என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.
    சில பொருட்களை திரும்பத் திரும்ப புதிதாக வாங்க முடியாது. அதுவும் ஏசி போன்ற விலை உயர்ந்த பொருட்களைச் சரியாகப் பராமரித்து வந்தாலே ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் சரிவரப் பராமரிப்பதனால் மின்சாரச் செலவையும் குறைக்க முடியும். ஏசியை எவ்வாறு பராமரிக்கலாம் என்ற குறிப்புகலை இனி பார்ப்போம்.

    * கோடைக்காலம் துவங்கிய பிறகு இப்பொழுதுதான் ஏசி பெட்டியை பயன்படுத்தத் துவங்குவோம்! பல மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் ஏசியின் உள்ளே தூசி மற்றும் ஒட்டடைகள் அடைந்து சேகரமாயிருக்கும். எனவே, முதலில் ஏசியை சரிவீஸ் செய்த பிறகே பயன்படுத்த துவங்க வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் பல நேரங்களில் ஏசி பெட்டி சூடேறி தீப்பற்றும் அபாயம் உள்ளது.

    * நாள்தோறும் பயன்படுத்தும் ஏசிக்கு முறையான ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற நிலையாக்கி (ஸ்டெபிளைசர்களை) உபயோகிக்க வேண்டும்

    * ஏசியை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    * விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி கணினி மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்சாதப் பொருட்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றின் மின் இணைப்பை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் அவை ஏசியின் மின் ஏற்றத்தை அதிகரிக்கலாம்.

    * ஏசியின் வெப்பநிலை அளவு 24-25 டிகிரி செல்சியஸ் இருப்பதுபோல் பார்ததுக் கொள்ள வேண்டும். இதனால் மின்சார சேமிப்பு நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.

    * கணினி, மடிக்கணினி விளக்குகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் போன்றவற்றை ஏசியின் அருகில் வைத்தால் அவை ஏசியின் மின்தேக்கியை நீண்ட நேரம் வேலை செய்ய வைத்து மின்சாரச் செலவை அதிகமாக்கும்.

    * ஏசியை பயன்படுத்தும் பொழுது அத்துடன் கூரை விசிறியையும் (சீலிங்ஃபேன்) பயன்படுத்தினால் அது ஏசியின் வேலைச் சுமயை குறைப்பதில் உதவி செய்கிறது.

    * குளிர் காலத்தில் பெரும்பாலும் ஏசியை உபயோகப்படுத்த மாட்டோம். அந்தச் சமயத்தில் ஏசியின் கம்ப்ரசரை தூசி சேராமல் ஒரு துணியைக் கொண்டு மூடி வைக்கலாம்.

    * ஏசி சேவை நிபுணரை அழைத்து ஏசியை சர்வீஸ் செய்கிறோம் என்றால் அவர் ஏசியின் சுருள்கள் (காயில்ஸ்), அமுக்கி (கம்ப்ரஸ்), ஹெக்கைகள் (பின்ஸ்), வடிகட்டிகள் (ஃபில்டர்ஸ்), வடிகால்கள் (டிரையின்ஸ்) போன்ற அனைத்து பாகங்களையும் சரிபார்த்து தேவையான சேவையை சரிவரச் செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * நம்முடைய ஏசியானது அதிகமான பராமரிப்புச் செலவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் புதிய ஏசியை வாங்கி விடுவதே மிகச்சிறந்தது. இல்லையென்றால், அது மின்சாரச் செலவை மிகவும் அதிகமாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    * ஏசி உபயோகிக்கும் அறையை பகல் நேரங்கலில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் அந்த அறையின் அலமாரிகள், பரன்கள் போன்றவற்றை கதவுகளைக் கொண்டு மூடி வைத்திருப்பது ஏசி அதிக நேரம் வேலை செய்வதைத் தடுப்பதுடன் அறையின் குளிர்நிலையும் அதிக நேரம் நீடித்திருக்க உதவுகின்றது.

    * என்னதான் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தாலும் ஏசியை முறையாக பராமரிப்புடுன் பயன்படுத்த வேண்டும். அதுவே வீட்டிற்கும், நாட்டிற்கும் நலம் பயக்கும்.
    கருணைக்கிழங்கில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கருணைக்கிழங்கு - 100 கிராம்
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - சிறிய துண்டு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 3
    கொத்தமல்லி - 2 கொத்து
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - சிறிது
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.

    பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் செய்தால் சாப்பிடும் போது விறு விறு என்று இருக்காமல் இருக்கும்.

    கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து விடவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு  பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்..

    அடுத்து அதில் மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

    பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும். பிறகு அதை வில்லைகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த வில்லைகளை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு கட்லெட் ரெடி.
    பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம்.
    - ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்து நான் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, ராட்சஷி போல் நடந்துகொண்டிருக்கிறேனே என்று குற்ற உணர்வு கொள்கிறேன்’

    - ‘உல்லாச பயணங்கள், விருந்து, விழாக்களில் கலந்துகொள்ளக்கூட எனக்கு விருப்பம் இல்லை. அப்படிப்பட்ட நேரங்களில் தலைவலி, உடல்வலி, சோர்வு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகிறது’

    - ‘எப்போதும் ஏதோ ஒருவித கவலைவாட்டுகிறது. நாம் எதற்கும் லாயக்கற்றவர் ஆகிவிட்டோமோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுகிறது. மிக நெருக்கமானவர்களிடம் கூட பேச்சை குறைத்துக்கொள்கிறேன்'.

    ...இப்படி பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள். அலுவலக வேலை- வீட்டு நிர்வாகம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி பரபரப்பாக இயங்குகிறவர்கள். இவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

    பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்?

    வீட்டு வேலைகள்-அலுவலகப் பணிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் அதிகாலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை இயந்திரங்கள் போல் செயல்படுகிறார்கள். இந்த 18 மணி நேர பரபரப்பில் அவர்கள் குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முக்கியமான நபர்கள் சிலரையாவது சந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நின்று பேசுவதில்லை. சிரித்து மகிழ்வதில்லை. கண்டுங்காணாமலே சென்று விடுகிறார்கள். ஏன்என்றால், ‘அவர்களிடம் பேசினால் புதிதாக வேறு ஏதாவது பிரச்சினை உருவாகிவிடும். சும்மா போகிற ஓணானை பிடித்து இடுப்பில் கட்டிக்கொண்ட கதையாகிவிடும்’ என பயந்து உறவுகளிடம் பேசுவதற்கும், விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தயங்குகிறார்கள்.

    இப்படி தயங்கித்திரியும் பெண்களிடம் மற்றவர்களும் நெருங்கிப் பேசுவதில்லை. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எப்போதும் வேலை வேலை என்று இயந்திரம்போல் செயல்படும் அவர்களை பயமும், கவலையும் வாட்டுகிறது. அதில் இருந்து விடுபடும் வழிதெரியாமல் மிக விரைவாகவே மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். கடமை, பொறுப்பு இரண்டையும் முழுமனதோடு நிறைவேற்ற வேண்டும் என்று கண்ணுங்கருத்துமாய் பெண்கள் செயல் படுவதால், அவர்கள் ஆண்களைவிட இரு மடங்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
    டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் தொடர்ந்து அதிக அளவில் மக்கள் பருகுவது டீ என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
     
    அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும். டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
     
    புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும்போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்துகிறது.
     
    ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
     
    எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
     
    புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீயில் டோனிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது.
    குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
     
    பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.
     
    பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.
     
    பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
     
    குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்குதீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
     
    குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும். குழந்தைகளுக்கு நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.
     
    குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிகொடுங்கள்.
    நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
    நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை எளிதாக பராமரித்து அதன் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படும் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

    உப்பு கொண்டு ஸ்கரப் செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்குவதோடு, சருமம் மென்மையாக வறட்சியடையாமல் பட்டுப்போன்று இருக்கும்.
     
    நமது தலை முடி பிரச்சனைகள் பல உண்டாக, நமது தலையில் உள்ள அதிகமான எண்ணெய் பசை தான் காரணம். அதற்கு நாம் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் உப்பினை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து, தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படியே வாரத்திற்கு ஒருமுறை செய்தால் எண்ணெய் பசை நீங்கி கூந்தல் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
     
    சருமம் பொலிவிழந்து இருப்பதை சரி செய்ய, சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் கல் உப்புடன் ½ கப் தேங்காய் எண்ணெய் கலந்து, அதைக் கொண்டு உடலை தேய்த்து கழுவி வர இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவுடன் மின்னும்.
     
    கண்களை சுற்றியுள்ள கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து மசாஜ் செய்தால் கருவளையம் காணாமல் போய் விடும்.
     
