என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • நான் உங்களை பெரிதும் விரும்புகின்ற காரணத்தால் உங்களை குடும்பத்துடன் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.
    • உங்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

    மும்பை:

    மும்பை சென்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மும்பையை சேர்ந்த வேணுகோபால் அய்யங்கார் என்பவர் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதில் மும்பைக்கு வருகை தந்து உள்ள தங்களை வரவேற்கிறேன். என்னுடைய மகள் உங்களை சந்திக்க விரும்புகிறாள். எனவே தயவு கூர்ந்து நீங்கள் தங்கி இருக்கும் கிராண்ட் ஹையாத் ஓட்டலில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

    இது தொடர்பாக அவரது மகள் டுவிட்டரில் குரல் வடிவில் பதிவிட்டது வருமாறு:-

    நான் உங்களை பெரிதும் விரும்புகின்ற காரணத்தால் உங்களை குடும்பத்துடன் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். இந்த தருணத்தில் நீங்கள் மும்பை வருவதால் அதுவும் எனக்கு நல் வாய்ப்பாக அமைந்து விட்டது. என்னுடைய பெற்றோரும், தாத்தாவும் உங்களை பெரிதும் விரும்புவார்கள். உங்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தங்கி இருந்த இடத்திற்கு அவர்களை வரவழைத்து சந்தித்து பேசி, அச்சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    • பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
    • மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    "இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு "இந்தியா" கூட்டணி கட்சி தலைவர்கள் கலைந்துள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்களிடம் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதையே மும்பை ஆலோசனை கூட்டம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு மும்பை கூட்டத்தின் முடிவுகள் மகிழ்ச்சி தருவதற்கு பதில் ஏமாற்றத்தையே அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேசினால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு விடும் என்று கருதி அதை சற்று தள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே மிக எளிதில் தொகுதி பங்கீடு செய்ய முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மும்பை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-

    * பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுணர்வுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும்.

    * நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

    * "ஒன்றாக இணைவோம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்ற கருத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுதான் இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். அவர்தான் இந்தியா கூட்டணி தொடர்பாக இனி முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த குழு தவிர 19 பேர் கொண்ட பிரசார குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 பேர் கொண்ட சமூக வலைத்தள குழு, 19 பேர் கொண்ட ஊடக குழு, 11 பேர் கொண்ட ஆய்வு குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த 5 குழுக்கள்தான் இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது. இதில் முதன்மையான ஒருங்கிணைப்பு குழு விரைவில் கூட இருக்கிறது. அவர்களின் வழிகாட்டுதல் பேரில்தான் ஒரு மாதத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. சரத்பவார் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு இதை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கை விளக்க குறிப்புகளை அக்டோபர் 2-ந்தேதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த குறைந்தபட்ச பொது செயல்கொள்கை திட்ட அறிவிப்புகளை டெல்லியில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி நினைவிடத்தில் வெளியிடவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி ஒருவரை தேர்வு செய்தால் அவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பாரதிய ஜனதா திசை திருப்பி விடும் என்ற பயத்தில் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யாமல் தவிர்த்து உள்ளனர்.

    அதுபோல இந்தியா கூட்டணிக்கு தனி லோகோ ஒன்றை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த லோகாவை பார்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கட்சி தேர்தல் சின்னத்தை பாதிக்கும் வகையில் கூட்டணியின் லோகோ அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்தியா கூட்டணிக்காக தயாரித்த லோகோ வெளியீடு கைவிடப்பட்டது.

    மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மும்பை கூட்டத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

    கூட்டத்தில் அவர் மற்ற தலைவர்களிடம் பேசுகையில், "நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அவர்கள் தான் கூட்டத்தில் அதிக நேரம் பேசி உள்ளனர். இதனால் பிரயோஜனமும் கிடையாது" என்று அதிருப்தியை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

    மம்தா பானர்ஜியை போன்று கெஜ்ரிவாலும் அதிருப்தி தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இத்தகைய சிக்கலை தீர்ப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

    • ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
    • கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

    மும்பை:

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார்.

    கடந்த மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

    மத்திய புலனாய்வு முகமையின் முந்தைய 2 சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்ற பிறகு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

    இக்கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திட்ட கமிட்டியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, பிரசார கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஊடகங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    "பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம்" என சந்திப்பிற்கு பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    • நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார்.
    • நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,

    "இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். இந்திய யூனியனை பாதுகாக்க உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியா கூட்டணி பாட்னாவில் சந்தித்த போது வெறும் 19 கட்சிகள் தான் இணைந்திருந்தன. பிறகு பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கூட்டணி 26 ஆக அதிகரித்தது. தற்போது மும்பை சந்திப்பில் இது 28 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியா கூட்டணி உறுதியாக உருமாறி வருவதை அனைத்து செய்தியாளர்களும் நன்றாகவே அறிவர்."

