என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை ஏவப்படுகிறது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5½ மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் சரியாக இன்று பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது.
    • 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5½ மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்குகிறது.

    வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.

    ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
    • இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன.

    திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பார்வையாளர்களை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்றி, சிங்கத்தை கூண்டில் அடைத்தனர்

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார். இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதற்கிடையே அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது. இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார். ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    • பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.
    • விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

    திருமலை:

    திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.

    எனவே, அந்த மையங்களில் செருப்புகள் மற்றும் ஷூக்களை பக்தர்கள் பத்திரப்படுத்திவிட்டு, கோவிலுக்கு சென்று ஏழுமலை யானை தரிசித்துவிட்டு வந்து எடுத்துச் செல்வது வழக்கம்.

    இதற்கிடையில், தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சரியான கண்காணிப்பு இல்லாததால், பக்தர்கள் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த காலணிகளை, சிலர் குறிவைத்து திருடிச்சென்று விடுவதாகக் கூறப் படுகிறது.

    இந்நிலையில், திருமலையில் நான்கு மாட வீதிகள் அருகே அமைந்துள்ள காலணி காப்பகத்தில், செருப்புகளை சில பக்தர்கள் வைத்து, அவற்றுக்கு பூட்டுப் போட்டு சென்றனர்.

    இதை பார்த்த சிலர், 'இவ்வளவு பெரிய கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகத்தால் செருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லையா?' என கேள்வி எழுப்பினர்.

    • ரத சப்தமி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.

    ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

    • இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ‘எக்ஸ்போசாட்' செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது.
    • ‘போலிக்ஸ்’ என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது.

    விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்டமிட்டு இருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்தது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த மாதம் 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது விண்வெளி தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட 'எக்ஸ்போசாட்' செயற்கைகோள், பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இதில் இந்திய எக்ஸ்ரே 'போலரிமீட்டர்' (போலிக்ஸ்) மற்றும் எக்ஸ்ரே 'ஸ்பெக்ட்ரோஸ்கோபி' ஆகிய 2 கருவிகள் உள்ளன.

    இதில் போலரி மீட்டர் அறிவியல் ஆய்வுகளை தொடங்கி உள்ளது. குறிப்பாக 'போலிக்ஸ்' என்ற கருவி வாயுக்களில் உள்ள மேகக்கூட்டங்கள் குறித்து ஆய்வு செய்து விண்மீன் மண்டலத்தில் உள்ள தரவுகள், புகைப்படங்களை சேகரித்துள்ளது.

    எக்ஸ்போசாட் செயற்கைகோளை பயன்படுத்தி பெறப்பட்ட தரவு மற்றும் அளவீடுகள் மிகவும் பிரகாசமான விண்வெளி பொருட்களைப் படிக்க பயன்படுத்தப்படும். அத்துடன் எக்ஸ்ரே துருவமுனைப்பு துறையில் அடித்தளத்தை அமைக்கும்.

    அதே நேரம் 'ஸ்பெக்ட்ரோஸ்கோபி' கருவி விரைவில் பணியை தொடங்கும் வகையில் விஞ்ஞான செயல்பாடுகளுக்கு இப்போது தயாராக உள்ளது. போலிக்ஸ் கருவி பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள எக்ஸ்ரே வானியல் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த கருவியானது இந்திய தொழில்துறையின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது' என்றனர்.

    • கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார்.
    • இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார். அங்கு பொதுமக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத வகையில் கபடி களத்தில் இறங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. புடவையை சற்று ஏற்றி கட்டி, கோட்டைத் தொட்டுக்கும்பிட்டு, இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
    • தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    திருமலை:

    திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.

    மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.

    ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    • படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
    • அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
    • தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷர்மிளா நகரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் ரோஜாவை ஊழல் ராணி என விமர்சித்தார்.

    இதையடுத்து மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சிகள் ஒரே கிளையில் சாய்ந்து கொண்டு இருக்கின்றன.


    ஷர்மிளா கூறிய தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்.

    ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி மறைவிற்கு பிறகு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரது பெயரை மக்களின் மனதில் நிலை நிறுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    ஒய்.எஸ்.ஆர். மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதங்கள் ஜெயிலில் அடைத்த காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கத்தினராக ஷர்மிளா உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
    • ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

    இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    • திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
    • ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.

    வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.

    ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.

    சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×