    2 கப் கல் உப்பு, 1 1/3 கப் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
     
    நம் பாதங்களின் அழகை கெடுக்கும் அழுக்கினை நீக்க மற்றும் குதிகால் வெடிப்பினைப் போக்க, உப்புடன் ஆலிவ் எண்ணெய் சம அளவில் கலந்து, பாதங்களில் மெதுவாக தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இப்படியே வாரம் 2-3 தடவை செய்தால் பாதங்கள் அழகாய் தோன்றும்.
     
    வட இந்தியாவில், ‘ஆம் பன்னா’ என்று அழைக்கப்படும் இந்த மாங்காய் ஜூஸ், வெயில்காலத்திற்கு மிகவும் குளிர்ச்சியான, சத்தான பானம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை மாங்காய் - 6
    சீரகத் தூள் - சுவைக்கேற்ப
    உப்பு - சுவைக்கேற்ப
    நாட்டுச் சர்க்கரை - சுவைக்கேற்ப
    புதினா இலைகள் - சிறிதளவு
    மிளகுத் தூள் - சுவைக்கேற்ப



    செய்முறை:

    மாங்காய்களை தண்ணீரில் வேக வைக்கவும். (இதற்கு பதில் தனல் அடுப்பில் மாங்காயைச் சுட்டெடுத்தால் முற்றிலும் மாறுபட்ட சுவை கிடைக்கும்). வெந்தவுடன் தோல் உரித்து, சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    சீரகத் தூள், உப்பு, நாட்டுச் சக்கரை, புதினா இலைகள், மிளகுத் தூள் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

    அரைத்த விழுதை சுட்ட மாங்காயுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு தடவை ஓடவிடுங்கள்.

    சுவையான ஆம் பன்னா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது.

    பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
     
    சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது அவசியமாகும்.
     
    பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.
     


    நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது, புதிய நாப்கினை பயன்படுத்துவதற்குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும்.
     
    உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, தவறான அணுகுமுறை.
     
    நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும்.
     
    குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்கள் சில தவறுகளை செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
     
    உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுப்பது நல்லது.
    ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. எண்ணங்களை எந்த விதமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.
    ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. எண்ணங்களை எந்த விதமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம். இனி இந்த எளிய தியானத்தை எப்படி செய்வது என்றால்……
     
    1. அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
     
    2. இயல்பாக மூச்சுவிட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
     
    3. இனி உங்கள் எண்ணங்களை விருப்பு, வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள்.
     
    4. இந்த எண்ணம் நல்லது. இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.
     
    5. கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.
     
    6. ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து, இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.
     
    7. எண்ணம் - இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமர்சனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக, ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.
     
    8. ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டுவிட்டது என்றால் விருப்பு, வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியாவிட்டால் தியானமும் நிகழாது.
     
    9. எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஓன்றுதான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்றுதான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஓளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள்.  இது தான் சரியான மனநிலை.
     
    10. தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு, வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம், உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும், உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆராவராங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அதுதான்…
    வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.
    குளிர்காலத்தில், ‘அப்பப்பா என்ன குளிர்; தாங்கவே முடியவில்லை, வெயில் காலமே பரவாயில்லை போல் இருக்கிறது’ என்று சொல்வதுண்டு. வெயில் காலம் வந்துவிட்டால், அந்த வெயிலின் கொடுமையை என்னவென்று சொல்வது, வியர்வையாகக் கொட்டுகிறது. இதற்கு குளிர் காலம் எவ்வளவோ மேல்’ என்றும் கூறுவதுண்டு. அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது இதற்கு மிகவும் பொருந்தும். கோடை காலம் தொடங்கி விட்டது, வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டது. இச்சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது? அதைப்பற்றி சற்று விவரமாகப் பார்ப்போம்.

    தோல் தான் நமது உடலின் பெரிய உறுப்பாகும். உடலுக்கு கவசம் போல் வெளிக்காயம் வராமல், தோல் தான் நமது உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் டி உற்பத்தி செய்து உடல் எலும்பை உறுதியாக வைத்துக்கொள்கிறது. உடலுக்கு அழகை கொடுக்கிறது. வியர்வை மூலம் உடல் சீதோஷ்ணத்தை சரிசமமாக வைத்துக் கொள்கிறது. அதிக வியர்வையினால், உடலிலுள்ள உப்பு மற்றும் நீர் அதிகமாக உடலில் இருந்து வெளியேறுவதனால் உடல் மிகவும் பலவீனம் அடையும். லேசாக களைப்பு, மயக்கம், தலைவலி, குமட்டல் போன்ற தொல்லைகள் தோன்றும். நாக்கு வறட்சி அடையும். சிறுநீர் செல்வது குறையும். நீர்க் கடுப்பும் சிலருக்கு உண்டாகும். உடலில் போதிய தண்ணீர் இல்லாததனால் மலச்சிக்கல் ஏற்படும். இரவில் தூக்கம் சரியாக இருக்காது.

