரமுள்ளதாக இதயமுள்ளதாக இருக்கிறது.
7 பெரும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும்போது இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் காலம் விரைவில் ஏற்படும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.
நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு... நாளை முதல் அது நனவாக வேண்டும்.
அனைத்து துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.
- ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
நகராட்சி நீர்வளம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம், மரக்காணம், நாகை, ராமேசுவரம் உள்பட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். பிராட்வே பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்.
பழங்குடியினரை மேம்படுத்த ரூ.1000 கோடியில் தொல்குடி என்ற திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரம்பலூர், எறையூர், பாடலூரில் சிப்காட் வளாகத்திற்கு தேவையான நீரை வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
1000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும்.
கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி உள் நோக்கு இல்லம் அமைக்கப்படும்.
தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
உள்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த பெயர் மாற்றம் செய்யப்படும். நீதியரசர் சந்துரு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த துறையில் சீர்திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் பிரப்பன் வலசையில் அமைக்கப்படும்.
இளைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனம் என போட்டிகள் நடத்தப்படும். 500 புதிய மின்சார பஸ்கள் வாங்கப்படும்.
நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, பூங்கா, மைதானத்துடன் இல்லம் அமைக்கப்படும்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்த்தப்படும்.
தமிழ்நாடு சந்தித்த பேரிடர்களுக்கான நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதி நிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரூ.665 கோடியில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
தஞ்சை செங்கிப்பட்டி அருகே ரூ.120 கோடியில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
சிப்காட் பூங்காவில் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் ஆலை அமைக்கப்படும்.
ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்டமசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.
வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
மதி இறுக்கம் உடையோருக்கான உயர் திறன் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும். பேரிடர்களால் நிதி நெருக்கடியை சந்தித்த போதிலும் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி அளித்து உள்ளோம்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.
- மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கனவு பட்ஜெட் கானல் நீர்... மக்களுக்கு பயன் தராது. நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் உள்ளது.
* வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
* தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு.
* தமிழகத்தின் கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
* கடன் பெறுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* வரவு- செலவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
* பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.
* மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
* இருக்கும் நிதியை வைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
புதுமைப்பெண் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.7590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.
பணிபுரியும் மகளிருக்காக கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும். 15 ஆயிரம் திறன்மிக்க வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
- தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.
இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
- கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது.
- தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆறு உள்ளது. மழைக்காலங்களில் பூண்டி ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் உபரிநீர் இந்த ஆறு வழியாக வந்து மணலி புதுநகரை கடந்து எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.
இந்நிலையில் புது நாப்பாளையத்தில் இருந்து இடையஞ்சாவடி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு கொசஸ்தலை அற்றின் இருபுறமும் ஆங்காங்கே கரைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெருமழை பெய்யும் பட்சத்தில் ஆற்றுநீர் உடைந்த கரையின் வழியாக வெளியேறி மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரையை இருபுறமும் உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பெருமழை பெய்வதற்கு முன்பு கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பெருமழை பெய்யும் போது உபரி நீர் மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளில் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்பும், பொதுமக்களுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்க அரசு மிகவும் சிரமப்பட வேண்டிய திருந்தது. எனவே தற்போது சேதமடைந்துள்ள கொசஸ்த லை ஆற்றின் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் மீண்டும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது.
- விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடங்கியது. தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம்கலை, துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.
முதல் நாளான இன்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் 20 பேர் விருப்ப மனுக்கள் வாங்க வந்திருந்தனர். பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் ஒவ்வொருவராக விருப்ப படிவத்தினை ரூ.2 ஆயிரம் செலுத்தி வாங்கிச் சென்றனர்.
விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.






