பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது

கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.
பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com