என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
    • விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.

    நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தமாகும். இந்த ரத்தம் ஒவ்வொரு உறுப்புக்கும் சீராகச் சென்றடையாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

    அவசர கால சிகிச்சைகளில் விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சையின்போது ரத்தம் தேவைப்படும்போது, ரத்த வகை தெரியாதவர்களுக்கு O எதிர்மறை (O-) வகை இரத்தம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உலகளாவிய இரத்த வகையாகக் கருதப்படுகிறது. சரியான இரத்த வகையைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது.

    ஒருவருக்குப் பொருந்தாத இரத்த வகையைச் செலுத்தினால், அது கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    ரத்த வகை Rh ஆன்டிஜென் அல்லது Rh-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது நேர்மறை (+) அல்லது எதிர்மறை (-) என வகைப்படுத்தப்படுகிறது. 

    இரண்டு அமைப்புகளின் கலவையால் எட்டு [A+, A, B+, B, AB+, AB, O+, O] அடிப்படை இரத்த வகைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ரத்த தானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளின்போதும், விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.

    ஒருவருக்கு எந்த ரத்த வகை உள்ளதோ, அதே ரத்தம்தான் அவருக்குச் சேரும். அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், தானம் செய்கிறவர் என இருவரின் ரத்த வகையும் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் எடுக்கும்போதும் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படும்போதும் ரத்த வகையைக் குறிப்பிட வேண்டும்.

    • பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    • ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

    பாதாம்: பாதாமில் இருக்கும் கலவைகள் எல்.டி.எல். எனப்படும் தீயக் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மற்றும் இதயம், ரத்த நாளங்களில் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.

    நல்ல கொழுப்புகள்: நல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

    மீன்: கடல் உணவு எனப்படும் "சீ புட்ஸ்", கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    ஓட்ஸ்: அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

    • ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    • மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.

    ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் செயலிழந்ததால் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    கல்லீரல், கல்லீரல் நோய்களின் தீவிரம், சரியான சிகிச்சையும் முக்கியத்துவமும்

    கல்லீரல் கொழுப்பு நோய் இரண்டு வகைகளாக உள்ளது:

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்:

    அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. மது, உடலுக்கு தேவையற்ற நச்சாக செயல்படுவதால், கல்லீரல் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, கொழுப்பு படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் மோசமடைந்தால், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாகலாம்.

    ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்:

    மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    தொடக்கத்தில் இந்நோய் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்றவை தோன்றலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    கல்லீரல் வீக்கம்:

    கல்லீரல் வீக்கம் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மூலமாகவோ, ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்துவதாலோ பரவலாம். மேலும், அதிக மது அருந்துதல் மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்வதும் இந்நோயை உருவாக்கலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவை இந்நோயை குணப்படுத்துவதாக நம்புவது தவறு, ஏனெனில் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

    கல்லீரல் சிரோசிஸ்:

    கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி, நிரந்தரமாக சேதமடையும் நிலை. இதை குணப்படுத்த எந்த நாட்டு மருந்தும் இல்லை. இந்நிலையில் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு.

    கல்லீரல் செயலிழப்பு:

    கல்லீரல் செயலிழப்பு என்பது நோயின் இறுதி மற்றும் மிக ஆபத்தான நிலை. இதற்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளை உருவாக்கலாம்.

    • உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது.
    • இதய உந்துதலை மேம்படுத்துகிறது.

    கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், புற தமனி நோய், வாத இதய நோய், பிறவி இதய நோய், ஆழமான நரம்பு ரத்த உறைவு மற்றும் நுரையீரல் தக்கையடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களை கட்டுப்படுத்த மற்றும் நிர்வகிக்க உடல் தகுதியுடன் இருப்பது முக்கியம்.

    உடற்பயிற்சி இதய தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. பி.எம்.ஐ.யை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதிக கொழுப்பு, உயர் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தமனி சேதமாவதின் அபாயத்தை குறைக்கிறது.

    மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது. வெவ்வேறு வகையான உடற்பயிற்சிகள் இருதய நோய்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ் விளையாடுதல் மற்றும் கயிறு குதித்தல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் சுழற்சியை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைகிறது. இது இதய உந்துதலை மேம்படுத்துகிறது. நீரிழிவு கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    உடல் பருமன், அதிக வயிறு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு பயிற்சி உதவுகிறது. எதிர்ப்பு பயிற்சி கெட்டகொழுப்பை குறைக்கிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. கை எடைகள், டம்ப்பெல்ஸ் அல்லது பார்பெல்ஸ், வெயிட் மெசின்கள், புஷ்-அப்கள், குந்துகைகள் மற்றும் சின்-அப்கள் போன்ற இலவச எடைகளுடன் வேலை செய்வது எதிர்ப்பு பயிற்சிக்கான சிறந்த தேர்வாகும்.

