என் மலர்
புதுச்சேரி
- காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
- தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம்சதீஷ்(வயது28) தேடி வந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது குறித்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்யும்படி, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காரைக்காலில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகள், சில்லறை கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்தாலும், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்யும் நபர்களை பிடிக்கவில்லை.
இந்நிலையில், காரைக்காலில் உள்ள பல சில்லறை நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபராக, நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரை காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சதீஷ்க்கு, அவரது சித்தப்பா சுரேஷ்(48) என்பவர் கஞ்சா வழங்கிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார், கம்பம் விரைந்து சென்று, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 1300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இருவரும் தமிழகம் மற்றும் காரைக்காலைச்சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டு:
ஆரோவில் உதய தினத்தையொட்டி நடந்த போன் பயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர்.
புதுவை அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மீரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இன்று ஆரோவில் 55-ம் ஆண்டு உதய தினத்தையொட்டி அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
- கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது.
புதுச்சேரி:
சென்னை, எண்ணூர் துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் டெலிவரி செய்வதில், இடப்பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.
இதை சரி செய்யும் விதமாக அங்கிருந்து, 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த பணிக்காக குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின், 106 கண்டெய்னர்களை, ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதுவைக்கு கடந்த 11-ம் தேதி வந்தது.
கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், சென்னையிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர, இன்று சென்னைக்கு செல்கிறது.
இந்த கப்பல் வாரத்தில் 2 நாட்கள் சென்னையில் இருந்து கண்டெய்னர்களை கொண்டு வந்து டெலிவரி செய்வது மற்றும் புதுவையில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.
அதனையொட்டி, கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது. இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.
- நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
- சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- திரு.பட்டினம் பட்டினச்சேரி ரயில் பாதை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திரு. பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
- அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்ததுஇ.தற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
- பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்
புதுச்சேரி:
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, துறைக்கு தொடர்பில்லாதவர் பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் செயல்பாடுகள் திருப்தியி ல்லாததால் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும்.காலியாக உள்ள கண்காணிப்புப் பொறி யாளர், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வரைவாளர் பதவிகளை தகுதி வாய்ந்த வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், முதிர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
- கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
- கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:
புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 41). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு தானம்பாளையம் பகுதியில் புதியமனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.
இவரது சொந்த ஊரான நல்லவாடு பகுதியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வியாபாரம் முடிந்து தினமும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் திருவிழாவுக்கு சென்று வந்தார்.
அதுபோல் நேற்று கோவிலில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றதால் மாலை 6.00 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நல்லவாடு கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமியை தரிசித்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுகிட்டார்.
2 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி புகார் செய்தார். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக் குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி தூவி விட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
புதிய மனைப்பிரிவில் வீடு இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்
தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.
- 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். .
- முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். வீட்டை ஒட்டி குடியிருக்கும் முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.
இது குறித்து, அப்பெண், கணவரிடம் நடந்ததை கூறினார். பெண்ணின் கணவர் நண்பர்களின் உதவியுடன் முருகேசனின் செல்போனில் இருந்து விடியோவை கைப்பற்றினார். விடியோ எடுத்த முருகேசனை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
- பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.
புதுச்சேரி:
அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.
சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.
அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.
பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.
திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.
பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
- விஜயசென் (வயது 22), அவரது நண்பர்பைசல் ரஹ்மான் (19) கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸாருக்கு தகவல் வந்தது,
- 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த விஜயசென் (வயது 22), அவரது நண்பர் அம்மன் கோவில்பத்து, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பைசல் ரஹ்மான் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார்.
- சமீப காலமாக நடராஜன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.
சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.






