search icon
என் மலர்tooltip icon

    கோவா

    • கோவா மாநில முதல்-மந்திரியை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
    • கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடாரம் காலியானது. அக்கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்களே தற்போது உள்ளனர்.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் உள்ளார். 40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 20 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோவா மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த ஷெட் தனவாடே கூறும் போது, 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிவித்தார்.

    திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சியோ செக்வேரா, ரூடால்ப் பெர்ணான்டஸ் ஆகிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை சபாநாயகரை சந்தித்து பேசி இருந்தனர்.

    சட்டசபை கூட்டத் தொடர் நடக்காத நிலையில் சபாநாயகரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது அவர்கள் பா.ஜனதாவில் சேருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இன்று கோவா மாநில முதல்-மந்திரியை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

    இதனால் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடாரம் காலியானது. அக்கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்களே தற்போது உள்ளனர்.

    கடந்த ஜூலை மாதம் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.

    அப்போது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் திகம்பர் காமத், மைக்கேல் லோபோலை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது.

    அதன் பின் காங்கிரஸ் கட்சி தலைமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களை சமரசப்படுத்தியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் தான் இன்று 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர் வேறு கட்சியில் சேர உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த வழக்கில் இதுவரை சோனாலி உதவியாளர், நண்பர் உள்பட 5 பேர் கைது.
    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை.

    பனாஜி:

    அரியானாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் (வயது 42), கடந்த 22ம் தேதி கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சோனாலி, தனது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் உள்ளதாக கூறி அவர்கள் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் உள்பட ஐந்து பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.

    சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை  போலீசார் வெளியிட்டனர். மேலும் இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியானது.

    அதில் சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில், கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரிந்தது.

    சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்ததில், சுதிர்,  சோனாலிக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த திரவத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தது தெரிய வந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

    இந்நிலையில் சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை தேவைப்பட்டால் சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கோவா போலீசார் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகின்றனர். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏற்கனவே தன்னிடம் பேசி இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கை சிபிஐ கைப்பற்ற வேண்டும் என்று போகத் குடும்பத்தினர் விரும்புவதாக அரியானா மாநில பிரதிநிதி தன்னிடம் கூறியுள்ளார். இதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவைப்பட்டால், இந்த வழக்கை சிபிஐயிடம் அரசு ஒப்படைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
    • போதை ஏற்படுத்தும் வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் ஒப்புதல்.

    பனாஜி :

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) தனது கூட்டாளிகள் இருவருடன் கோவா சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த 22-ந்தேதி மர்ம மரணம் அடைந்தார்.

    சோனாலி மாரடைப்பால் இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர், உடன் சென்றிருந்த கூட்டாளிகள் இருவரால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா கோவா போலீசில் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில், சோனாலியின் கூட்டாளிகளான சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், வடக்கு கோவா அஞ்சுனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியில், போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக போலீசார் கூறினர். கூடுதல் தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

    நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சோனாலியின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டாளிகள் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றாலும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் கூறின.

    இந்நிலையில் நடிகை சோனாலி மரணம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

    சோனாலி மரண வழக்கை டி.ஜி.பி. கண்காணித்து வருவதாகவும், இந்த வழக்கில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போலீசுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
    • சோனாலி மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அம்மாவிடம் செல்போனில் பேசினாள்.

    பனாஜி :

    அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தனது கூட்டாளிகளுடன் சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கு 22-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது.

    ஆனால் இப்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    சோனாலி மரண தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவா வந்தனர். அதைத்தொடர்ந்து, நடிகை சோனாலி தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா திடுக்கிடும் புகார் கூறி உள்ளார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    தனது மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக சோனாலி, அம்மாவிடம் செல்போனில் பேசினாள். அப்போது அவள் கலக்கம் அடைந்திருந்தாள். தனது 2 கூட்டாளிகள் மீது புகார் கூறினாள். அவர்களால் அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

    அவளது மரணத்தைத் தொடர்ந்து அரியானாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், மடிக்கணினி, முக்கிய பொருட்கள் யாவும் காணாமல் போய் உள்ளன.

    என் சகோதரியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நடிகை சோனாலி மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என கூறி கோவா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த், "இந்த விவகாரத்தில் கோவா போலீஸ் விசாரணை நடத்துகிறது. நான் டி.ஜி.பி. ஜஸ்பால் சிங்கிடம் வழக்கு விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறேன்" என தெரிவித்தார்.

    இருப்பினும் நடிகை சோனாலி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அரியானா எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்து வருகின்றன.

    • கோவாவில் இருந்து மொரிஷியஸுக்கு கடல்வழி பயணம்.
    • தீவிர வானிலை மற்றும் கரடு முரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு.

    இந்திய கடற்படையில் மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா, நீலகண்ட் உள்ளிட்ட 6 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. இந்த  கப்பல்கள் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது போன்ற பயணங்கள் உதவுகின்றன.

    இந்நிலையில் கோவாவில் இருந்து மொரிஷியஸ் தீவின் போர்ட் லூயிஸ் வரை கடல் பயணத்தை காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து துவக்கி வைத்தார். தாரிணி பாய்மரக் கப்பலில் மூன்று பெண் அதிகாரிகள் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    2500 கடல் மைல் தூரத்தை இந்த குழு 21 நாட்களுக்குள் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடினமான சாகசம் மிக்க இந்த கடல் பயணத்தின் போது தீவிர வானிலை, பருவமழை மறறும் கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    • மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    பனாஜியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

    சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது.

    10 கோடி மைல்கல்லை எட்டியது நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர்.

    இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் கூட்டு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவையே காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியானது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்குவது குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது.

    பனாஜி:

    கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.

    ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த மைக்கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

    அப்போது முதலே திகம்பர் காமத் கட்சி மேலிடத்தின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தாரராக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் விரைவில் தொடங்க உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திகம்பர் காமத் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் 7 பேரும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மைக்கேல் லோபோவும் பா.ஜ.க.வுடன் பேசி வருதாக தகவல் வெளியாகியுள்ளன. இதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது.

    இதில் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவரும் கட்சிக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் நீக்கியது.

    இந்த நிலையில் பா.ஜ.க.வில் சேர காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு ரூ.40 கோடி வரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ்சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி மாபியா ஆகியோர் மூலம் இந்த பேரம் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அம்மாநில பா.ஜ.க மறுத்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்குவது குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது. அதைத்தான் அவர்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள். காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் கோவா பா.ஜ.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மாநில பா.ஜ.க. தலைவர் சதானந்த தனவாடே தெரிவித்துள்ளார்.

    • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
    • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

    கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

    கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ×