என் மலர்
நீங்கள் தேடியது "eelam tamil people"
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
- வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்குமான இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.
இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழகளின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka






