என் மலர்
பீகார்
- இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
பீகார் மாநிலம் தர்பாங்காவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பா.ஜ.கவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கட்சியினரின் இந்த செயலுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்து இருந்தார்.
பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரசார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஏ.ஐ.வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:-
காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி பிரதமரின் தாயாரை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்த செயல்கள் அனைத்தும் ராகுல்காந்தியின் கட்டளைப்படியே நடந்து வருகிறது.
தொடர்ந்து பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளை கேலி கிண்டல் செய்து வரும் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
ஒரு கட்சி இந்தியாவின் ஏழைகளை இவ்வளவு வெறுப்பது உணர்ச்சியற்றது மட்டுமல்ல. வேதனையானது. காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது, நாட்டின் ஏழை மக்களை வெறுக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க.வை சேர்ந்த ஷேசாத் பூனவாலா என்பவர் கூறும்போது, காங்கிரஸ் மீண்டும் பிரதமரின் தாயாரை அவமதித்துள்ளது. இது இனி காந்தியின் காங்கிரஸ் அல்ல என தெரிவித்தார்.
- மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
- இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்தந்த நாட்டின் வர்த்தக மந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியில் முடிவடைய இருநாடுகளும் முன்வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையாக மதிப்பீட்டை அன்புடன் வரவேற்பதாக பதில் அளித்திருந்தார்.
- நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
- இன்னும் சில மாதங்களில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ளது.
பீகாரில் ரூ.7,616 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது.
- சூப்பர் 4 சுற்றில் மலேசியாவை இந்திய அணி 4-1 என வீழ்த்தியது.
பாட்னா:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.
லீக் சுற்று முடிவில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றை எட்டியது.
நேற்று நடந்த போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
- அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
- பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து பந்த் நடந்தது.
பாட்னா:
பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து செப்டம்பர் 4-ம் தேதி அன்று அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஜெகானாபாத் பகுதியில் பாஜகவினர் பேரணி சென்றனர். அப்போது அங்கு வந்த ஆசிரியை பள்ளி செல்ல தாமதமாகிறது எனக்கூறி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்போது பள்ளி செல்வதா எனக்கூறி, பா.ஜ.க. மகளிர் அணியினர் அந்த ஆசிரியை செல்ல விடாமல் தடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அங்கிருந்த போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- பீகார் பாட்னாவின் புதிதாக மரைன் டிரைவ் திறக்கப்பட்டது.
- ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும்.
பீகார் பாட்னாவின் புதிதாக திறக்கப்பட்ட மரைன் டிரைவ் சாலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் தேஜஸ்வி யாதவ், சில இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
16 நாள் நடைபெற்ற 'வாக்காளர் அதிகார யாத்திரை' முடிந்த பிறகு, நள்ளிரவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், தேஜஸ்வி யாதவ் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி இளைஞர்களுடன் ரீல்ஸ் எடுப்பதை காணலாம்.
இந்த வீடியோவுக்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நள்ளிரவில் சாலையில் நடனமாடி ரீல்கள் உருவாக்குவது ஒரு 'பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரால்' மட்டுமே முடியும் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும், " ரீல்கள் உருவாக்கும்போது சாலை விபத்துகளில் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது அராஜகத்தை ஊக்குவிக்கும் செயல். ஜே.பி.பாதை ஒரு சுற்றுலாத் தலம் அல்ல. பீகார் காவல்துறை இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மாநிலம் முழுவதும் சாலைகள் ரீல்களால் நிரம்பிவிடும்" எச்சரித்துள்ளார்.
- அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
- இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.
இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.
பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.
இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை
பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.
சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
பாட்னா:
பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.
- இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது.
- பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள்.
பீகார் மாநிலத்தில் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மக்களின் வாக்கு அதிகாரம் என்ற பெயரில் மக்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கான ராகுல் காந்தி கடந்த இரண்டு வாரமாக பேரணி மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தற்போது சீனாவிலும் எதிரொலிக்கிறது (தற்போது பிரதமர் மோடி சீனாவில் உள்ளதால், கிண்டலடிக்கும் வகையில்). நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "ராகுல் காந்தியின் பேச்சை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும்.

இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு எனப் பேசுகிறார். அணுகுண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பாராளுமன்ற தேர்தில் பலவேறு தொகுதியில் வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
- வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
- இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர்கள் அதிகாரம் பேரணியில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் மோடி பீகார் தேர்தலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், மோடி மற்றும் அமித் ஷா உங்களை அடக்கி வைத்து விடுவார்கள்.
மோடி வாக்கு திருட்டு, பைசா திருட்டு, வங்கிகளை கொள்கை அடிப்பவர்களை பாதுகாக்கும் திருட்டு போன்ற திருட்டு பழக்கம் கொண்டவர்.
இன்னும் சில மாதங்களில் பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்தில் இருக்காது. ஏழை, பெண்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு அமையும்.
இவ்வாறு கார்கே பேசினார்.
- ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது.
- இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பானை வெற்றி பெற்றது.
பாட்னா:
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் சீனாவை 4-3 என வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது.
முதல் பாதியில் இந்திய அணி 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜப்பான் 2 கோல்கள் அடித்தது. இந்தியா மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், மன்தீப் சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.






