என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பெற்றோர் தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.
பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.
மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.
இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.
எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது. இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.

எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.
அரவணைக்காமல் இருத்தல் ஒருவரையொருவர் அன்னியோன்யமாக ஆரக் கட்டித்தழுவி அரவணைத்துக் கொள்வதால், மனது மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதமான நன்மைகள் கிட்டுகின்றன என அறிவியலாளர்கள், அரவணைப்பின் முக்கியத்துவத்தை நிரூபித்து உள்ளனர். கட்டித்தழுவிக்கொள்வதால் வெளிப்படையாக ஏராளமான பயன்கள் உண்டாகின்றன. ஒருவேளை, நீங்கள் உங்கள் குழந்தையை அரவணைப்பது இனிய அனுபவம் என ஏற்றுக்கொள்ளலாம்.
தங்க நிமிடங்களைத் தவற விடுதல் ‘நீங்கள் சிறந்த பெற்றோர்’ என்ற பெயர் எடுப்பதற்கு, உங்களுடைய வாரிசுகளின் பால்ய காலங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து வைப்பது உதவும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இவ்வாறு நீங்கள் செய்யாமல் விடுவதால் அது உங்களுடைய மழலைகளின் மன வலிமை, நல்ல பழக்க வழக்கங்கள் அல்லது உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காது.
குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.

பிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.

* சரியான உணவு உட்கொள்ளாவிடில் குழந்தைக்கான பால் சுரத்தல் நின்றுவிடும். பின் குழந்தையும் பசியில் இருக்கும். குழந்தைகான பால் பாதிக்காதவாறு உங்கள் டயட்டைப் பின்பற்றுங்கள். ஒரு நாளைக்கு 2000 கலோரிகளுக்குக் குறைவாக உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள். பசித்தால் பழங்கள், சாலட், கோதுமை ரொட்டி, தயிர், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
* பால் கொடுப்பதிலும் உடல் எடைக் குறையும் என்பதை பல ஆராய்ச்சிகளிலும் இதை நிரூபித்துள்ளனர். பிரசவத்திற்குப்பின் உடல் எடையைக் குறைக்க இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. நீங்கள் பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு 2800 - 3000 கலோரிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கலோரிகள் ஊட்டச்சத்தான உணவுகளால் வரவேண்டும். காய்கறிகள், பழங்கள், சிகப்பு அரிசி, பால் போன்ற சத்தான உணவுகளை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவித்து விடுங்கள். அவை உங்கள் உடல் எடைக்கும் அதிகரிக்கும். மேலும், பால் கொடுப்பதாலும் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
* நார்சத்து, புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். பால், பன்னீர், தயிர் போன்றவை புரதச் சத்து நிறைந்தவை அதேசமயம் கால்சியம் சத்தும் அதிகம். இது உங்கள் குழந்தையின் எலும்பு உறுதிக்கும் உதவும். நட்ஸ் வகைகளையும் அதிகமாக உண்ணுங்கள்.
* பால் கொடுப்பதால் உடலில் உள்ள நீர் உடனடியாகக் குறைந்துவிடும். அதனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம். போதுமான தண்ணீர் அருந்துவது உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் வேகமாக நிகழும். அதனால் குறைந்தது 8 - 10 கிளாஸ் தண்ணீர் தினமும் அருந்துங்கள்.
* தினமும் உங்கள் முடிந்த அளவு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். வயிற்று பகுதியை குறைக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்த செய்து வருங்கள்.

வெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடியைப் பராமரிக்கலாம்.
* வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும். சூரிய வெளிச்சத்தால் தலைமுடி நேரடியாக பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.
* வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
* உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
* தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.
* பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூந்தல் சிக்கல், வியர்வையால் ஈரப்பதமாக இருந்தாலும் இந்த சீப்பு பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா - 1 கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை பழம் - பாதி

செய்முறை :
புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும்.
சூப்பரான புதினா கருப்பட்டி ஜூஸ் ரெடி.
புதினா - 1 கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை பழம் - பாதி
கருப்பட்டி - சுவைக்கு

