என் மலர்
இந்தியா

அரை டஜன் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் விரைவில் பாஜக-வில் இணைவார்கள்: பீகார் மாநில தலைவர்
- பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- என்டிஏ கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி பிரதான கட்சிகளாக உள்ளன.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி) முக்கிய கட்சிகளாகும். இந்தியா கூட்டணியில் ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பிரதான கட்சிகள் ஆகும்.
இந்த முறை தேர்தல் மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநில பாஜக தலைவர், திலிப் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன் எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
இன்னும் அடுத்த சில நாட்களில் அரை டஜன் எதிர்க்கட்சி எம்.எம்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள். இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைத்துவம் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆனால் கட்சி தாவும் எம்.எல்.ஏ.-க்கள் யார் யார் என்பதை வெளியிடவில்லை. முன்னதாக இரணடு முறை எம்.பி.யாகவும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் நிஷாத் மீண்டும் பாஜக கட்சிக்கு திரும்பினார். அவரை வரவேற்றார். அவரது வருகறை திர்கட் பிராந்தியத்தில் கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என்றார்.






