என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு - 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது - 25
பாசிப்பருப்பு - கால் கிலோ
மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
மல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.
செய்முறை
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.

வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், இந்தச் சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.
தமிழக அளவில் 2011-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 24 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த வருடம் வாடகை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது. அது குறித்த விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம், வாடகை தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகள் (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிப்ரவரி முன்றாம் வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டத்தின்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு தமிழகத்தில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டிடத்தையும் வாடகைக்கு விடப்படும்போது அதற்கான ஒப்பந்தம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
அதற்காக துவக்கப்பட்டுள்ள www.tenancy.tn.in என்ற இணைய தளத்தின் மூலம் வாடகை ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வாடகை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்படுவார்கள். மேலும், இரு தரப்புக்கும் இடையே உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, வருவாய் கோட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது, சென்னைக்கு 8 அதிகாரிகள் உள்ளனர்.
இந்த சட்டத்தின் கீழ் வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் இனி வாடகைக்கு விடப்படும் எந்த ஒரு கட்டிடத்துக்கும் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
* வீட்டின் உரிமையாளர், குடியிருப்போர் இடையே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
* வீட்டை வாடகைக்கு விடுபவர் மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும்.
* வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர், குத்தகைதாரர் ஆகியோர் வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வீட்டை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* வாடகைக்குக் குடியிருப்பவர், ஒப்பந்தக் காலம் முடிந்தபிறகு வீட்டைக் காலி செய்யவில்லை என்ற நிலையில் இரு மடங்கு வாடகை தர வேண்டும்.
* வாடகை குறித்து சிக்கல்கள் எழும்போது வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைக்குக் குடியிருப்பவர், வாடகை அதிகாரியிடம் எழுத்து மூலம் தகவல் தர வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்.
* வாடகை அதிகாரி அளித்த தீர்வில் திருப்தியில்லை என்ற நிலையில் 90 நாட்களுக்குள், வாடகை தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலும், அதனை அடுத்து 120 நாட்களில் வாடகை குறித்த பிரச்சினைகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்திலும் முறையிடலாம். இந்த அமைப்புகளின் தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இயலாது.
* வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், இந்தச் சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.

ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பதைக் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை.
ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும். குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும். ஆட்டிசக் குறைபாட்டிற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் பலவும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மரபுக்கூறுகள் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பால் மரபணுவின் செயல்பாட்டிலும், வெளிப்பாட்டிலும் ஏற்படும் மாற்றமே ஆட்டிசக் குறைபாட்டிற்குக் காரணமென்று கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருத்தரித்த தாயின் வயது, கர்ப்பக்காலத்தில் தாயின் ஆகாரம், தடுப்பூசிகள், கர்ப்பிணியின் உடல் மன ஆரோக்கியமின்மை, குறை பிரசவம், பிராணவாயு குறைபாடு, நச்சுப்பொருட்கள் போன்றவை ஆட்டிசக் குறைபாட்டிற்கான காரணிகளாக கருதப்படுகிறது. சரிவிகித உணவு உண்ணாமை, இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை மிகவும் அதிகமாக உட்கொள்ளுதல், சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, மது அருந்துதல், புலன்களின் (ஒலி, ஒளி, சுவை, மணம், தொடு) அதீத நுகர்ச்சி, தகாத சொற்களை அதிகமாக கேட்பது, பயன்படுத்துவது, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள் பல தீய பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தலால் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் கர்ப்பிணி தனியாக இரவில் உலாவுதலால் அவர்களின் ஆசைகள் நிராசையாகி மனவேதனை உண்டாவதால் மரபுக்கூறுகளில் மாற்றங்கள், சரீர தோஷங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை பாதிக்கப்பட்டு கர்ப்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குழந்தையின் உடலில் குறைபாடோ, நோய்களோ உண்டாகலாம்.
மேலும் குழந்தைகள் குறைந்த மனவலிமையுடையவர்களாக திகழ்வதால் எளிதில் மனநல குறைபாடு உடையவர்களாகவோ நடத்தைப் பாங்கில் குறைபாடு உடையவர்களாகவோ இருப்பர் என்கிறது ஆயுர்வேதம். பிறந்த குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சிப்படிகளை தானாகவே அடைவர். ஆறு மாதங்களாகியும் தாயின் முகம் பார்த்து சிரிக்காமல் இருத்தல், தாயின் கண்களை நேருக்குநேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களாகியும் சத்தங்கள் செய்யாமல் இருத்தல், 12 மாதங்களாகியும் தனக்கு வேண்டியதை சுட்டிக்காட்டாமல் இருத்தல், பை-பை எனக் கை அசைக்காமல் இருத்தல் இக்குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
சமூக நல்லுறவு பிறருடன் தொடர்புகொள்ளும் திறனில் சிக்கல்கள், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை, பாவனை விளையாட்டு செய்யாமலிருப்பது, எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது, பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்காமலிருப்பது, மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் பழகுவதில் ஆர்வமின்மை, காரணமின்றி சிரிப்பது, பயம் ஆபத்து போன்றவற்றை உணராதிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறிகளாகும்.
மேலும், தினசரி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாதவராக இருப்பது, சொற்களை அர்த்தம் புரிந்துகொள்ளாமல் திருப்பிச்சொல்வது, புலன் சார்ந்த தூண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது (சிலவகை துணிகள் அணிவதிலோ, துணி தன் உடல்மேல் உரையும் போதோ சிரமம் அடைவர், சாதாரண சத்தத்திற்கே காதுளை மூடிக்கொள்வது), அடுத்தவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள இயலாதிருப்பது, ஒரே தன்மையுடைய செயலை திரும்பத்திரும்ப செய்வது (விரல்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, தலையை ஆட்டுவது), விரைவில் கோபம் கொள்வது, தனக்குத் தானே காயம் உண்டாக்கிக்கொள்வது, ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே பயன்படுத்துவது, தனக்கு வேண்டியதை சுட்டிக்காட்டியோ சைகைகள் மூலமோ வெளிப்படுத்த இயலாதது, அதீத இயக்கம் உடையவர்களாக இருப்பது அல்லது மந்த இயக்கம் உடையவர்களாக இருப்பதும் இந்த குறைபாட்டின் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை கொடுப்பது அவசியம். நடத்தை சீராக்கல் பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப்பயிற்சி, உணவுக்கட்டுபாடு மூலம் இக்குழந்தைகளின் நடத்தைப் பாங்கில் மாற்றங்கள் வரவழைக்கப்படுகிறது. ஆட்டிசம் குறைபாட்டிற்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பதைக் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மை.
மூலிகை தைலம் கொண்டு மசாஜ் செய்யலாம். மூலிகை தைலத்தை தலையில் பஞ்சு கொண்டு தேக்கி வைக்கலாம். மூலிகைப்பொடியை தலையில் தடவலாம். மேலும் மூலிகை தைலம் அல்லது மூலிகைகளுடன் காய்ச்சிய மோரை தலையில் சீராக ஊற்றுவது.
மூலிகை தைலம், கஷாயத்தை ஆசனவாய்வழி உட்செலுத்துவது இத்துடன் மேத்யம் என்றழைக்கப்படும் மூளையின் செயல்பாட்டை சீராக்கும் மூலிகைகளான ப்ரம்மி, வல்லாரை, சங்குபுஷ்பம், அதிமதுரம், சீந்தில்கொடி, வசம்பு போன்றவற்றை பொடியாகவோ, சாறுபிழிந்தோ கொடுக்கப்படும். இச்சிகிச்சையினை 45 நாட்கள் தொடர்ந்து செய்தபின்பு 45-60 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சையினை மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பது உறுதி.
மரு.த.ம.செந்திஅரசி, இணை பேராசிரியர்,
அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நாகர்கோவில்.

மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கோதுமை ரவை வடை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் மூலம் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம்.
நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு.
தற்போதைய சூழலில் இரசாயனமில்லாத உணவுகளே கிடையாது. எல்லாவற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் நிறைந்திருக்கிறது. சுவைக்கு அடிமையாகி, நோய்களை நாமே வரவழைத்து கொண்டிருக்கிறோம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆலோசனைகள் இங்கே.
நாள் ஒன்றில் மொத்தமாக மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ளாமல், ஐந்து வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
முற்றிலுமாக மாவுச்சத்து மிகுந்த உணவை தவிர்த்திடாமல், மாவுச்சத்து குறைவாக உள்ள முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பார்லி, பால், சீஸ், சோயா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நார்ச்சத்துள்ள உணவு, ஜீரணத்தை தாமதப்படுத்துவதால், நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியுணர்வு இருக்காது. கேரட், பீன்ஸ், பார்லி, ப்ரோக்கோலி, பீட்ரூட், ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மிகுதியாய் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது.
செயற்கை இனிப்பூக்கிகளை பயன்படுத்தாமல், தேங்காய், வெல்லம் மற்றும் தேன் போன்று இயற்கையாகவே இனிப்பு நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இயற்கையாக கிடைப்பதாயினும், அளவாக பயன்படுத்துவதே சிறந்தது.
அவகேடோ, ஆலிவ், நட்ஸ் மற்றும் கெனோலா எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
சரியான இடைவெளியில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சிறந்தது. இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்பதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முலைக்கட்டிய பயறுகள், தானியங்கள், முழு கோதுமை, சிவப்பு அரிசி போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம்.
கெட்சப், சாஸ் போன்ற உணவுகளில் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் சர்க்கரை ஒளிந்திருக்கிறது. துரித உணவுகளை தவிர்ப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதுகாக்கிறது. உணவில் கவனம் செலுத்தினாலே போதும் நோய்களை விரட்டி அடிக்கலாம்.

ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.
அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.
கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.

அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.
சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும்.

தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.
மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.
ஆனால், அது வசதி படைத்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது. சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில், இப்போது பிஸியோதெரபி பயின்ற சில பெண் மருத்துவர்கள் வீடு தேடி வந்தும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘‘கர்ப்பம் தரித்த முதல் மாதத்திலிருந்தே பெண்களுக்கு உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பத்தோடு தொடர்புடைய உடற்கூறு மாற்றங்களானது உடலின் வளர்ச்சி, நீரை தக்க வைத்து, பிரசவத்திற்குத் துணை புரியும் கட்டமைப்புகளை தளர்வடையச் செய்தல் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதுகெலும்பு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளில் மேலும் சுமையை அதிகரிக்கும்.
கருவின் வளர்ச்சிக்கேற்ப ஒரு பெண்ணின் அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் தசைகளில் இறுக்கம் ஏற்படும். ஏனெனில், எடை அதிகரிக்க, அதிகரிக்க அப்பகுதிகளில் அழுத்தம் ஏற்படுவதால் தசைகள் வலுவிழந்து இறுக்கமடைகின்றன. தசைகள் வலுவடைவதற்கான இறுக்கமாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. எலும்பு மூட்டுகளை இணைப்பவையாகவும், மூட்டுகளில் முக்கிய ஆதரவாகவும் விளங்கும் தசை நார்கள் மென்மை அடைந்துவிடும்.
தசைகளில் ஏற்படும் இந்த இறுக்கம் மற்றும் தசை நார்கள் வலுவின்மையால், 2-வது ட்ரைமெஸ்டர் காலங்களில் தோள் பட்டை மற்றும் கழுத்து வலி, கீழ் முதுகுவலி, இடுப்பு வலி, கணுக்கால்களில் வலி மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாகிறது. கர்ப்பம் ஒரு பெண்ணின் உடலில் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும், பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பும்போது ஏற்படும் அழுத்தத்தை தாங்குவதற்கேற்றவாறு இடுப்பு தசைகள் விரிந்து கொடுப்பதும், பிறப்புறுப்பின் தசைகள் தளர்வடைவதும் அவசியம்.
பிஸியோதெரபி மருத்துவர் உதவியோடு கருவுற்ற தாயின் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் முக்கிய தசைகளுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம், கர்ப்ப காலத்திலும், அதற்குப் பின்னரும் ஏற்படும் வலிகளைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்திலேயே தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் பிரசவ வலி மற்றும் பிரசவத்திற்குத் தயாராகும் தசைகளை (வயிறு, இடுப்பு மற்றும் பின்புற தசைகள்) கட்டுப்படுத்துவதற்கான திறனைப் பெற முடியும். பிரசவ நேரத்தில், எப்படி இடுப்புப்பகுதியில் (Pelvic floor) திறம்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இயன்முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
சரியான அழுத்தம் கொடுப்பதால் Pelvic floor-ல் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்னைகளின் வாய்ப்பை குறைக்கும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இடுப்பில் ஏற்படும் அதிர்ச்சி, ஒரு பெண்ணுக்கு உடலுறவின்போது வலி, சிறுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்துவதில் சிரமம் (Urine incontinence) மற்றும் இடுப்பு உறுப்பு பிறழ்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இடுப்பு மண்டலத்தில் உள்ள தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் நரம்புகளை மதிப்பிடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உள்ளன. ஒரு இயன்முறை மருத்துவர் உதவியோடு இந்தப் பயிற்சிகளை செய்வதால் பிரசவ நேரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை கர்ப்பிணிப்பெண் எளிதில் சமாளித்துவிடலாம்.
கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பின்னரும், இடுப்பு மற்றும் வயிற்று தசைகள் உள்ளிட்ட இடுப்பு உறுப்புகளை ஆதரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் ஒரு பெண் எந்த அளவிற்கு, விரைவாக தன் உடல் செயல்பாட்டை துவங்க ஆரம்பிக்கிறாள் என்பதைப் பொறுத்தே பிரசவத்திற்குப்பின் அவளது முந்தைய உடலமைப்பை விரைவில் மீட்டெடுக்க முடியும்.
குழந்தை பிறந்த பிறகு பிரசவத்தின் போது இழந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உங்கள் உடல் மீட்டெடுக்கும். முதல் மாதத்தில், ஒரு நாற்காலியிலிருந்து எழுவது, தொட்டிலிலிருந்து குழந்தையை தூக்குவது, தாய்ப்பால் கொடுப்பது, குளிப்பது போன்ற வழக்கமான தினசரி பணிகளைச் செய்வதற்கு ஏதுவானதாக உங்கள் உடல் இருந்தாலே போதுமானது.
2, 3-வது மாதங்களில் உங்கள் உடல் கொஞ்சம் தேறிய பின்னர், 10 நிமிடங்கள் வரை செய்யக்கூடிய மிதமான பயிற்சிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை மற்றும் பிஸியோதெரபிஸ்ட்டின் உதவியோடு செய்வது நல்லது. 4, 5 மாதங்களுக்குப்பிறகு, வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை படிப்படியாக அதிகரித்து செய்யலாம்.

