search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president Maithripala Sirisena"

    டெல்லியில் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    இந்நிலையில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்தார். 

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார்.

    இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்யமாட்டேன் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLanka #SriLankaParliament #Srilanka #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.

    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன. 



    இதற்கிடையே, நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 7 பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்தது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க மாட்டேன். வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை நியமிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார் #SriLanka #SriLankaParliament #Srilanka #RanilWickremesinghe
    இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #SriLankaSupremeCourt #SriLankaparliamentsacking
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

    பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலம்மிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் நேற்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.

    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தன.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நலின் பெரேரா தலைமையிலான அமர்வின் இன்று விசாரணைக்கு வந்தது. கொழும்பு நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டை சுற்றிலும் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கோர்ட்டின் தீர்ப்பை அறிய ஏராளமான பத்திரிகையாளர்களும் குவிந்தனர்.



    இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பாராளுமன்றம் கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவின் நடவடிக்கை செல்லாது எனவும்,  பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்தும், ஜனவரி 5-ந் தேதி பாரளுமன்ற தேர்தல் நடத்த தடை விதித்தும் தீர்ப்பளித்தனர். #SriLankaSupremeCourt #SriLankaparliamentsacking
    நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். 

    இதற்கிடையே, சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று மைத்ரிபால சிறிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன் என்பது குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

    விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த பின்னர் நாட்டு மக்களிடையே முதல்முறையாக உரையாற்றிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, ‘சாமான்ய மக்களின் எண்ணங்களை பற்றி கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் மட்டும் லாபம் அடையும் வகையில் ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    நல்லாட்சி என்னும் தத்துவத்தையே முழுமையாக அழித்துவிட்ட விக்ரமசிங்கேவின் ஆட்சியில் ஊழலும், வீண் செலவுகளும் பெருகி விட்டது. கூட்டு பொறுப்பு என்னும் அரசின் செயல்பாட்டை கேலிக்கூத்து ஆக்கும் வகையில் அனைத்து முடிவுகளையும் அவர் தன்னிச்சையாக எடுக்க தொடங்கி விட்டார்.

    அவருக்கும் எனக்குமான கொள்கை முரண்பாடுகள் நாளுக்குநாள் மிகப்பெரியதாக விரிவடைந்து கொண்டே போனது. இந்த கொள்கை முரண்பாடுகளும், எங்கள் இருவருக்கரும் இடையிலான கலாச்சார முரண்பாடுகளும் நமது நாட்டின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

    மேலும், என்னையும் முன்னாள் மந்திரி கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல நடந்த சதித்திட்டம் தொடர்பான தகவலின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் விக்கிரமசிங்கே தவறி விட்டார் என்றும் மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை மக்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    கொலும்பு:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்குமான இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழகளின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இலங்கையின் நிரந்தரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் என அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    கொலும்பு:

    இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்‌ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.

    2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது,  இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.  அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    ‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.

    அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee  #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.


    இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மந்திரி விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena #SrilankanMinister
    ×