என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி த.வெ.க. பொதுக்குழுவில் தீர்மானம்
- பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோவை விவகாரத்தில் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 6 கோடி வாக்காளர்களுக்கு மேல் உள்ள தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி மேற்கொள்வது எப்படி? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* டெல்டா மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பொது நிகழ்ச்சிகளில் கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பாதுகாப்பில் தமிழக அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






