என் மலர்
ஆந்திர பிரதேசம்
- விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
- குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர்.
பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புலி வர்த்தி வெங்கடமணி பிரசாத் என்கிற நானி வேட்பாளராக போட்டியிட்டார்.
தேர்தலில் நானி வெற்றி பெற வேண்டும் எனவும், நானி தேர்தலில் வெற்றி பெற்றால் நடந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவதாக தாமல செருவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊட்ல வங்க கிராம மக்கள் ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் நானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தங்களது பிரார்த்தனை நிறைவேறியதால் ஏழுமலையானுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக ஊட்ல வங்க கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து விட்டு நேற்று நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.
நடைபயணமாக சென்ற கிராம மக்களுக்கு எம்.எல்.ஏ. நானியின் மனைவி புலிவத்தி சுதா ரெட்டி தாமல செருவில் அன்னதானம் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
- திருப்பதியில் நேற்று 82,886 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
இதனால் கல்யாண வேதிகா வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். இன்று வார விடுமுறை இறுதி நாள் என்பதால் நேற்று மாலை முதல் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
நீண்ட நேரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததால் முதியவர்கள் குழந்தைகள் அவதிப்பட்டனர். இதனால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், டீ உள்ளிட்டவைகளை வழங்கினர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 82,886 பேர் தரிசனம் செய்தனர். 44, 234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்.
- 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து பீய்த்து அடித்த எரிவாயு.
ஆந்திராவில் விளை நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 மீட்டர் உயரத்திற்கு, எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து இதுவரை தண்ணீர் மட்டுமே வந்த நிலையில், திடீரென எரிவாயு வந்ததாக விவசாயிகள் தகவல் வெளியானது.
சம்பவம் குறித்து, ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசராணை நடைபெற்று வருகிறது.
- திருப்பதியில் நேற்று 66,782 பேர் தரிசனம் செய்தனர். 36,229 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக பதவி ஏற்ற உடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு தரிசனத்திற்கு வருவதால் முதன்மை செயலாளராக இருந்த தர்மா ரெட்டி கட்டாய விடுப்பில் சென்றார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சியாமளா ராவ் முதல்நிலை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருப்பதியில் நேற்று 66,782 பேர் தரிசனம் செய்தனர். 36,229 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச தரிசனத்தில் 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
- கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.
திருப்பதி:
ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம்.
கண்ணியத்துடன் எழுந்து நிற்போம்.
மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
- கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் குமாரசாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார். மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்து வெற்றி பெற வெங்கடேஸ்வராவின் ஆசிர்வாதம் பெற வந்தேன் என்றார்.
- சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
- பவன் கல்யான் துணை முதல்வராக பதவி ஏற்றார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்டட்டுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு பொது நிர்வாகத் துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்துள்ளார்.
அதன்படி, பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் பவன் கல்யானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். அவருக்கு, மனிதவள மேம்பாடு, ஐ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அச்சன் நாயுடுவுக்கு விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.
உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதாவிற்கு ஒதுக்கீடு.
சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவுக்கு ஒதுக்கீடு.
ஆந்திரா நிதியமைச்சராக பையாலுவா கேசவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் நிம்மலா ராம நாயுடுவுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு.

- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து பந்துமில்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இதில் 10 பேர் இருந்தனர்.
புதுச்சேரியில் இருந்து மற்றொரு லாரி பீமாவரம் நோக்கி வந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
- ஆந்திராவை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவேன்.
திருப்பதி:
ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார்.
இதையடுத்து நேற்று மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருப்பதி மலைக்கு சந்திரபாபு நாயுடு வந்தார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
திருப்பதி கோவிலுக்குச் சென்ற ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநில மக்கள் அளித்த வெற்றியை நான் இதுவரை பார்த்ததில்லை. மாநிலத்தில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளது.
இந்த மாநிலம் செழிக்க பிரார்த்தனை செய்தேன். மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். இன்று முதல் நல்லாட்சி ஆரம்பமாகிறது. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன்.
2047-க்குள் தெலுங்கு மக்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவார்கள். ஆந்திராவை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவேன்.
அரசியல் சதிகளை சகித்துக்கொள்ள மாட்டோம். குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நல்லவர்களை பாதுகாப்போம், கெட்டவர்களை தண்டிப்போம். திருமலையில் இருந்து சுத்திகரிப்பு ஆட்சியைத் தொடங்குவேன்" என்று கூறினார்.
- நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
- மலைப்பாதையில் கட்டப்பட்டுள்ள அனைத்து திரைகளும் உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பதி:
ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார்.
இதையடுத்து நேற்று மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருப்பதி மலைக்கு சந்திரபாபு நாயுடு வந்தார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானை தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையொட்டி ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதே போல் திருப்பதி மலைப்பாதையில் திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி பார்க்கும் இந்த செயலில் அதிகாரிகள் யாரும் ஈடுபடக்கூடாது.
மலைப்பாதையில் கட்டப்பட்டுள்ள அனைத்து திரைகளும் உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மலை பாதையில் கட்டப்பட்டிருந்த திரைகள் உடனடியாக அகற்றப்பட்டன.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையொட்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திருப்பதி மலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
- சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழக பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா,மகாராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஏனைய அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
முதலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார். பவன் கல்யாணும் அவரது அண்ணன் சிரஞ்சீவியும் மோடியை மேடைக்கு நடுவே அழைத்து வந்து கைகளைக் கோர்த்து உயர்த்திக்காட்டினர்.
அவர்கள் இருவருடனும் மோடி குதூகலமாக உரையாடினார். அப்போது ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் மேடைக்கு வரவே சந்திரபாபு நாயுடு மோடியை அவர்களிடம் அழைத்துச்சென்றார். ரஜினிகாந்த்துடன் கை குலுக்கிய மோடி, லதா ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார். பின்னர் அருகில் நின்றிருந்த பாலகிருஷ்ணா, தமிழிசை ஆகியோருக்கு உற்சாகமாக வணக்கம் வைத்தார். பிரபலங்கள் பலர் ஓரே மேடையில் நிறைந்திருந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