செய்முறை :
புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும்.
சூப்பரான புதினா கருப்பட்டி ஜூஸ் ரெடி.
மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய விஷயம். மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
அமைதியான சூழலில், மெல்லியக் காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி ஒருநிலையில் இருந்தால்தான் அந்த தியானம் முழுமையடையும். தியானம் மதத்தின் அடிப்படையிலும் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
சிலர் தியானத்தின் போது கடவுளிடம் பேசியதாகக் கூறுவார்கள். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள். உண்மையில் அறிவியல்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம்தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர். அவருடன் பேசினேன் என்பது அவர்கள் தியானத்தின் ஆழத்திற்குள் சென்றதன் வெளிப்பாடு என்றே சொல்ல முடியும்.
ஆழ்ந்த தியானத்திற்குப்பின் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதனால் யோகா, தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதை குறிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
அதேபோல் உடல் ரீதியாகவும் தினசரி உடல் வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளும் நீங்கும். அதில் மனதின் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதாகவும் இதனால், மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தியானம் சிறந்தது என்பதையும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் வராது.
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல், மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என ஆய்வு கூறுகிறது.

துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும்.
கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டு தேர்வு வைப்பதில்லை வாழ்க்கை, தேர்வு வைத்து விட்டு பாடம் கற்றுத்தருவதுதான் வாழ்க்கை. அது சொல்லிக் கொடுக்கும் பாடத்தை வேறு யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. வாழ்க்கை என்பது அகன்று விரிந்து ஆழம் கொண்டிருக்கும் கடல் போன்றது.
ஒவ்வொருவரும் அதன் கரையில் நின்று அதன் ஆழ, அகலங்களை அளவிட்டு விடலாம் என எண்ணுகின்றனர். சிலர் அதை அளவிட முடியாது என்று விலகி விடுகின்றனர். சிலர் தாங்கள் அளந்த சின்னச் சின்ன விஷயங்களை உண்மை என உலகிற்கு உரைக்கின்றனர். அப்படி அவர்கள் சொன்ன சில தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்துத்தான் நாம் இன்று வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். இன்னொருவர் கொடுத்த விளக்கத்தை வைத்து வாழ்க்கைக்கான அர்த்தத்தைத்தேட முயன்றால் உண்மையான அர்த்தத்தை உணர முடியாது.
வாழ்தல் என்ற சொல் நுட்பமான பொருள் பொதிந்தது. ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதினாலேயே அவர் வாழ்கிறார் என்று சொல்லி விட முடியாது. உயிரோடு இருப்பது வேறு. உயிர்ப்போடு இருப்பது வேறு. நேற்று இருந்ததை விட இன்று ஒரு படி உயர்தல் என்பதே வாழும் நிலை. வளர்வதுதான் வாழ்வு. வளர்வது என்பது பொருளாதார உயர்வை மட்டும் குறிப்பது இல்லை. மனதளவில் ஆன்ம மேம்பாட்டில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டிருப்பதுதான் உண்மையான வாழ்வாகும்.
இருத்தலுக்கும் வாழ்தலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கைதி சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறான். அவனிடம் “இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்” என்று கேட்டால், “சிறையில் வாழ்ந்தேன்” என்று சொல்லமாட்டான், இருந்தேன் என்றே சொல்லுவான். சிறையில் அவன் விருப்பப்பட்டு மனத் திருப்தியுடன் வாழ மாட்டான். அதனால்தான் அவன் வாழ்ந்தேன் என்று சொல்லாமல் இருந்தேன் என்று சொல்கிறான். வாழ்க்கை பிறரை சார்ந்து அமையக் கூடாது. நம் வாழ்க்கை ஓடத்தின் திசையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். துடுப்பை நாம் அசைத்தாலும், அசைக்காவிட்டாலும் ஓடத்தின் திசை நம் தீர்மானமாகவே இருக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகே வாழ்க்கை ஆரம்பமாகும் என்று கற்பனை செய்கிறார்கள். படித்தவர்கள் ஒரு வேலை கிடைத்தால் போதும் அதன் பிறகு வாழ்க்கை வசப்படும் என்கிறார்கள். வேலைக்குச் செல்கிறவர்கள் நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்து விட்டால் வாழ்க்கை அமைந்து விடும் எனக் கனவு காண்கிறார்கள். பிறகு அடிப்படைத்தேவை அனைத்தையும் பெற்று விட்டால் போதும், அப்போதே என் வாழ்க்கை ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை. வாழ்க்கையின் தொடக்கத்தை ஒத்திப்போட்டு, ஒத்திப்போட்டு வாழ்க்கைக்கு பதில் மரணத்தையே சந்திக்கிறார்கள்
