என் மலர்tooltip icon

    டெல்லி

    • பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர்.
    • அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது "பாதுகாப்பை கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    "பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது. பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்களது கடமை.

    இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

    • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிபீடியா இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.

    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவி ஏற்று 100 நாட்கள் கடந்த நிலையில் அரசின் சாதனை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைத்துள்ளன. நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.

    மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரிடமும் அரசு பேசி வருகிறது. பிரச்சனைக்கு மூல காரணமான இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    • அதிஷிக்கு கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

    இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது. எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.

    ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதல்-மந்திரி நாற்காலியில் அமருவேன் என அவர் சபதமிட்டார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அவர் பதவி விலகுவதாக அறிவித்ததால் டெல்லி புதிய முதல்-மந்திரி யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் மந்திரி பதவிக்கு மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்டவர்கள் பெயர்களும் அடிப்பட்டது. கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் இருந்தார்.

    முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை-முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு கொடுக்கலாம் என விரிவாக ஆலோசித்தனர்.

    இது பற்றி கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள், மந்திரிகள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

    இன்று 2-வது கட்டமாக கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பகல் 11.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வரும் அதிஷி பெயரை கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதனை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிஷிக்கு கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வரை அதிஷி முதல்-மந்திரி பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபைக்கு அடுத்து ஆண்டு (2025) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை 4.30 மணிக்கு கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார். இதனை ஏற்றுக்கொண்டு புதிய அரசை அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார்.

    இதைத் தொடர்ந்து அதிஷி தலைமையில் புதிய மந்திரி சபை பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு கவர்னர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    மந்திரி சபையில் ஏற்கனவே உள்ளவர்களுடன் 2 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒருவர் தலித்தை சேர்ந்த எம்.எல்.ஏ. என டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழா முடிந்ததும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் டெல்லி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    • பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு குணங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும்- பெரியார்

    மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு நமது அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

    • கெஜ்ரிவால் இன்று மாலை துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்.
    • ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அதிஷி பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார். அவர் இன்று மாலை கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    ஆலோசனை முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏ.-க்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் அதிஷி அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • வெறுப்பால் நிரப்பப்பட்டவர்கள் இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள்.
    • நாட்டின் நலன்களுக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள்.

    காந்திநகர்:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

    அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க. வை விமர்சித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேட்டி அளித்தார். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கிறார் என்றும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிறார் என்றும் குற்றச்சாட்டியது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெறுப்பால் நிரப்பப்பட்டவர்கள் இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள். நாட்டின் நலன்களுக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குறி வைக்கின்றனர். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றனர்.

    500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தார். ஆனால் அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள். இது போன்ற பிளவுபடுத்தும் சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று காலை ஆம் ஆத்மியின் சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
    • அதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானதும், மக்கள் தன்னை நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்கமாட்டேன். 48 மணி நேரத்திற்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் எனத் தெரிவித்தார்.

    அவருடைய 48 மணி நேர கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே நேற்று ஜெக்ரிவால் துணை நிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சட்டமன்ற கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணிக்கு புதிய முதல்வர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    • சுபத்ரா யோஜனா நிதி உதவித் திட்டம், ஒடிசா தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதியாகும்.
    • 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற அவரது உறுதியை நிறைவேற்ற அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார். எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி உயர்ந்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பல தசாப்தகால பொது சேவையில் மேலும் ஒரு ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் பிறந்தநாள் மற்ற நாட்களைப் போலவே, அவரது அதிகாரப்பூர்வ பொறுப்புகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பா.ஜனதா கட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் "சேவா பர்வ்" என்ற இரண்டு வார விழாவில், பொது நலனில் பிரதமரின் நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்யும் அவரது தத்துவத்தை எடுத்துரைக்கும் மேடையாக இந்நிகழ்வு விளங்குகிறது.

    பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளில் புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் 26 லட்சம் பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகளை திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

    புவனேஸ்வர் விமான நிலையத்தை வந்தடைந்ததும், பிரதமர் மோடி சைனிக் பள்ளிக்கு அருகில் உள்ள கடகனா குடிசைப் பகுதிக்கு செல்வதாக புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பாண்டா உறுதி செய்தார்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஜனதா மைதானத்திற்குச் செல்கிறார், அங்கு அவர் சுபத்ரா யோஜனாவைத் தொடங்கி வைக்க உள்ளார். இதன் கீழ் 1 கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

    சுபத்ரா யோஜனா நிதி உதவித் திட்டம், ஒடிசா தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதியாகும்.

    இதனுடன், 2,871 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களையும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

     

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,

    "பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

    "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற அவரது உறுதியை நிறைவேற்ற அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பிரதமர் மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற மகாராஷ்டிராவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடு, 21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று நான் கூற விரும்புகிறேன், ஏனெனில் நாட்டின் கேப்டன் பிரதமர் மோடி, அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன்- கெஜ்ரிவால்.
    • டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் பெயர்கள் அடிபடுகிறது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று அவரை முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சந்தித்து பேசினார். புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதிலும், புதிய முதல்-மந்திரி தேர்வு பற்றி விவாதிக்கப்பட்டது.

    டெல்லி மந்திரிகள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.

    இதற்கிடையே, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவை இன்று சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க அவருக்கு கவர்னர் நேரம் ஒதுக்கி தந்துள்ளார். இச்சந்திப்பின்போது, கவர்னரிடம் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரி பதவியேற்பார் என்று தெரிகிறது.

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியது.
    • தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நவ்தீப் சிங் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 வயதான நவ்தீப் சிங் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்டி படிப்பில் பயின்று வந்தார்.

    இந்த நிலையில், பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸ்-இல் தங்கி படித்து வந்த நவ்தீப் சிங் விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார் நவ்தீப் சிங். எனினும், மருத்துவ படிப்பை முடிக்கும் முன் அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

     


    சம்பவத்தன்று நவ்தீப் சிங்கின் தந்தையும், பள்ளி முதல்வருமான கோபால் சிங் தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வந்துள்ளார். எனினும், மகன் அழைப்பை ஏற்காததை அடுத்து நவ்தீப் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் அறைக்கு சென்ற அவரது நண்பர்கள், அவரின் அறை கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததை கண்டனர்.

    எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காததை அடுத்து, நண்பர்கள் சேர்ந்து நவ்தீப் சிங்கின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நண்பர்களுக்கு அறையில் நவ்தீப் சிங் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நவ்தீப் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×