ஓரினச்சேர்க்கை தகராறில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை தகராறில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை
Published on

புனே:

மராட்டிய மாநிலம் புனேயில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 21 வயது மாணவர் ஒருவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை இவர் வாகோலி பகுதியில் உள்ள பகோரி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓரினச்சேர்க்கை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் விசாரணையை தொடங்கினோம்.

அப்பகுதியில் நடை பெற்று வரும் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com