    "நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் புகார் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி பிரபலம் அடைந்து வரும் நிலையில், மோடி அரசு சமீப காலங்களில் அவ பெயர் அதிகரித்து வருகிறது. நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை. இது நாட்டை காப்பாற்றுவதற்கும், நாட்டில் உள்ள 1.4 பில்லியன் குடிமக்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது."

    "நமது கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இந்த சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக இருந்ததோடு, திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து இருக்கிறது. ஆதரவும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை அறிவித்தது
    • சமூக வலைதள பணிக்குழு, பிரச்சார கமிட்டி, ஊடக பணிக்குழு, தேர்தல் ஆராய்ச்சி பணிக்குழு அமைக்கப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமல் இருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இந்த கூட்டணி அறிவித்துள்ளது.

    அதே போன்று கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருந்து 11-பேர் அடங்கிய சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவும், 18-பேர் அடங்கிய பிரச்சார கமிட்டியும், 16-பேர் கொண்ட ஊடக பணிக்குழுவும், 10-பேர் கொண்ட தேர்தல் திட்டங்களுக்கான ஆராய்ச்சி பணிக்குழுவும் அமைத்துள்ளது.

    இவையனைத்திலும், மேலும் ஒருவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பின்னர் சேர்க்கப்படுவார் என எதிர்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.

    • கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
    • பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க பற்றிய பகுதிகளை நீக்க முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இடம் பெற்று இருந்த கம்யூனிஸ்டு கட்சி வரலாறு மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் வரலாற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் சில மாநில கட்சிகளின் வரலாற்றை சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதுகலை வரலாறு பாடத்தின் 4-வது செமஸ்டரில் இந்த பாடத்திட்டங்கள் இடம் பெற உள்ளன. இந்த நிலையில் கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க பற்றிய பாடப்பகுதிகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இக்கூட்டணியின் இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடைபெற்றது
    • கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் மக்களவை தேர்தலை சந்திப்போம்

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமலிருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இக்கூட்டணி அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி ஆகியோரை உள்ளடக்கிய 13-பேர் கொண்ட குழு ஒருங்கிணைக்கும் பணியை கவனிக்கும்.

    "வேற்றுமைகளை மறந்து மக்களவை தேர்தலுக்காக ஒன்றாக பணியாற்ற உறுதியெடுத்துள்ளோம். நாடு முழுவதும் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்த உள்ளோம்," என்றும் எதிர்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.

    • ராகுல்காந்தி ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளார்.
    • காலை 8.35 மணிக்கு கண் சிகிச்சை மையத்துக்கு சென்ற ராகுல் காந்தி 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ராகுல் காந்தி, தெற்கு மும்பையில் பெடர் சாலையில் உள்ள கண் சிகிச்சை மையத்துக்கு சென்றார். அங்கு அவர் கண் பரிசோதனை மேற்கொண்டார். காலை 8.35 மணிக்கு கண் சிகிச்சை மையத்துக்கு சென்ற அவர் 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டு வருகிறது.
    • வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.

    மும்பை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டமாக மும்பையில் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த 3 மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தைவிட, 'இந்தியா' என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப் படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள், ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து-அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.

    பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.

    ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.

    இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளனர்
    • முன்னரே இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடத்தப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது.

    இதில் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    முக்கியமாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம் அமைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

    கூட்டணிக்கான செய்தித்தொடர்பாளர்கள் யார் யார் என்பது குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    ஆளும் கட்சி கூட்டணிக்கும், எதிர்கட்சி கூட்டணிக்கும் 2024 தேர்தல் ஒரு வாழ்வா, சாவா பிரச்சனை போல் தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ வல்லுனர்களுக்கு சந்திரயான்-3 வெற்றிக்காக இக்கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 முயற்சிக்காகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார்.
    • கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபி சையக் (வயது33) ஆட்டோ டிரைவர். இவரது மனைவியை இஸ்லார் மார்வாடி என்ற 17 வயது சிறுவன் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த ஷபி சையக் அந்த சிறுவனை கண்டித்தார். ஆனாலும் அவன் கேட்கவில்லை. தொடர்ந்து கிண்டல் செய்து வந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார். தலையில் சுத்தியலால் தாக்கினார். இதில் அவன் இறந்தான். இதையடுத்து தடயத்தை அழிப்பதற்காக சிறுவன் உடலை ஷபி சையக் 4 துண்டுகளாக வெட்டி பெரிய பைகளில் அடைத்தார். பின்னர் உடல் பாகங்கள் அடங்கிய பைகளை வீட்டு சமையல் அறையில் மறைத்து வைத்தார்.

    இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஷபி சையக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் சிறுவர் சீர்திருத்த மையத்தில் இருந்த அவன் போதை பொருளுக்கு அடிமையானதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×