மரணத்தின் போது கூட ஏமாற்றத்தை மறைக்க மறு பிறப்பில் வாழ்வோம் என்று முணுமுணுக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதோ ஆரம்பமாகிவிட்ட ஒன்று. நம் அனுமதியின்றியே நம் வாழ்க்கை தொடங்கி விட்டது. இனிமேல் தான் ஆரம்பம் என்று ஒத்திப்போடுவது வேடிக்கையான வினோதம். நாடகத்திற்கு ஒத்திகை உண்டு. ஆனால், வாழ்க்கைக்கு ஒத்திகையே கிடையாது. ஒத்திகை இல்லாத, இடைவெளி இல்லாத, நிறுத்த முடியாத நாடகம்தான் வாழ்க்கை.
வாழ்க்கை புறப்பொருள் சார்ந்து உருவாக்கப்படும் சித்தாந்தங்களில் இல்லை. அகத்தைச் சார்ந்து உருவாக்கப்படும் அரை குறை வேதாந்தங்களிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒவ்வொரு சம்பவத்திலும் இருக்கிறது. பொருள் சார்ந்து இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் பொருள் ஈட்டித்தான் ஆக வேண்டும். நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாவிட்டால் வாழ்தலை பற்றி சிந்திக்கவே முடியாது. ஆனால் செல்வம் ஈட்டுவதிலேயே எந்திரத்தனமாக மாறி, முழு வாழ்க்கையையும் தொலைத்து விடக்கூடாது. போட்டி நிறைந்த உலகில் ஓடித்தான் ஆக வேண்டும். குரோதம், பொறாமை போன்ற எண்ணங்கள் அற்றதாய் நம் மனதை ஆக்கிக்கொண்டு அந்த ஓட்டத்தையும் ஒரு அனுபவமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
எந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக நாம் பணத்தை தேடி மனைவி, குழந்தைகளை புறக்கணித்து ஓடுகிறோமோ அந்த வாழ்க்கையை விட்டே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் பெரும் புள்ளியாகும்போது, வாழ்க்கை நமக்கு வெகு தூரத்தில் சிறு புள்ளியாக மறைந்து கொண்டிருக்கும். ஒருபோதும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, பணத்தை தேடக்கூடாது.
வாழ்க்கை நாம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளையக்கூடியது அல்ல. இந்த உலகில் நாம் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. வாழ்க்கை நம்மை எந்த திசைக்கும் இழுத்துச் செல்லலாம். நம் தலையில் எந்த சுமையையும் சுமத்தலாம். அவற்றை நாம் நிராகரிக்க முடியாது. நமக்கென்று ஏற்பட்டிருக்கும் பொறுப்புகளைக் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி.
கையில் கிடைத்ததை மட்டமாக எண்ணி கிடைக்காததை உயர்வு என கற்பனை செய்யும் மனமுடையவராக நாம் இருந்தால், நம் வாழ்க்கை நரகம்தான். நாம் உண்மையிலேயே பெரிய நரகத்தில் மாட்டி கொண்டாலும் அதையும் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். நம் மன நிலையை பொறுத்துத்தான் சொர்க்கத்திலும் நரகத்தைக் காண முடியும். நரகத்திலும் சொர்க்கத்தைத் தரிசிக்க முடியும்.
வறட்டு கவுரவமும் அவசியமற்ற தன்மான உணர்வும் கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது. கல்வி, அறிவைப் பெருக்குவதற்கும், சிந்தனையை வளர்ப்பதற்கும்தான். எல்லோரும் படிப்புக்கேற்ற பணியில் அமர்ந்து விட முடியாது. எந்த செயலைச் செய்து கொண்டிருக்கிறோமே அந்த செயலை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு நம் படிப்பின் மூலம் நாம் பெற்றிருக்கும் சிந்தனைத் திறனை செலவிட வேண்டும்
மனைவியை அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாது, ஆனால் மனைவி குறித்த நம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலையை அடிக்கடி மாற்ற முடியாது. ஆனால், வேலை பற்றிய சிந்தனையை மாற்றிக் கொள்ள முடியும். உலகத்தை மாற்றி விட முடியாது. ஆனால், உலகம் பற்றிய நம் கவலையை மாற்றி விடலாம். இன்பமோ, துன்பமோ வெளியிலே இல்லை. நமக்குள்தான் இருக்கிறது.
துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். மிதிப்பவர்களிடம் வாழ்ந்து பேச வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலையே வாழ்க்கையின் எதிரி. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழக்கூடாது. நம் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும். சகித்து கொண்டு வாழாமல் ரசித்துக் கொண்டு வாழ வேண்டும். வழியின்றி வனத்தில் நடக்கலாம். ஆனால் வலியில்லாமல் வாழ்க்கை நடக்காது. ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப்படாமல், பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதுதான் வாழ்க்கை எனும் ஓடம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.
மகா. பாலசுப்பிரமணியன், துணைப்பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

