என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மதுரவாடா பகுதியில் வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

    அப்போது அந்தப் பகுதி முழுவதும் பட்டாசு புகை சூழ்ந்தது. பட்டாசு புகையை சுவாசித்த 2000-க்கும் மேற்பட்டோர் சுவாச கோளாறு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

    ஒரு சிலருக்கு கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று ஐதராபாத்தில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரியில் 46 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் வெடிக்கப்பட்டது. சீன பட்டாசுகளா அல்லது வேறு வகையான பட்டாசுகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
    • தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் கேட்டு உள்ளார். கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

    இதனால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் ஒரு பெட்ரோல் கேனுடன் மீண்டும் மதுபானக் கடைக்கு வந்தார். கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கணினி உள்பட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.

    இதனையொட்டி சர்வ பூ பால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். மூலவருக்கு அதிரசம் படையிலப்பட்டது.

    நேற்று அவரவர்கள் வீட்டிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,807 பேர் தரிசனம் செய்தனர். 21, 974 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் இதமான தட்ப வெப்பநிலை உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.
    • படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினர் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

    அன்று தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்தது. இதில் அந்த குழந்தை இறந்தது.

    மேலும் தீபாவளி கொண்டாடிய பிறகு 3-வது நாளில் 2 காளைகள் துரதிர்ஷ்டவசமாக இறந்தன. இது அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவங்களால் அந்த கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என்று நம்பத் தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.

    தலைமுறை தலைமுறையாக எப்பொழுதும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

    அங்குள்ளவர்கள் யாருக்கும் தீபாவளி கொண்டாட தைரியம் இல்லை என கூறுகின்றனர். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

    ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.

    இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் புன்னனா நரசிம்மலூ (வயது 66) என்பவர் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் தீபாவளி மற்றும் நகுல சவிதி பண்டிகைகள் கொண்டாட கூடாது என விதி உள்ளது.

    நான் பிறந்து வளர்ந்தது முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடி பார்த்ததில்லை. தீபாவளி கொண்டாட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு எங்கள் கிராம மக்களுக்கு பல்வேறு வழிகளில் கல்வி கற்பிக்கவும் ஊக்குவிக்கவும் நான் முயற்சித்தேன்.

    அது பலனளிக்கவில்லை. என் மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் நான் தடையை மீறி தீபாவளி கொண்டாட முயன்றதால் அவன் இறந்து விட்டான் என கிராமத்தில் வதந்தி பரவி விட்டது.

    கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக எங்கள் கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
    • பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் ஓய்வு இன்றி கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இவரது நடிப்பில் ஓ.ஜி, உஸ்தாத் பகத்சிங், ஹரிஹர வீரமல்லூர் ஆகிய 3 படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் உள்ளார்.

    இந்நிலையில் பவன் கல்யாண் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட 3 படங்களையும் முடித்துக் கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டுமென பவன் கல்யாணிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவரது தரப்பில் படப்பிடிப்பிற்கு நேரமில்லை என கூறுகின்றனர்.

    • ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இந்தியன்-2 காட்சிகள் படமாக்கியுள்ளனர்.
    • கமல்ஹாசன் விஜயவாடாவில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் கமல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இந்தியன்-2 காட்சிகள் படமாக்கியுள்ளனர். கமல்ஹாசன் விஜயவாடாவில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    கமல் ஊரில் இருக்கிறார் என்று தெரிந்ததும், அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது படக்குழுவினருக்கு சவாலாக மாறியது, ஒருவழியாகத் கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

    4 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், விஜயவாடா நகரில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் சிலையை நேற்று காலை திறந்து வைத்தார்.

    • கோமளா திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கொட்டாங்காவை சேர்ந்தவர் கோமளா (வயது 17).

    கோமளாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். பெற்றோர் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை கோமளாவுக்கு பிடிக்கவில்லை.

    இதனால் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என கோமளா தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். பெற்றோரும் மகளை பல்வேறு விதங்களில் சமாதானம் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கோமளா திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த கோமளா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கோமளாவின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கர்லடினே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோமளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமளாவின் தாயை கைது செய்தனர்.

    • தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதற்காக இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான ஆன்லைன் முகவரி மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கான 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளனர்.

    இதனை பெற்றுக்கொண்ட பக்தர்களும், ரூ.300 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    மேலும், இன்று மாலை 5 மணிக்கு 10 நாட்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

    தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 56, 723 பேர் தரிசனம் செய்தனர். 21,778 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 5 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி திசனம் செய்தனர்.

    • வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.
    • வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டூர் மைதுகுரு சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.

    இவர் அதே ஊரில் உள்ள 39 நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை தங்கமுலாம் பூசி வங்கியில் அடகு வைத்து ஒரு ஆண்டில் 3.17 கோடி கடன் பெற்று உள்ளார்.

    வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை சரி பார்த்தபோது 39 பேர் பெயரில் வைக்கப்பட்ட நகைகள் முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பதை கண்டுபிடித்தனர்.

    இது குறித்து வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சந்திரமோகன் 3 வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

    • மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
    • பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.

    விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

    மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.

    பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘தலித் பந்து’ திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.
    • அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றின் மீது மற்றொன்று கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

    சென்னுாரில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானா தேர்தலில் நீங்கள் உங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள்.

    அதன்பின்னர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் நம்மை ஆள்வது என்பதை முடிவு செய்யுங்கள்.

    பிற கட்சிகள் பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாகத் தான் பயன்படுத்துகின்றன. 'தலித் பந்து' திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.

    தலித் பந்து என்பது பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். அதன்படி தகுதிவாய்ந்த பட்டியலின வகுப்பினர் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக தரப்படுகிறது.

    அம்பேத்கரை தோற்கடித்தார்கள்.

    அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    தேர்தலில் அவரைத் தோற்கடித்தது, காங்கிரஸ் கட்சிதான். பாராளுமன்ற தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தது யார்? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் அவரைத் தோற்கடித்தது மட்டுமல்ல அவரது சித்தாந்தத்தை அமல்படுத்தியதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி.
    • மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார்.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஐதராபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி. முன்பு 3 முறை குஜராத் முதல்-அமைச்சராக இருந்து, இப்போது பிரதமராக இருக்கிறார்.

    குஜராத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய விதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கு மாநிலத் தலைவர்கள் முன்மாதிரியாகக் காண வேண்டும்.

    மோடி எனக்கு மிகவும் பிடித்த பிரதமர், நான் அவரை மிகவும் மதிக்கிறேன், அவர் மிகவும் திறமையான தலைவர். வலுவான தலைமைத்துவம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் நாட்டை வழிநடத்த வந்துள்ளார்.

    மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். பிரதமர் மோடி தான் என்னுடைய ரோல் மாடல்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×