என் மலர்tooltip icon

    பீகார்

    • 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
    • மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    • பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு.
    • தற்போது வரை 83 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    நேற்று 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் இடம் பிடித்துள்ளார். இவர் பாட்னாவில் நேற்று முறையாக பாஜக-வில், மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இணைந்தார். இந்த உடனேயே அலிநகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மைதிலி தாகூரை தவிர்த்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு புக்சர் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில்தான் பாஜக-வில் இணைந்தார்.

    முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்குப் பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத் நிறுத்தப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் கிங்கிற்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
    • ராஷ்டிரிய ஜனத தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

    மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

    தொகுதி பங்கீடு செய்யப்பட்ட பிறகும் கூட அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் அதன் மற்ற தோழமை கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கணிசமாக 29 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால் மற்ற தோழமை கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிதிஷ்குமாரின் கோட்டை என்று சொல்லப்படும் ராஜகீர், சோன்பர்ஸா இடங்களை சிராகின் கட்சி உரிமை கோரி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.

    • மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
    • இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

    மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.

    இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

    • கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன்.
    • அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து அரசியல்கட்சி தலைவராக உருவெடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்டீரிய ஜனதா தளம் கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அவர் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ரித்தேஷ் ரஞ்சன் கர்கஹார் தொகுதி வேட்பாளராகவும், சஞ்சய் சிங் ரகோபூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இதனால் பிரசாந்த் கிஷோர் போட்டியிடமாட்டார் என்பது உறுதியானது. தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதியில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அக்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெல்வதற்கு கூட கடுமையாக போராட வேண்டி இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக வர மாட்டார்.

    இந்தியா கூட்டணியின் நிலைமையும் சரியாக இல்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
    • ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் பேட்டியிடுகிறது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி தாராபூரில் போட்டியிடுகிறார். அமைசசர் மங்கல் பாண்டே சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • 243 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது.
    • 116 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.

    அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி பீகார் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

    முதற்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் ஆட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய பட்டியலில் 65 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 116 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இரண்டு கட்ட பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.

    தேஜஸ்வியை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
    • தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.

    பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

    தொகுதி பங்கீட்டில் நிதீஷ், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கறார் காட்டுவதால் சிக்கீல் நீடித்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.

    இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து அமித்ஷா தலைமையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    • விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.

    தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள்.
    • எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும் என்றார்.

    பாட்னா:

    ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் ரகோபூரிலிருந்து போட்டியிட வேண்டுமானால், ரகோபூரின் மக்கள் என்னுடன் நிற்க வேண்டும். இன்று நான் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் நாளை கட்சிக் கூட்டத்தில் முன்வைப்பேன். ஓரிரு நாட்களில், யார் போட்டியிடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

    பீகார் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். இது இருக்கை பகிர்வு அல்ல. இது ஊழலைப் பகிர்ந்து கொள்வது - யார் அதிகமாக கொள்ளை அடிப்பார்கள், யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், யார் கொள்ளையில் அதிக பங்கைப் பெறுவார்கள் - இது அதற்கான போராட்டம்.

    இது நீண்ட காலத்திற்கு தொடரும். ஏனென்றால் நாம் கூட்டணி அமைத்தவுடன் பொதுமக்களை மீண்டும் முட்டாளாக்குவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    சிலர் சாதியின் பெயரால் தங்களை விற்றுவிடுவார்கள். சிலர் இந்துக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மாறுவார்கள். சிலர் ஐந்து கிலோ தானியத்திற்கு, சிலர் ஐநூறு ரூபாய்க்கு வாக்களிப்பார்கள். ஆனால் இது நடந்தால், உங்கள் மூலம் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பிறகு யாரையும் குறை சொல்லாதீர்கள்.

    ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் நிறைய ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், இந்த பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்.

    நாம் அவரை நம்பினால், அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) 18 ஆண்டுகளில் 4-5 லட்சம் வேலைகளை வழங்கினர். இப்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடி வேலைகளை வழங்குவதாகச் சொல்கிறார். இதன் பொருள் ஒன்றுதான்: நீங்கள் ஒரு முட்டாள் அல்லது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என தெரிவித்தார்.

    • நான் ரகோபூரில் போட்டியிட்டால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
    • அப்படி போட்டியிட்டால் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு நடந்தது தேஜஸ்விக்கு நடக்கும்.

    பீகார் தேர்தலில், தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியில் களம் இறங்குகிறது.

    இங்குள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதி, லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி ராப்ரி தேவி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இருவரும் முதல்வராக இருந்துள்ளனர். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் 2015 மற்றும் 2020-ல் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

    இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இங்கு நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதிர்கொண்டதை, தேஜஸ்வி யாதவ் எதிர்கொள்வார்" என்றார்.

    ராகுல் காந்தி 2010 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது.

    இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த திருத்தும் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இதில் பாஜகவின் வாக்கு திருட்டு சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் பீகாரின் தோரையா (Dhoraiya) தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பூத் என் 216 இன் கீழ் வரும் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகியோர் தாங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) அரவிந்த் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில், "ஐயா, நாங்கள் உயிருடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும், எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது  என அதிகாரி அரவிந்த் குமார் அவர்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார்.

    முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் 2018 உயிரிழந்த சோனியா சரண் என்பவரும் 2025 இல் உயிரிழந்த அவரின் மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.  

    ×