search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்: சிப்காட்டில் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம்
    X

    தமிழக பட்ஜெட்: சிப்காட்டில் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம்

    • சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு 1000 பேருக்கு 6 மாத உறைவிடப்பயிற்சி தரப்படும்.

    மகளிர் வேலைவாய்ப்பை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சையில் ரூ.120 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×