என் மலர்
டெல்லி
- மேற்கு வங்கத்தில் இருந்து பூடானின் சம்ட்சே நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
- அசாம் மாநிலத்தில் இருந்து கெலேபூ நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 89 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டுள்ளன என மத்திய ரெயில்வேத்துறை அமை்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பனார்ஹட்- பூடானில் உள்ள சம்ட்சே நகரை இணைக்கும் வகையிலும், அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹர்- பூடானின் கெலேபூ நகரை இணைக்கும் வகையிலும் ரெயில்பாதை அமைய இருக்கிறது.
இந்தியாவும் பூடானும் விதிவிலக்கான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. என மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி பூடான் சென்றிருந்தார். அப்போது இந்த ரெயில்பாதைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ராஜேஷ்வர் ராவ் பதவிக்காலம் அடுத்த மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
- இவருக்கு அரசு இரண்டு முறை பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருக்கும் எம். ராஜேஷ்வர் ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 9ஆம் தேதி ஷிரிஷ் சந்திர முர்மு துணை கவர்னராக பதவி ஏற்பார்.
ஆர்பிஐ-யின் கண்காணிப்பு துறையை மேற்பார்வையிடம் நிர்வாக இயக்குனராக ஷிரிஷ் சந்திர முர்மு இருந்து வருகிறார்.
ஆர்.பி.ஐ.-யின் 1934 சட்டத்தின்பாடி, ரிசர்வ் வங்கி நான்கு துணை கவர்னர்களை கொண்டிருக்க வேண்டும். தற்போது ரபி சங்கர், சுவாமிநாதன், பூனம் குப்தா ஆகியோர் துணை ஆளுநர்களாக உள்ளனர்.
ரஜேஷ்வர் ராவ் கடந்த 2020 ஆம் ஆண்டு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பதவிக்காலம் 3 வருடம் ஆகும். 2023ஆம் அண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டது. இதனால் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
தற்போது புதிய துணை கவர்னராக பதவி ஏற்கும் ஷிரிஷ் சந்திர முர்மு-வின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
- 'ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும் என மகாதேவ் பேச்சு.
- பாஜக தலைமையிடம் இருந்து திட்டவட்டமான கண்டனமும், பொது மன்னிப்பும் தேவை.
பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக-வையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியில் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க செய்தி தொடர்பாளரான பிரிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்" எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை.
இந்த நிலையில், ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில் காங்கிரஸ் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொடூரமான வகையில் பிந்து மாதவ் கொடூரமான கொலை மிரட்டல் விடுத்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. இது வாய் தவறியோ அல்லது அலட்சியமாகவோ கூறப்படவில்லை. இது மக்களின் பிரச்சனைக்காக அவர்களுடன் நிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொடூரமான கொலை மிரட்டல் ஆகும்.
இது சட்டத்தின் ஆட்சியின் மீதான, ஒவ்வொரு குடிமகனுக்கும், ஜனநாயகத்திற்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்.
ராகுல் காந்திக்கு பல்வேறு நிலைகளில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக பாஜக-வின் நோக்கம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது.
* இது மக்களின் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராகத் தீட்டப்படும் ஒரு பெரிய, கொடூரமான சதித்திட்டமா?
* பொது வாழ்வில் நஞ்சை விதைக்கும் கிரிமினல் மிரட்டல், கொலை மிரட்டல்கள் மற்றும் வன்முறை அரசியலை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறீர்களா?
* ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் என்பது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகம் மீதான தாக்குதல்.
காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை
* பிரிந்து மகாதேவ்-க்கு எதிராக உடனடி மற்றும் முன்னுதாரமான நடவடிக்கை மாநில போலீசாரால் மீது எடுக்க வேண்டும்.
* பாஜக தலைமையிடம் இருந்து திட்டவட்டமான கண்டனமும், பொது மன்னிப்பும் தேவை.
* பாஜக அவ்வாறு செய்யத் தவறினால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இழிவான செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று நாடு நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.
- டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்ட் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- சோதனைக்குப் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது சமீப காலமாக தொடர் கதையாக உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. எனினும் வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
- இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இப்படம் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர் துயர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கரூரில் நேரிட்ட கோர உயிரிழப்பு சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன் என்றார் ராஜ்நாத் சிங்.
புதுடெல்லி:
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூரில் நேரிட்ட கோர உயிரிழப்பு சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கரூர் துயர சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
புதுடெல்லி:
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தது கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
- இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அம்பு எய்வார்.
- போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.
தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) வரலாறு படைத்துள்ளார்.
இன்று(சனிக்கிழமை) நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த உலகின் நம்பர் 1 சாம்பியன் ஓஸ்நுர் குரே கிர்டி -ஐ 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஷீத்தல் தேவி படைத்துள்ளார்.
முன்னதாக நேற்று, பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் கைகள் இன்றி பிறந்த ஷீத்தல் தேவி, காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அவர் அம்பு எய்வதில் பயிற்சி பெற்றவர் ஆவார்.






