என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோடை வெப்பம் அதிகரிப்பு- புதுவையில் 20ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
    X

    கோடை வெப்பம் அதிகரிப்பு- புதுவையில் 20ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

    • கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
    • ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

    வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

    கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    Next Story
    ×