என் மலர்
நீங்கள் தேடியது "தைராய்டு சுரப்பி"
- தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம்.
- அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும். உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
- தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்
- தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது.
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது. தைராய்டு சுரப்பி எங்கே இருக்கிறது? தைராய்டு என்பது லத்தீன் சொல். அதனுடைய பொருள் கவசம் என்பதாகும்.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். பெண்கள் சோக்கர் எனப்படும் நெக்லஸ் அணியுமிடமே தைராய்டு சுரப்பியின் இடம். மூச்சு குழலின் மேல் ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் ஒட்டி இருக்கும் கவசம் என்று சொல்லலாம்.
எப்படி வேலை செய்கிறது?
தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும்.
உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
தைராய்டு நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
நம்முடைய உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எந்த சத்துமில்லாமல், வயிற்றை அடைக்கும் குப்பை உணவுகளால் அயோடின் சத்து குறைபாடு அதிகரித்து விட்டது. தைராய்டு எதிர்ப்பு நோய்களும் அதிகமாகிவிட்டன. இன்னொரு காரணம் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால், கண்டுபிடிப்பதும் அதிகமாக உள்ளது.
தைராய்டு நோய் வகைகள் என்ன?
தைராய்டு குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டு எனப்படுகிறது. இதுதான் மிகவும் அதிகமாக காணப்படும் தைராய்டு நோய். தேவையை விட அதிகமாக சுரப்பது ஹைப்பர் தைராய்டு எனப்படுகிறது.
என்ன அறிகுறிகள் இருக்கும்?
ஹைப்போ தைராய்டு: மந்தநிலை, எதையும் சுறுசுறுப்பாக இவர்களால் சிந்தித்து செய்ய முடியாது. எப்போதும் ஒரு சோம்பேறித்தனம் இருக்கும். தலைமுடி கொட்டுதல், உடல் முழுவதும் நீர் அடித்தல் (வீக்கம்), குறிப்பாக கால்களில் வீக்கம், இதயத்துடிப்பு குறைவது, மூச்சு விடுவதில் சிரமம், ஜீரண மண்டலத்தில் மந்த தன்மை - பசி எடுக்காது. சில நாட்களுக்கு ஒரு முறையே மலம் கழிப்பது, பெண்களாக இருந்தால் அவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பது பல மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாதவிடாய் உண்டாகும். குழந்தை கருத்தரிப்பது தடைபடும். தடைபடலாம் ஆண்களுக்கும் விந்தணுக்களை பாதிக்கும். எடை அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். பொதுவாக எதிர்ப்பு சக்தி குறையும்.
ஹைப்பர் தைராய்டு
தைராய்டு அதிகமாக சுரந்தால் அவர்கள் இளைத்துக் கொண்டே போவார்கள். கண்முழி துருத்திக் கொண்டிருக்கும். இதய துடிப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். கரு தங்குவதில் சிக்கல் ஏற்படும்.

இதை எப்படி கண்டுபிடிப்பது?
தைராய்டு ரத்த பரிசோதனை செய்தாலே போதும். தேவைப்பட்டால் தைராய்டு ஸ்கேன் மற்றும் கட்டி எதுவும் இருந்தால் அதிலிருந்து சதை எடுத்து பயாப்ஸி செய்யப்படும்.
எப்படி சரி செய்வது?
அயோடின் சத்து குறைபாட்டால் வரும் தைராய்டுக்கு அயோடின் சத்து மாத்திரைகள் தரப்படும். தைராய்டு மாத்திரையும் தரப்படும். தைராய்டு மாத்திரை காலையில் சாப்பிடும் முன்பாக எடுக்க வேண்டும். அப்போதுதான் ரத்தத்தில் நன்றாக சேரும்.
ராதா 35 வயது பெண்மணி
ரத்தத்தில் ஹீமோகுளோபின், ஏறவே இல்லை. தலைமுடி வேறு, வேர் வேராக கொட்டிக் கொண்டிருந்தது. பிறகு அவருக்கு தைராய்டு குறைவாக சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறு மாதமாக மாத்திரை எடுக்கிறார்.
காலை எழுந்ததும் 50 மைக்ரோகிராம் தைராய்டு மாத்திரையை விழுங்கி விட்டு அரை மணி நேரம் கழித்து அவருடைய காபியை குடிப்பார்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவர் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்யும்படி கூறியிருக்கிறார். நேற்றுதான் டெஸ்ட் எடுத்திருந்தார். இன்று மொபைலில் அவருக்கு ரிப்போர்ட் வந்திருந்தது.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஏனென்றால் வந்திருந்த மூன்று தைராய்டு எண்ணிக்கைகளும் ( டி3, டி4, டி.எஸ். ஹெச்)சரியான லெவலில் இருந்தன.
சரி! நமக்கு தைராய்டு சரியாகி விட்டது! இனி மாத்திரை வேண்டாம் என்று மாத்திரை டப்பாவை எடுத்து எங்கோ தூக்கி எறிந்தவர் தான்.
மொத்தமாக மறந்துவிட்டார். ஒரு மாதம் ஓடி விட்டது.
மெதுவாக பழைய பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. முடி மீண்டும் கொட்ட ஆரம்பித்தது.
இப்போது மருத்துவரிடம் சென்றார்.
"டாக்டர்! நீங்க கொடுத்த மருந்து கொஞ்ச நாளைக்கு தான் வேலை செஞ்சு இருக்கு. இப்ப எனக்கு எல்லா பிரச்சனையும் திரும்ப ஆரம்பிச்சிருச்சு. "
என்று வருத்தத்துடம் அங்கலாய்த்தார்.
மருத்துவர் விளக்கியதும் தான் அவருக்கு புரிந்தது. தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு முழுமையாக சரியாகாது. அவர்கள் தொடர்ந்து தைராய்டு மாத்திரைகள் எடுக்க வேண்டும். தைராய்டு பரிசோதனையில் எல்லாம் சரியாக வந்தால் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நீங்கள் எடுக்கும் மாத்திரை போதுமான அளவு உள்ளது என்பதுதான். தைராய்டு சரியாகிவிட்டது என்று அல்ல.
எனவே, தைராய்டு டெஸ்ட் எடுத்தால் மாத்திரைகளை, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிறகு முடிவு செய்யுங்கள்!
தைராய்டு குறித்த உணவுகள், அடுத்த வாரம்!
- அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது.
- கீழக்கரை அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கீழக்கரை
கீழக்கரை முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் (50). திருமணம் ஆகவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்டு சுரப்பி ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில்கீழக்கரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தைராய்டு சுரப்பி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கீழக்கரை அரசு மருத்துவ மனையில் குருவம்மாள் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரத்குமார்.
மயக்க மருந்து நிபுணர்கள் ராஜேஸ்வரன். மேகலா ஆகியோர் தலைமையில் 3 மணி நேரம் ஆபரேஷன் நடத்தி சுரப்பியை அகற்றினர். தலைமை செவிலியர்கள் ஆனந்தி. சுமதி ஆகியோர மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குருவம்மாள் கூறுகையில், 2 வருட காலமாக இந்த தைராய்டு சுரப்பி பிரச்ச னையால் கடும் அவதிக்குள்ளா னேன்.
வசதியின்மை யால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்து வந்தேன். கீழக்கரை அரசு மருத்துவ மனையில் தற்போது நிரந்தர தீர்வு கிடைத்து ள்ளது. அறுவை சிகிச்சை செய்து சுரப்பிஅகற்றிய பின்பு தற்போது குண மடைந்துள்ளேன்.
கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.






