என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
    • புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.

    ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.

    மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    • பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அரசு விளையாட்டு அரங்கம் அருகே பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த 7ந் தேதி நள்ளிரவு இந்த பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அன்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகர போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், காரைக்கால் நகராட்சி பில் கலெக்டர் ஜோசப் என்பவர் நேற்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 7ந் தேதி இரவு விழுப்புரம் வானூர் பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார். அவர்தான் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்பிலான பஸ் நிறுத்தை இடித்திருக்கவேண்டும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவி சுவிதா தலைமை தாங்கினார். செயலாளர் வசந்தி, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கௌரவ தலைவர் பிரேமதாசன், காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏழை எளிய சுய உதவிக்கு குழு உறுப்பினர்களின் வட்டி பணத்தை எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால், அது கூட்டமைப்பில் பிரச்னையை உருவாக்கி, நாளடைவில் பஞ்சாயத்து கூட்டமைப்பே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவே, முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் சசிகலா நன்றி கூறினார்.

    • ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • இவரின் மனைவி , காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எடையார் பாளையம் மாரியம்மன் கோவில் வடக்குவீதியைச்சேர்ந்தவர் ராஜு (வயது 73). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது புதுச்சேரி சென்று வரும் இவர், மாதம், மாதம் தனது மனைவி கோவிந்தம்மாளுக்கு சம்பளம் பணத்தை அனுப்பி வந்துள்ளார்.   கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சென்று விட்டு, காரைக்கா லுக்கு வேலைக்கு செல்வ தாக கூறி காரைக்கால் வந்துள்ளார்.  கடந்த 3-ந் தேதி, மனை விக்கு போன் செய்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அதற்கு வீட்டுக்கு வரும்படி மனைவி கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த 5-ந் தேதி ஓட்டலில் இருந்து காரைக்கால் நகர் பகுதிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜு, அன்று இரவு வரை ஓட்டலுக்கு திரும்பவில்லையென கூறப்படுகிறது   ஓட்டல் உரிமையாளர் மூர்த்தி, கோவிந்தம்மாளுக்கு போன் செய்து, ராஜு, புதுச்சேரி வந்தாரா என கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் புதுச்சேரி வரவில்லையென கூறியுள்ளார். பின்னர், 7-ந் தேதி கோவிந்தம்மாள் காரைக்கால் வந்து பல இடங்களில் தேடியுள்ளார். ராஜு கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.  இது குறித்து, கோட்டுச்சேரி போலீசில், ராஜுவை தேடி கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

    • உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
    • தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது55) வக்கீல். இவரது தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான 22 ஆயிரம் சதுர அடி நிலம் புதுவையில் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ளது.

    இந்த நிலத்தை, உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.

    இதுகுறித்து குப்புலட்சுமி நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். நில அபகரிப்பு பிரிவு தலைவரான தாசில்தார் ராஜேஷ் கண்ணன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், குப்புலட்சுமியின் நிலத்தை, குணாதிலீபன் ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தார்.

    அதன்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி , நிலத்தை 15 நாளில் உரியவரிடம் ஒப்படைக்குமாறு குணாதிலீபனுக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்தார்.

    ஆனால் நிலத்தை ஒப்படைக்காததால், தாசில் தார் ராஜேஷ்கண்ணன் போலீஸ் பாதுகாப்புடன், குணாதிலீபன் அமைத்திருந்த இரும்பு வேலியை அகற்றி, நிலத்தை மீட்டு குப்புலட்சுமியிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

    தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
    • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
    • , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழரசன் (வயது 63).தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார் தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது,
    • தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலம்பாள் நகரைச்சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.  தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தற்போது உடல்நிலை சரியிலாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியா ளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உள்ளது.

    இந்நிலையில், அனிதா கடைக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறினார்.விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனிதா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர்.
    • சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக, வழக்கத்தைவிட கூடுதலாக கஞ்சா விற்பனை நடந்தவண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறு, சிறு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்துவந்தனர்.

    ஆனால், இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர். இந்நிலையில், காரைக்காலை அடுத்த நிரவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற விஷ்ணு பிரியனை கடந்த வாரம் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது நண்பர் ரஜினி சக்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த கோழி என்ற ரஞ்சித்(வயது29) , காரைக்கால் லத்தீப் நகரை சேர்ந்த மொஹம்மத் அபிரிடியுடன்(23) இணைந்து, சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், தரங்கம்பாடி சென்று, அங்கு பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிமிடருந்து ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார்.

    சம்பவத்தன்று சபாபதி வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது தி.மு.க. நிர்வாகியான வில்லியனூரை சேர்ந்த பூக்கடை சண்முகம் சபாபதிக்கு சால்வை அணிவித்ததாக கூறபடுகிறது.

    மேலும் சால்வை போடும் போட்டாவை சமூக வலைதளங்களிலும் பூக்கடை சண்முகம் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

    இதனை கண்ட சம்பத் தனது தந்தையை பூக்கடை சண்முகம் அவமானப்படுத்தி விட்டதாக கருதினார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத் இதனை தட்டிக்கேட்க செங்கதிர்செல்வனும் பூக்கடை சண்முகம் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் பூக்கடை சண்முகத்துக்கும், சம்பத்துக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் பூக்கடை சண்முகம் தனது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்து போய் செங்கதிர்செல்வன் கீழே விழுந்தார். அப்போது செங்கதிர் செல்வனையும், சம்பத்தையும் கொலை செய்து விடுவதாக பூக்கடை சண்முகம் மிரட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து செங்கதிர் செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • மாசிமக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
    • நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.

    வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.

    ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.

    அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

    நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.

    அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.

    அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.

    பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.

    நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.

    இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

    இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

    ×