என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் லாரிகள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி
    X

    ஆந்திராவில் லாரிகள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி

    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து பந்துமில்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இதில் 10 பேர் இருந்தனர்.

    புதுச்சேரியில் இருந்து மற்றொரு லாரி பீமாவரம் நோக்கி வந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×