என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சித்ரவதை"

    • சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    • சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் நவீன். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவரும் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது ஓங்கோல் மற்றும் அதன் சுற்றுப்புற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் நவீனை அடித்து உதைக்க ஆஞ்சி முடிவு செய்தார். அதன்படி நவீனை மது குடிக்க அழைத்தார். ஓங்கோல் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் நவீன் சென்றார். அங்கு வைத்து ஆஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து நவீனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உடல் முழுவதும் அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நவீன் முகத்தில் 3 பேர் சிறுநீர் கழித்தனர். மேலும் சித்ரவதை செய்தனர். இதனை அந்த கும்பலில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார்.

    இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது ஆந்திராவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதேபோல ஆந்திராவில் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.
    • கைதானவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கஞ்சி கச்சேரி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கந்துரு ஷியாம் குமார் (வயது 21). பிரகாசம் மாவட்டம், கணபவரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ரெட்டி ( 22). இவர்கள் இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படிக்கும்போது நண்பர்களாக பழகி வந்தனர்.

    அப்போது தங்களுடன் படிக்கும் மாணவி ஒருவரை 2 பேரும் காதலித்து வந்தனர். ஆனால் மாணவி கந்துரு ஷியாம் குமாரை காதலித்தார். இதனால் இருவருக்கும் இடையே பகை உண்டானது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி கந்துரு ஷியாம் குமார் தன்னுடைய வீட்டில் இருந்தார்.

    அப்போது ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாருக்கு போன் செய்து சிவசாய் கோவில் அருகே வரும்படி அழைத்தார்.

    கந்துரு ஷியாம் குமார் சிவசாய் கோவில் அருகே வந்த போது அங்கு தனது 5 நண்பர்களுடன் தயாராக இருந்த ஹரிஷ் ரெட்டி, ஷியாம் குமாரை காரில் ஏற்றிக்கொண்டு குண்டூர் கடத்திச் சென்றனர்.

    அங்கு காரில் வைத்து ஷியாம் குமாரை சுமார் 4 மணி நேரம் சரமாரியாக தாக்கினார். ஷியாம் குமார் குடிக்க தண்ணீர் கேட்டபோது ஹரிஷ் ரெட்டி அவர் மீது சிறுநீர் கழித்தார். பின்னர் மறைவான இடத்தில் ஷியாம் குமாரை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து ஷியாம் குமார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஷ் ரெட்டி அவரது நண்பர்கள் அணில் குமார் (22), ஸ்ரீகாந்த் ரெட்டி ( 23), விஷ்ணுவர்தன் ரெட்டி (23), நாகார்ஜுனா ரெட்டி (22), குண்டூரை சேர்ந்த வெங்கட் லட்சுமண ரெட்டி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×