    சூரிய ஓளியில் உள்ள யு.வி கதிர்கள் தோல் மேல் தொடர்ந்து படும்போது தோல் நிறம் சிவக்கும், தோல் அரிக்கும் அல்லது தடித்துப்போகும் அதிகமாக வியர்த்து கொட்டும். அதனால் உடலில் அரிப்பு தோன்றும். முதுகு மற்றும் பல உடற்பாகங்களில் வியர்க்குரு தோன்றும். உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறு, சிறு கொப்பளங்கள் தோன்றும்.

    முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு. முகத்தில் உள்ள முகப்பரு அதிகரிக்க வாய்ப்புண்டு. தோல் வனப்பு குறைந்து, சுருக்கம் ஏற்படும். உடலில் பூஞ்சைக் காளான் நோய்த் தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகமாகத் தோன்றும். வெயில் காலத்தில், அதிகமாக உடற்பயிற்சி செய்த பின்பு காலில் உள்ள ஆடு சதையில் அதிகமாக வலி உண்டாகும். உப்பு கலந்த தண்ணீரைக் குடித்தால் வலி உடனே சரியாகிவிடும். இத்தகைய தொல்லை வருபவர்களுக்கு, சிறிது உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், சதையில் வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

    உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது, முதலில் அதிக தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். பின்பு சதையில் ஓரு வித நடுக்கம், மனக்குழப்பம், மனப்பதற்றம், மயக்க நிலை மற்றும் சுயநினைவு இழப்பும் ஏற்படலாம். மூளையில் உடல் வெப்பத்தை கண்காணிக்கும் மையம் செயல் இழந்து விடுவதால் இத்தொல்லை ஏற்படுகிறது. உடலைத் தொடும்போது மிகவும் சூடாக இருப்பது தெரியும். வியர்வை சிறிதும் இருக்காது. ரத்த அழுத்தம் குறையும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழக்க நேரிடும். பாதிக்கப்பட்டவரை உடனே தனி அறைக்கு எடுத்துச் சென்று குளிர்ந்த நீரால் குளிப்பாட்ட வேண்டும். பனிக்கட்டிகளை அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் வைக்க வேண்டும். மின் விசிறியை உபயோகித்தோ அல்லது குளிர்சாதனப் பெட்டியின் உதவியுடனோ உடலின் சூட்டைக் குறைக்க வேண்டும். திரவத்தை ஊசி வழியாக உடலினுள் செலுத்த வேண்டியிருக்கும்.

    முடிந்தவரை, அதிகமாக வெயில் இருக்கும் சமயத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே போவதற்கு முன்பு தண்ணீர், சிறிது உப்பு கலந்த மோர் அல்லது பழரசம் அருந்துவது நல்லது. வெளியே போகும் போது அவசியம் குடை எடுத்துச் செல்லவும். தலையில் ஏற்படும் சூட்டைத் தணிக்க தலையில் தொப்பி அணியலாம். குறைந்தது 2, அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இதய நோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் டாக்டரின் அலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம். வெயில் அதிகம் இருந்தாலும் முதியவர்களுக்கு தாகம் அவ்வளவாக எடுக்காது. ஆகையால் போதிய தண்ணீர் குடிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் முதியவர்களை போதிய தண்ணீரை குடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு போன்ற பழரசங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். கோடைக்கேற்ற பழம் நுங்கு நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தரும், பதனீர் கோடையில் உடலுக்கு மிகவும் நல்லது. மசாலா அதிகம் உள்ள உணவை தவிர்க்கவேண்டும். அல்லது குறைக்கலாம். உதாரணம்: அசைவ உணவு. கம்பு அல்லது ராகியில் கூழ் செய்து அதில் கெட்டி தயிர், சிறு வெங்காயம், உப்பு சிறிது போட்டு மண் பாத்திரத்தில் வைத்திருந்து பருகலாம் அல்லது சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பருகினால் வெயிலின் தாக்கத்திலிருந்தும், உடல் சூட்டையும் குறைக்கும். எளிதில் செரிக்ககூடியது. மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி தரவல்லது. செயற்கைப் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    கண்கள் மிகவும் சூடாக இருந்தால் வெள்ளரிக்காயை நறுக்கி கண்கள் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் சூடு குறையும். காற்றோற்றட்டமுள்ள அறையில் முடிந்தவரை இருந்தால் நல்லது. மின் விசிறி, ஏர்க்கூலர், குளிர் சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களைத் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். படுக்கை அறையில் வெட்டிவேர் கொடியைத் தண்ணீரில் நனைத்துத் தொங்கவிட்டால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.