    நீட்சி, நெகிழ்வு மற்றும் சமநிலை நீட்டித்தல் போன்ற நெகிழ்வு தன்மை உடற்பயிற்சிகள் இருதய நோய் நிலைகளுக்கு நேரடியாக பங்களிக்காது. ஆனால் இது நெகிழ்வானதாகவும், மூட்டு வலி, தசைப்பிடிப்பு மற்றும் பிற தசை பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

    • கணையம் உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.
    • புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.

    கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.

    இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என்சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

    உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன.

    அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது. அதிக கொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்கு காரணமாக வாய்ப்பு உள்ளது.

    • ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.
    • தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான்.

    உடலில் எந்த உறுப்பு செயல் இழந்தாலும் மருத்துவ உதவியுடன் மனிதன் உயிர் வாழ வாய்ப்பு உண்டு. மூளை செயல் இழந்தால்கூட (மூளைச்சாவு அடைதல்) உயிர் வாழ முடியும். ஆனால் இதயம் இயங்குவது நின்றுபோனால் மரணம்தான். இதனால்தான் எந்த உறுப்புக்கும் இல்லாத முக்கியத்துவத்தை இதயம் பெறுகிறது.

    • மார்பின் இடது பக்கத்தில் கையளவு அமைந்துள்ள இதயம், தசைகளான 4 அறைகளை கொண்டது. மூன்றடுக்கு தசைச் சுவர்களுடன்கூடிய இதயம் 'பெரிகார்டியம்' என்ற பையினுள் அமைந்துள்ளது. இதயத்தின் எடை ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் வரையிலும், பெண்களுக்கு 250 முதல் 300 கிராம் வரையிலும் இருக்கும்.

    • உடலின் பல்வேறு பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு வரும் ரத்தம் நுரையீரல் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்துக்கு வந்து அங்கிருந்து உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    • இதயத்தில் உள்ள நான்கு அறைகளும் சுருங்கி விரிவதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும் பணி இடைவிடாமல் நடைபெறுகிறது.

    • அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் ரத்தம் இதயத்தில் இருந்து உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயு மற்றும் ஊட்டசத்துகள் கிடைக்கின்றன.

    • இதயம் சுருங்கி விரியும்போது 'லப்-டப்' என்ற ஓசையுடன் எழும் சத்தம்தான் இதயத்துடிப்பு எனப்படுகிறது.

    • ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம் 7,200 லிட்டர் அளவு ரத்தத்தை 'பம்ப்' செய்கிறது.

    • 66 வயது வரை நிரம்பிய ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏறக்குறைய 250 கோடி தடவை இதயம் துடிக்கும்.

    • ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.

    • தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான். அப்போது துடிக்கத் தொடங்கும் இதயம், கடைசியில் மூச்சு நின்று உயிர் உடலை விட்டு பிரியும் வரை தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கிறது.

    • அந்த வகையில் நம் உடலில் ஓய்வின்றி உழைக்கும் ஒரே உறுப்பு இதயம்தான். அது ஓய்வெடுக்கத் தொடங்கினால். வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று அர்த்தம்.

    • பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகள், இதய தசைகள் மற்றும் வால்வுகளின் ஏற்படும் நோய்கள், மேலும் இதயத்துடன் நேரடி இணைப்பை கொண்ட ரத்தக்குழாய்களில் உண்டாகும் நோய்கள் காரணமாக இதயநோய் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதைத்தான் மாரடைப்பு என்கிறோம். தக்க சமயத்தில் இதை கண்டறிந்து, அடைப்பை நீக்கி சரி செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்படுகிறது.

    • முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
    • இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

    சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

    நச்சுக்களை அகற்றுபவை:

    நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

    எலும்புகளை வலுவாக்குபவை:

    இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

    கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

    அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

    ஆரோக்கியமான மேனி:

    பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

    • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
    • ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். இது சுத்தமான சுவையான பானம் ஆகும். இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.

    அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தை தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதை சரி செய்யும்.

    ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களை குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

    இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்பு தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுத்த ப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரை சத்துடன் தாது பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

    • தேனில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும்.
    • தேனீக்கள், தேனில் என்சைம்களை சேர்க்கின்றன.

    தேன் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப்போகாது என்பார்கள். அது தூய்மையானதாகவும், முறையாக மூடி பாதுகாக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய கல்லறைகளுக்குள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய தேன் ஜாடிகளை கண்டுபிடித்தனர். அவை கெட்டுப்போகாமல் ருசிக்கக்கூடிய நிலையிலேயே இருந்தது. தேன் கெட்டுப்போகாமல் இருக்க என்ன காரணம் தெரியுமா?

    தேனில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். அதாவது குறைந்த நீர் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். அதனால் பாக்டீரியா, பூஞ்சை வளர அனுமதிக்காது. அத்துடன் தேன் இயற்கை அமிலத்தன்மையை கொண்டிருக்கும். அது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுத்துவிடும். தேனீக்கள், தேனில் என்சைம்களை சேர்க்கின்றன. அவை ஹைட்ரஜன் பெராக்சைடை உற்பத்தி செய்கின்றன. இது இயற்கை கிருமி நாசினியாகும். நுண்ணுயிர் வளர்ச்சியை மேலும் தடுத்துவிடும். இதுபோன்ற காரணங்கள் தேனை கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றன.

    • பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும்.
    • குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும்.

    காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல் துலக்கும் பழக்கத்தைத்தான் அனைவரும் பின்பற்றுவோம். வாய் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு பல் துலக்குவது அவசியமானது. ஆனால் பல் துலக்குவதில் காட்டும் ஆர்வத்தை பலரும் பிரஷ் விஷயத்தில் காண்பிப்பதில்லை. நிறைய பேர் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பார்கள். அதில் இருக்கும் இழைகள் தேய்ந்து போகும் வரை உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    பல் மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். தேய்ந்தோ, உடைந்தோ போய்விடும். அதனை பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இருக்கும் உணவுத்துகள்களை அகற்றும் செயல்திறன் குறைந்து போகும். ஈறுகளுக்கும் சேதம் ஏற்படுத்தும். ஏனென்றால் பிரெஷில் இருக்கும் இழைகள் நேராக, தொய்வடையாமல் இருந்தால்தான் பற்களுக்கு இடையேயும், ஈறு பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும். பழைய இழைகள் ஈறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்யும்.

    அத்துடன் பழைய இழைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சை காளான்கள் படியக்கூடும். அவை வாய்வழி சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பற்களில் கிருமிகள் பெருக காரணமாகி ஈறுகளை சிதைக்கக்கூடும். பிரஷ் இழைகள் தேய்ந்தாலோ, சேதம் அடைந்தாலோ 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனே மாற்றிவிடுவதுதான் பற்களுக்கு பாதுகாப்பானது.

    குறிப்பாக குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும். பிரஷ்களை மூடிய நிலையில் வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரப்பதம் பாக்டீரியா, வைரஸ் படிவதற்கு காரணமாகிவிடும். காற்றோட்ட சூழல்தான் சிறந்தது.

    • தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும்.
    • காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது.

    காலை உணவு என்பது அன்றைய நாளின் முதல் உணவு மட்டுமல்ல, முக்கியமான உணவும் கூட. நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் அந்த உணவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும். காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். ஏனெனில் இன்சுலின் உணர்திறன், குளுக்கோஸ் செயல்திறனை பாதிக்கும். அதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தினமும் காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை அதிகமாக சாப்பிட வைத்துவிடும். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்வதோடு உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் காலை உணவை உட்கொள்வது சிறந்தது. அந்த உணவில் புரதம், நார்ச்சத்து நிறைய இடம் பெறுவது நல்லது. காலை உணவைத் தவிர்ப்பது நாள் முழுவதும் எரிச்சல் உணர்வை உண்டாக்கலாம். உடலில் செரோடோனின் அளவு குறைவது அதற்கு காரணமாக அமைந்திருக்கும்.

    • வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ் உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது.
    • உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர்.

    காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 பேட் ஆசிட்என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது.

    உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும். சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நல்லது.

    வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ் உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன் உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது.

    எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3பேட் ஆசிட் உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தேய்த்து இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தேய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது.

    இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 பேட் ஆசிட் உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது.

    ×