'வடபாவ்' ருசித்த வெளிநாட்டு பெண்

வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
'வடபாவ்' ருசித்த வெளிநாட்டு பெண்
Published on: 

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் சுவிட்லானா ஹயென்கோ. சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் கோவா நகரை சுற்றி பார்ப்பதற்காக சுவிட்லானா வந்துள்ளார். அப்போது அங்குள்ள தெருவோர ஓட்டல் ஒன்றில் வடமாநிலங்களில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியான வடபாவ் விற்பதை பார்த்துள்ள அவர் அதனை ருசி பார்க்க விரும்பினார்.

பின்னர் வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வடபாவை ருசிக்கும்போது சுவிட்லானாவின் முகபாவனைகளை இணையவாசிகள் ரசித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com