விசில் பறக்க கபடி விளையாடிய ரோஜா

கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார். இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.
விசில் பறக்க கபடி விளையாடிய ரோஜா
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார். அங்கு பொதுமக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

இதனால் உற்சாகம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத வகையில் கபடி களத்தில் இறங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. புடவையை சற்று ஏற்றி கட்டி, கோட்டைத் தொட்டுக்கும்பிட்டு, இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com