search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா
    X

    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. 

    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பத் திருவிழா

    • மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரமோற்சவ விழாவில் தேர்த்திருவிழா, தெப்ப த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோத்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 26ந்தேதி நடைபெற்றது. தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடை பெற்றது. தொடர்ந்து, நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரிய தலைவர் வக்கில் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி, உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறவுள்ளது.

    Next Story
    ×