என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது - சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம்
    X

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது - சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம்

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 82 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபடுவது பற்றியும், வாக்குச்சாவடி முகவர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் பற்றியும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதற்காக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியினரை பார்த்து கையசைத்தார். பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 82 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

    Next Story
    ×