என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • தேர்தல் நேரத்தில் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மங்கல் ஹாட் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜாசிங் தல்வர்லு.

    தற்போது தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இவர் தசரா பண்டிகையை கொண்டாடும் வகையில் தனது வீட்டில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை வைத்து பூஜை செய்தார். ராஜா சிங் பூஜை செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனைக் கண்ட நபர் ஒருவர் டுவிட்டர் மூலம் மங்கல் ஹாட் போலீசில் புகார் செய்தார்.

    புகாருக்கு பதில் அளித்த போலீசார் 4 நாட்களில் விளக்கம் கேட்டு ராஜா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பினர். தேர்தல் நேரத்தில் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது. எதற்காக உங்களது வீட்டில் ஆயுதங்கள் இருந்தன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.
    • கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல் மந்திரிமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய ஜாமீன் வழங்க வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து ஆந்திரா ஐகோர்ட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கியது.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.

    கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கண் ஆபரேசன் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடு ஜூப்ளி ஹில்சில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    • 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை.
    • பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.

    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி கலந்துகொண்டார்.

    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை (வியாழக்கிழமை) அங்குரார்பணம் நடக்கிறது. 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    18-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்த பின்னர், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ண குமார் ரெட்டி 11 திரைச்சீலைகளும், குண்டூரை சேர்ந்த அருண்குமார், பத்மாவதி, திருச்சானூரை சேர்ந்த பவித்ரா மற்றும் ரஜினி ஆகியோர் 4 திரைச்சீலைகளும் வழங்கினர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டம், கனி கிரியை சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கடை உரிமையாளரின் 17 வயது மகளை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது விருப்பத்திற்கு மாறாக பலமுறை பலாத்காரம் செய்தார்.

    இதேபோல் ஐதராபாத் அழைத்துச் சென்றும் அங்கு சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். ஓங்கோல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக ஓங்கோல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகர் தீர்ப்பு வழங்கினார்.

    மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த மகபூப் பாஷாவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

    • வெங்கடரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
    • பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கமலபாடுவை சேர்ந்தவர் வெங்கட ரத்தினம்மா (வயது 78).

    இவரது மகன் வெங்கடேஸ்வரலு, மகள் திருப்பத்தமா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    கணவர் இறந்து விட்டதால் வெங்கட ரத்தினம்மா மகன் வெங்கடேஸ்வரலு வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறால் வெங்கட ரத்தினம்மா அவதி அடைந்து வந்தார். வெங்கடேஸ்வரலுவின் மனைவி மாமியாருக்கு பணிவிடை செய்ய விருப்பம் இல்லாததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஸ்வரலு தனது மனைவியுடன் சேர்ந்து தாயை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நல்கொண்டா அடுத்த மிரியாகுலா அருகே உள்ள வைகுந்தம் என்ற இடத்தில் தாயை இறக்கிவிட்டார்.

    அப்போது வெங்கடரத்தினமா மகனிடம் இங்கே ஏன் என்னை விட்டு செல்கிறாய் வீட்டிற்கு அழைத்துச் செல் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியுடன் சேர்ந்து தாயின் 2 கைகளையும் பின்புறமாக வளைத்து கையை உடைத்தனர். பின்னர் அங்குள்ள புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெங்கட ரத்தினம்மா இரவு முழுவதும் வலியால் அலறி துடித்தார். நேற்று காலை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அந்த வழியாக வந்தனர்.

    மூதாட்டி அழும் சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கட ரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நல்கொண்டா கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட ரத்தினம்மாவை மீட்டனர்.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    இதுபோல் மீண்டும் தாயை கொடுமைப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
    • விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ந் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.

    ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் செயல்பாட்டில், விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    • கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் அதிகரித்து காணப்பட்டது.
    • திருப்பதியில் நேற்று 66,312 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி முதல் நேரம் 9 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,312 பேர் தரிசனம் செய்தனர். 22,002 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா:

    விஜயவாடாவில் நேரு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நடைமேடையில் அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

    இன்று காலை 8.20 மணியளவில் பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 12-ல் பேருந்து மோதி விபத்துக்குள்ளான போது ஏராளமான பயணிகள் திரண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "வாகனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, ஓட்டுநர் முன்னோக்கி நகர்ந்து பிளாட்பாரத்தில் மோதினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயவாடா பேருந்து நிலையம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய இணைப்புப் புள்ளியாகும்.

    • ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.
    • கைதானவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கஞ்சி கச்சேரி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கந்துரு ஷியாம் குமார் (வயது 21). பிரகாசம் மாவட்டம், கணபவரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ரெட்டி ( 22). இவர்கள் இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படிக்கும்போது நண்பர்களாக பழகி வந்தனர்.

    அப்போது தங்களுடன் படிக்கும் மாணவி ஒருவரை 2 பேரும் காதலித்து வந்தனர். ஆனால் மாணவி கந்துரு ஷியாம் குமாரை காதலித்தார். இதனால் இருவருக்கும் இடையே பகை உண்டானது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி கந்துரு ஷியாம் குமார் தன்னுடைய வீட்டில் இருந்தார்.

    அப்போது ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.

    கந்துரு ஷியாம் குமார் சிவசாய் கோவில் அருகே வந்த போது அங்கு தனது 5 நண்பர்களுடன் தயாராக இருந்த ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாரை காரில் ஏற்றிக்கொண்டு குண்டூர் கடத்திச் சென்றனர்.

    அங்கு காரில் வைத்து ஷியாம் குமாரை சுமார் 4 மணி நேரம் சரமாரியாக தாக்கினார். ஷியாம் குமார் குடிக்க தண்ணீர் கேட்டபோது ஹரிஷ் ரெட்டி அவர் மீது சிறுநீர் கழித்தார். பின்னர் மறைவான இடத்தில் ஷியாம் குமாரை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து ஷியாம் குமார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஷ் ரெட்டி அவரது நண்பர்கள் அணில் குமார் (22), ஸ்ரீகாந்த் ரெட்டி ( 23), விஷ்ணுவர்தன் ரெட்டி (23), நாகார்ஜுனா ரெட்டி (22), குண்டூரை சேர்ந்த வெங்கட் லட்சுமண ரெட்டி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 14 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆனது.

    ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் வரையிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த சீனிவாசராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த பெண் டாக்டருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து டாக்டரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் டாக்டர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து பிசியோதெரபி டாக்டருடன் தங்கினார்.

    வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சீனிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

    இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசினார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 10 நாட்களில் 6.70 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
    • திருப்பதியில் நேற்று 66,048 பேர் தரிசனம் செய்தனர். 24,666 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 10 நாட்களில் 6.70 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

    அதன்படி வருகிற 10-ந்தேதி 2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 20,000 டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    இதில் டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.10 ஆயிரத்துடன் ரூ.300 சிறப்பு தரிசனம் டிக்கெட் டோக்கன் பெற்று தரிசனம் செய்து கொள்ளலாம்.

    மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் திருப்பதியில் 9 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் மூலம் 4.25 லட்சம் நேர ஒதுக்கீட்டு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஆர்ஜித சேவைகள், கை குழந்தையுடன் வரும் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66,048 பேர் தரிசனம் செய்தனர். 24,666 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×