    வியர்க்குரு அதிகம் இருந்தால் கேலமைன் கிரீமை உடலுக்குத் தடவலாம். லேசான பருத்தியிலான அல்லது கதர் ஆடைகளை அணிவது நல்லது. காலையிலும், இரவிலும் குளித்தால் உடல் சூடு குறையும். கண்ணிற்கு குளிர்ச்சி தரும் கண்ணாடியை உபயோகப்படுத்தலாம். அரிப்பு அதிகமாக இருப்பின், டாக்டரை கலந்து அதற்குத் தேவையான மாத்திரைகளை சாப்பிடவேண்டும். ஆகவே கோடையில் குளிர்ச்சி பெற தண்ணீர், மோர், பழரசம், பதநீர், நுங்கு, கஞ்சி போன்றவைகளை தினமும் சேர்ந்துக்கொண்டு, லேசான பருத்தி ஆடை அணிந்து, தினமும் இருமுறை குளித்து வந்தால் போதும். நாம் இருக்கும் இடத்திலேயே ஊட்டியின் குளிர்ச்சியை ஓரளவிற்கு அனுபவிக்க முடியும்.

    டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர், முன்னாள் தலைவர்,

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
    குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் காபி மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இன்ஸ்டன்ட் காபி பொடி - 1 டீஸ்பூன், 25 மில்லி சுடு தண்ணீரில் தனியாக வைக்கவும்),
    வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப் (குழிகரண்டி)
    குளிர்ந்த கெட்டி பால் - 200 மில்லி,
    ஐஸ்கட்டி - 2 கியூப்,
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    கோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்.

    மேலே அலங்கரிக்க

    விப்பிங் கிரீம் - 1 கப்,
    சாக்லேட் பவுடர் - மேலே தூவ,
    சாக்லேட் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    மிக்சியில் ஐஸ்கிரீம், பால், காபி டிகாஷன், சர்க்கரை, கோகோ பவுடர், ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி பிறகு அதில் மிக்சியில் உள்ள காபி மில்க் ஷேக் ஊற்றி அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன்மேல் சாக்லேட் பவுடர் தூவி பரிமாறவும்.

    காபி பிரியர்களுக்கு இந்த கோடைகாலத்தில் காபி மில்க்ஷேக் மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலர் இரவு நேரத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் படுத்துவிடுவார்கள். இரவில் குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.
    இரவு தூங்கும் முன் அதிகமாக உண்ணக் கூடாது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இதற்காகவே போதுமான உணவு உண்ணாமல் குறை பசியுடன் தூங்குவார்கள். எப்போதாவது இப்படி செய்கிறீர்கள் எனில் பிரச்சனை இல்லை. இதையே பழக்கமாகப் பின்பற்றினால் ஆபத்து. சிலர் உண்ணாமலேயே படுத்துவிடுவார்கள். குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதைக் காணலாம்.

    * மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக் கூடிய மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 உடலுக்கு மிக முக்கியம். இவை இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஏற்படும்.

    * இரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும். இரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும்.

    * எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.

    * பலரும் இரவில் அதிகமாக உண்பதால் எடை அதிகரிக்கும் என்று நினைப்பார்கள். இதற்காகப் பலரும் உண்ணாமலேயே தூங்கிவிடுவார்கள்.ஆனால் அது முற்றிலும் தவறு. வெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொழுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.

    இரவு நேரத்தில், நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட டயட் இருக்கிறீர்கள் அல்லது விரதம் இருக்கிறீர்கள் என்றால் அது பிரச்சனை இல்லை. அதுவும் நம் பாரம்பரிய விரதம் என்பது உடலில் உள்ள நச்சுத் தம்மையை நீக்கி கிருமிகளை அழிக்கக் கூடியது. இது உடலில் உள்ள பழுதை சீர் செய்வது போன்றது. ஆனால் அது தொடந்து இருக்கும் பட்சத்தில் தான் ஆபத்து.
    ×