என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் ரெயில்பாதை
    X

    இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் ரெயில்பாதை

    • மேற்கு வங்கத்தில் இருந்து பூடானின் சம்ட்சே நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.
    • அசாம் மாநிலத்தில் இருந்து கெலேபூ நகரை இணைக்கும் வகையில் ரெயில்பாதை.

    இந்தியா- பூடான் நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 89 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க இருநாடுகளும் இணைந்து திட்டமிட்டுள்ளன என மத்திய ரெயில்வேத்துறை அமை்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பனார்ஹட்- பூடானில் உள்ள சம்ட்சே நகரை இணைக்கும் வகையிலும், அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹர்- பூடானின் கெலேபூ நகரை இணைக்கும் வகையிலும் ரெயில்பாதை அமைய இருக்கிறது.

    இந்தியாவும் பூடானும் விதிவிலக்கான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் கொண்ட உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. என மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிரதமர் மோடி பூடான் சென்றிருந்தார். அப்போது இந்த ரெயில்பாதைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    Next Story
    ×