என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும்.
    • உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தவெக முடங்கிவிட்டது. மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகிகள் ஓடி விட்டனர். பதுங்கிவிட்டனர் என்றெல்லாம் பேச்சு.

    யார் ஓடியது. உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் கருணாநிதி கைது செய்யும்போது யார் ஓடியது? சொந்த மகனே ஓடினார். திமுகவிற்கு வரலாறு தெரியுமா?

    வரலாற்று பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். தவெகவிற்கு வரலாறு தெரியாமல் இல்லை. எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும், உங்களின் சூழ்ச்சிகளை உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியவும் தெரியும்.

    என்ன செய்துவிட்டோம்.. மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் கட்சி உருவாக்கி, மக்களிடம் போய் பிரசாரம் செய்தாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பேசினோம்.

    அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும். மக்களின் ஒரே நம்பிக்கை தலைவர் விஜய்.

    கரூர் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று அரசுக்கு தெரியாது என்றால் உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

    கரூர் ஒரு மோசமான இடம் என்றும், அங்கு இருப்பவர் செந்தில் பாலாஜி ஒரு ரவுடி என்று தெரியாதா? என எங்களுக்கு அட்வைஸ் செய்கிறது திமுகவின் வாடகை வாய்கள். இன்னும் 6 மாதங்களில் தெரியும் யார் ரவுடி.. யார் அதிகாரம் பண்றது என்று தெரியும்.

    புது அரசியலை உருவாக்க வந்திருக்கிறோம். ஊழல் குடும்பத்தை அழிக்க வந்திருக்கிறோம்.

    கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் ஆக்டிங்கை பார்த்திருப்பீர்கள். மறுநாள் காளையில் துபாயில் இருந்து ஒருவர் வந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ தமிழ்நாட்டிற்கு தியாகம் செய்வதற்காக துபாய்க்கு உண்ணாவிரதம் செய்ய போனதுமாதிரியும், அங்கிருந்து மக்களுக்காக ஓடி வந்தது போலவும்.. வந்து ஒரு மணி நேரம் கூட மருத்துவமனையில் அவர் இல்லை.

    நமக்க அதிகாரம் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கடைசி நிமிடம் வரை இருந்திருப்போம். ஒரு மணி நேரம் விசிட்டிற்கு பிறகு பேட்டியில், தவெக தலைவரை கேள்வி கேளுங்கள் என்கிறார்.

    உங்கள் பொதுச் செயலாளர்கள் தூங்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள். அதற்கு எங்கள் பொதுச் செயலாளர்கள் எவ்வளவோ மேல்.

    உங்கள் பொதுச் செயலாளரை (அமைச்சர் துரைமுருகன்) முதலில் எழுந்து ஒரு வாக்கிங் செய்ய சொல்லுங்கள். சட்டசபையில் உட்கார்ந்துக் கொண்டு கிண்டல், கேலி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவை நாவடக்கம் இல்லை அவருக்கு.

    எப்போது பார்த்தாலும் சட்டசைபயில் ஐயா உதயநிதி வாழ்க.. உதயநிதி வாழ்க என்கிறார். உதயநிதி என்ன தியாகியா? இதுபோன்று கேள்வி கேட்டால் போதும் என் மீது ஒரு எப்ஐஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தெற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • இளைஞர் புரட்சி 2026-ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது.

    கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.

    தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்?

    இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.

    சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?

    நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுப்போம் என்கிறார் துரைமுருகன். தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

    இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது.
    • மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என தி.மு.க. அறிக்கையை இப்போதே தயாரித்து வைத்து கொள்ளலாம்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேசினாரோ?

    * முதலமைச்சர் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது.

    * 1972-க்குப் பிறகு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் தி.மு.க. தலைமை இப்படி மாறி விட்டது.

    * அரசின் விசாரணை மீது சந்தேகம் என உச்சநீதிமன்றம் கூறினார் அதற்கு என்ன அர்த்தம்?

    * தி.மு.க. அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது.

    * மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என தி.மு.க. அறிக்கையை இப்போதே தயாரித்து வைத்து கொள்ளலாம்.

    * இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருக்கப் போகிறார்கள்.

    * தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானதுதான்.

    * 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையில் தான் போட்டி.

    * தி.மு.க. - த.வெ.க. போட்டி என்பது மீண்டும் வலிமை அடையப் போகிறது.

    * சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெறியப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.
    • தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னுடைய தோழர், தோழிகள், தமிழக மக்களுக்கு வணக்கம்.

    * குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தோம்.

