என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் நர்ஸ் சஸ்பெண்டு"

    • ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
    • ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

    இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    ×