என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
- நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார்.
- ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரெயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரெயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரெயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ரெயில்களில் பட்டாசு உள்பட தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரெயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது.
எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்றார்கள்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- திருமலைவாசன் நகர், அசோக் நகர், ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஆவடி : திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்புழில் நகர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.
திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆன்டணி நகர், பொத்தூர் இன்டஸ்ட்ரீஸ்.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் அதிகபட்சமாக 26 புள்ளிகள் எடுத்தார். இதன்மூலம் தமிழ் தலைவாஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது.
- தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது.
- தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வெறும் 2,708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை திமுக அரசு ஏற்படுத்தியதாக விளம்பரம் தேடிக்கொண்டாலும், அந்தக் கல்லூரிகளுக்கும், புதிய மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்கவில்லை.
அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும், அதனால் 25% இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும்தான் அரசு கல்லூரிகளின் அவலநிலைக்கு சான்று ஆகும்.
உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதன் விளைவாகத்தான் இப்போது 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக் கூடும்.
2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் தாமதப்படுத்திய பிறகு கடந்த ஆண்டில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி அந்த நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதை விடக் குறைவாக 2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பதன் மூலம் உயர்கல்விக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது. உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதில் பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- பிரேமலதா தாயார் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரேமலதா தாயார் மறைவுக்கு முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக பொதுச்செயலாளர் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அம்சவேணி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

- கடந்த 28ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
- பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளன.
குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகின. உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும்,
முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறித்து அதற்கான தேர்வு நடைபெற்றது.
- 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெறும் வீரர்களுக்க 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு.
2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது "முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என அறிவித்தார்.
- நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
- சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
- டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது காரில் வீடு திரும்பினார். இதனிடையே அவரிடம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எனக்கு ஓய்வே கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.
- இன்ஸ்டாகிராம் மூலும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை.
திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகி வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
அந்த மாணவியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா? என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.
இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் கூறி உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த ஜோஸ் மரியராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடிவருகின்றனர்.