    * அமைதி காத்த நேரத்தில் வன்ம அரசியல், அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் நம் மீது கூறப்பட்டன.

    * கரூர் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் நம் மீது வன்மத்தை கக்கி உள்ளார்.

    * சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரைக்கு நாகரிக பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.

    * அரசியல் செய்யவில்லை அரசியல் செய்யவில்லை எனக்கூறி முதலமைச்சர் சட்டசபையில் வன்மத்தை கக்கி உள்ளார்.

    * பிரசாரத்திற்கான இடத்தேர்வு குறித்த கடைசி வரை இழுத்தடித்து வந்தார்கள்.

    * வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம்.

    * அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்ற குறுகிய மனம் கொண்ட முதல்வரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

    * பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.

    * இந்தியாவில் யாருக்கும் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ஏன்?

    * 50 ஆண்டுகாலமாக பொதுவாழ்வில் உள்ள முதலமைச்சர் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்.

    * முதல்வர் கூறியது வடிகட்டிய பொய் என நான் கூறவில்லை. உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

    * கரூர் சம்பவத்திற்கு பின் அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    * தனி நபர் ஆணையத்தை தலையில் குட்டு வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    * தனி நபர் ஆணையத்தை மறந்து, அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    * தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.

    * பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர்.

    * எஸ்.ஐ.டி. அமைத்த தனி நீதிபதியின் உத்தரவை கொண்டாடினார்கள்.

    * உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை பார்த்து வாயடைத்துபோனார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களின் ஆதரவை கழகத்திற்கு தர ஒருங்கிணைக்க வேண்டிய பணிகளை இளைஞர் அணி தம்பிமார்கள் செய்வார்கள்.
    • நாம் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து நம் பிரசாரத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் காட்பாடி தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தி.மு.க. நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார்.

    காட்பாடி ஒன்றியத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர், "தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினரை தி.மு.க.வில் சேர்ப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு இளைஞர் அணியில் கிளை, வட்டம், பாகம் வாரியாக சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வந்து கொண்டு இருக்கிறது. சில மாவட்டங்களின் அறிவிப்பு வந்து விட்டது. மீதமுள்ள மாவட்டங்களிலும் நிர்வாகிகளில் அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.

    இளைஞர் அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவர்களின் பகுதியில் உள்ள இளைஞர்களை அணுகி கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, இளைஞர்களின் ஆதரவை கழகத்திற்கு தர ஒருங்கிணைக்க வேண்டிய பணிகளை இளைஞர் அணி தம்பிமார்கள் செய்வார்கள்.

    அதையெல்லாம் இங்கு வந்திருக்கின்ற ஒன்றிய கழக செயலாளர்கள், கழகத்தின் நிர்வாகிகளாகிய நீங்கள் இளைஞர் அணியை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன. இப்போதே உங்கள் களப்பணியைத் தொடங்குங்கள். நம்முடைய தலைவர் 200 தொகுதிகள் வெற்றி பெறி வேண்டும் என்று இலக்கு கொடுத்து உள்ளார். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்று சொல்லி இருக்கிறார். அது பத்தாது. நாம் அடுத்த 5 மாதங்கள் சிறப்பாக பணியாற்றினோம் என்றால், நமக்குள் இருக்கின்ற மனகசப்புகளை மறந்து, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று பணியாற்றினோம் என்றால் 200 இல்லை 200க்கும் அதிகமான தொகுதிகளில் நம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்கான தொடக்கமாக இந்த காட்பாடி தொகுதியின் வெற்றியை நீங்கள் அமைத்துக்காட்ட வேண்டும். கழகம் 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், தொடர்ந்து 2-வது முறையாக நம் தலைவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால் நாம் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து நம் பிரசாரத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
    • பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர். 

    • கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
    • வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.

    இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

    • பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோவை விவகாரத்தில் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * 6 கோடி வாக்காளர்களுக்கு மேல் உள்ள தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி மேற்கொள்வது எப்படி? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * டெல்டா மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * பொது நிகழ்ச்சிகளில் கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * விஜய் பாதுகாப்பில் தமிழக அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    * விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 82 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபடுவது பற்றியும், வாக்குச்சாவடி முகவர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் பற்றியும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதற்காக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியினரை பார்த்து கையசைத்தார். பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 82 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    • முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

    த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

    கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.

    நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர்.

    பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

    3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த த.வெ.க. உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பொதுக்குழு கூட்டம் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்கள் தளபதி விஜயின் உரையைக் கேட்போம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். 2026 தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சட்டசபை தேர்தல்களுக்கான கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×