வாழ்க்கைக்கு தேவையான சில அவசியமான பழக்க முறைகள் உள்ளன. இந்த வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் நோய் வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.
* தினமும் தூங்கப்போகும் நேரம் ஒரே நேரமாக இருக்கட்டும். இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் அதேநேரத்திற்கு தூங்கச்செல்லுங்கள்.
* தினமும் காலை 6 மணிக்குள் எழுத்துவிடுங்கள்.
* காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிடுங்கள்.
* காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.
* மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
* உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொள்ளுங்கள்.
* எந்த இடத்திலும் முதலில் காதுகொடுத்து கேளுங்கள்.
* உங்கள் நேரம், பணம் இரண்டும் உங்கள் வாழ்வின் சக்தி. அதனை எக்காரணம் கொண்டும் வீணடிக்காதீர்கள்.
* அழிவுப்பூர்வமான எண்ணங்கள், சிந்தனைகள் உங்களுள் புகவிடாதீர்கள்.
* தோற்றமும் அவசியம் தான். எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.
* நாம் தினமும் நமது பிரச்சினைகளுக்குள் மூழ்கியே நேரத்தினை வீணடிக்கின்றோம். அதனால் நாம் நமது குறிக் கோளில் இருந்து தவறி விடுகின்றோம். தினமும் காலையில் ஒருமுறை உங்கள் குறிக்கோளினை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.
* புன்னகையுங்கள், பார்த்தாலே சண்டைபோடுபவர் போல இருப்பது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல.
* நல்ல காலை உணவு நல்ல நாளின் ஆரம்பம். பழம், ஓட்ஸ் போன்றவை உங்கள் காலை உணவினை சத்துள்ளதாக்கும்.
* தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை கலந்து குடிக்கும் நீராக பருகுங்கள். வைட்டமின்சி சத்து கிடைக்கும், சக்தி கூடும், உடலின் வீக்கங்கள் குறையும்,
* உடற்பயிற்சி என்பதனை அன்றாடம் 20 நிமிடமாவது செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
* நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடக்கவேண்டும்.
* தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.
* அன்றாடம் ஏதாவது ஒரு செயலினை செய்து முடியுங்கள். (அ) ஆரம்பித்து முறையாய் தொடருங்கள்.
* பட்ஜெட் அவசியம். சேமிப்பு சிறிதளவாயினும் அவசியம்.
* ஏதாவது ஒன்றினை (நல்லதினை) தினமும் கற்றுக் கொள்ளுங்கள், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
* உங்கள் டேபிள், பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வையுங்கள். குப்பைகூளம் போல் வைக்காதீர்கள்.
* பயம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும், நம்மையும் உயிரோடு கொல்கின்றது. முதலில் பயத்தினை உடைத்தெரியும் வழியினைப் பாருங்கள்.
* ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்.
* உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
* ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிப்பதினை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* எட்டு மணிநேரம் தூங்குங்கள்.
* தியானம் பழகிப்பார்க்கலாமே
* தவறான பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எதையும் எண்ணி வருந்தி மூழ்காதீர்கள்.

கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட்டில் அல்வா செய்து கொடுக்கலாம். இன்று இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - அரை கிலோ
சீனி துளசி பவுடர் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பசு நெய் - 5 டீஸ்பூன்
பசும் பால் - அரை லிட்டர்

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் கேரட்டை போட்டு அதனுடன் ஏலக்காய் தூள், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கீழே இறக்கிவிடவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் வேகவைத்த கேரட்டை கொட்டி கிளறிவிடவும்.
பின்னர் சீனி துளசி பவுடரை தூவி நன்றாக கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
கேரட் அல்வா தயார். (நிறத்திற்காக எந்த பவுடரும் பயன்படுத்தக்கூடாது)
ஆரோக்கிய பலன்: கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்களுக்கு நல்லது. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைகண் நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். இருளிலும் கூட கண் நன்றாக தெரியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
துருவிய கேரட் - அரை கிலோ
சீனி துளசி பவுடர் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பசு நெய் - 5 டீஸ்பூன்
பசும் பால் - அரை லிட்டர்
தண்ணீர் - 100 மி.லி

