என் மலர்
இந்தியா

மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக பேச்சுவார்த்தை- அமித்ஷா பேட்டி
- பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.
புதுடெல்லி:
மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவி ஏற்று 100 நாட்கள் கடந்த நிலையில் அரசின் சாதனை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைத்துள்ளன. நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை அரசு மிக விரைவில் வெளியிடும்.
மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரிடமும் அரசு பேசி வருகிறது. பிரச்சனைக்கு மூல காரணமான இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






