என் மலர்tooltip icon

    இந்தியா

    காதல் தகராறில் பட்டதாரி வாலிபரை கடத்தி சிறுநீர் கழித்து சித்ரவதை: 6 பேர் கைது
    X

    காதல் தகராறில் பட்டதாரி வாலிபரை கடத்தி சிறுநீர் கழித்து சித்ரவதை: 6 பேர் கைது

    • ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.
    • கைதானவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கஞ்சி கச்சேரி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கந்துரு ஷியாம் குமார் (வயது 21). பிரகாசம் மாவட்டம், கணபவரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ரெட்டி ( 22). இவர்கள் இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படிக்கும்போது நண்பர்களாக பழகி வந்தனர்.

    அப்போது தங்களுடன் படிக்கும் மாணவி ஒருவரை 2 பேரும் காதலித்து வந்தனர். ஆனால் மாணவி கந்துரு ஷியாம் குமாரை காதலித்தார். இதனால் இருவருக்கும் இடையே பகை உண்டானது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி கந்துரு ஷியாம் குமார் தன்னுடைய வீட்டில் இருந்தார்.

    அப்போது ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.

    கந்துரு ஷியாம் குமார் சிவசாய் கோவில் அருகே வந்த போது அங்கு தனது 5 நண்பர்களுடன் தயாராக இருந்த ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாரை காரில் ஏற்றிக்கொண்டு குண்டூர் கடத்திச் சென்றனர்.

    அங்கு காரில் வைத்து ஷியாம் குமாரை சுமார் 4 மணி நேரம் சரமாரியாக தாக்கினார். ஷியாம் குமார் குடிக்க தண்ணீர் கேட்டபோது ஹரிஷ் ரெட்டி அவர் மீது சிறுநீர் கழித்தார். பின்னர் மறைவான இடத்தில் ஷியாம் குமாரை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து ஷியாம் குமார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஷ் ரெட்டி அவரது நண்பர்கள் அணில் குமார் (22), ஸ்ரீகாந்த் ரெட்டி ( 23), விஷ்ணுவர்தன் ரெட்டி (23), நாகார்ஜுனா ரெட்டி (22), குண்டூரை சேர்ந்த வெங்கட் லட்சுமண ரெட்டி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×