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் கேரட்டை போட்டு அதனுடன் ஏலக்காய் தூள், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கீழே இறக்கிவிடவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் வேகவைத்த கேரட்டை கொட்டி கிளறிவிடவும்.
பின்னர் சீனி துளசி பவுடரை தூவி நன்றாக கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
கேரட் அல்வா தயார். (நிறத்திற்காக எந்த பவுடரும் பயன்படுத்தக்கூடாது)
ஆரோக்கிய பலன்: கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்களுக்கு நல்லது. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைகண் நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். இருளிலும் கூட கண் நன்றாக தெரியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி சத்து இன்றியமையாதது. சளி, இருமல், மன அழுத்தம், வீக்கம் போன்றவைகளில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்குவகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படுவதன் மூலமும் போதுமான அளவு வைட்டமின் டியை பெறலாம். ஆனால் போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின்கள் உடலில் உறிஞ்சப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். சில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் டி சத்தினை பெறலாம்.
கொழுப்பு நிறைந்த சாலமன், டூனா போன்ற மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிறைந்திருக்கிறது. இத்தகைய மீன் வகைகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஒரு சில வகை காளான்களில் புற ஊதாக்கதிர்களின் வழியாக வைட்டமின் டி உற்பத்தியாகும். எல்லா காளான்களிலும் இத்தகைய வைட்டமின்கள் இருக்காது. அதனால் கடைகளில் காளான்களை வாங்கும்போது அவற்றுள் இத்தகைய வைட்டமின் டி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
செரிவூட்டப்பட்ட பாலில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். அதேவேளையில் ஐஸ்கிரீம், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் டி இருக்காது. ஆரஞ்சு ஜூஸும் பருகி வரலாம். அதிலும் வைட்டமின் டி உள்ளடங்கி இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவிலும் வைட்டமின் டி உள்ளது. அதேவேளையில் ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு நிரம்பி இருக்கிறது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

கண்களை திறந்துகொண்டும் எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.
பொதுவாக தியானத்தை இரண்டு வழிகளின் செய்யலாம். ஒன்று கண்களை மூடிக்கொண்டு செய்வது இன்னொன்று கண்களை திறந்து கொண்டு செய்வது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. ஆனால் கண்களை திறந்துகொண்டு எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.
வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, அந்த அறையில், நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கை வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளக்கோ வைத்து. அதில் திரி போட்டு பின் நல்லெண்ணெயோ அல்லது தேங்காய் நல்லெண்ணெயோ ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் எவ்வளவு நேரம் தொடந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். விளக்கில் இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும்.
இதனால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்பாடு. இதை நாம் தொடர்ந்து செய்தால் நமக்குள் ஒரு பேராற்றல் வெளிப்படும். நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும். இந்த வகையான தியானத்தை செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. நமக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். இதை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையை புரிந்து நாமே இதை தொடர்ந்து செய்ய ஆரமித்துவிடுவோம்.

இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர்.
இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
முதுகு வலி
நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள். சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.
சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.
நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.
சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.
சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம். வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.
மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது. திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம். உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.
தீர்வுகள்
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள்.
கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.
ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள். முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம்.
சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள். உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும்.
ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது. அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது.
ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும்.
இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது. உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
மூட்டு வலி
ஒரு மாருதி காரையே தாங்கும் திறன் மூட்டுகளுக்கு உண்டு என்கிறார் சித்த மருத்துவர் ஒருவர். ஆனால், இதற்கு சீரான உணவுப் பழக்கமும் சரியான வாழ்வியல் பழக்கமும் உடலுழைப்பும் தேவை.
இளம் வயதிலிருந்தே சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்க வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் உள்ள உணவுகள் அனைத்தும் மூட்டுகளுக்கு வலுவூட்ட கூடியவை.

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு பச்சைப் பயறு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
பூண்டுப் பல் - 5,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
ஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
விசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
முழு பச்சைப் பயறு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
பூண்டுப் பல் - 5,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
ஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
விசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான பச்சைப்பயறு கஞ்சி ரெடி.