பார்லியில் அதிகளவு நார்சத்து இருக்கின்றது. பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லெட்டும் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
வேகவைத்த பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்தும் கொள்ளவும்.
வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி, சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான சத்தான சத்தான ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் ரெடி.
இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
வேகவைத்த பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்தும் கொள்ளவும்.
வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி, சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான சத்தான சத்தான ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் ரெடி.
இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.
ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.
ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.
ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.
மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.
இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது.

ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சில வழிகள் உள்ளன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.

1. வேம்பு
வேம்பு ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் பொடுகுக்கு எதிராக போராட உதவும். வீட்டில் வேப்ப எண்ணெய் ஒன்றை நீங்களே தயாரிக்கலாம் அல்லது கடைகளில் வாங்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் கூந்தலுக்கு நல்ல பயனுள்ள வேப்பம் மாஸ்க் தயார் செய்யலாம். வேப்பங்காய்களை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து அதை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின்னர் கழுவலாம். இந்த மாஸ்க் அதிசயங்களைச் செய்யலாம்.
2. முட்டை வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு
முட்டை வெள்ளையில் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும், இது முடி உதிர்வதை தடுக்க அவசியம். வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் சி மேலும் ரத்த ஓட்டத்தை மற்றும் கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் ஸ்கெல்ப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.
3. நெல்லி
நெல்லி வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை, ஸ்கெல்பில் பொடுகு உருவாவதை தடுக்கும். கூடுதலாக, இது பொடுகு காரணமாக ஏற்படும் அரிப்பை தடுக்க உதவும். நீங்களே நெல்லி கொண்டு ஒரு முடி மாஸ்க் செய்ய முடியும். தண்ணீரில் நெல்லி தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது, சுமார் 8-10 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் அரைத்து, நெல்லி பேஸ்டில் கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் இந்த பேஸ்ட் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்யுங்கள், அது சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு அலசவும்.
4. வெந்தய விதைகள்
முடி உதிர்தல் மற்றும் பொடுகை தடுக்க உதவுகிறது, இந்த வெந்தயம் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் பொடுகை நீக்கலாம். தண்ணீரில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்போது, எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பேஸ்டை வைத்து உச்சந்தலையில் மற்றும் முடி முனைகளில் நன்கு அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் உங்கள் கூந்தல் மீது விட்டு விடுங்கள். ஒரு லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.
முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. சட்டங்களும், திட்டங்களும் கண் துடைப்பாகத்தான் இருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
பண்டைய காலத்தில் ‘கொடை‘ என்ற பெயரால் பண பலத்தை காட்டி பெருமையை நிலைநாட்டினர். இவை நாளடைவில் சமுதாயத்தில் தானமாகவும், சீதனமாகவும், வரதட்சணையாகவும் உருவெடுத்தன. மேலும் பெண் வீட்டாரின் பெருமையை காட்ட சீதனங்கள் வழங்கப்பட்டன. மணமகனின் கல்வி நிலை உயர்ந்திருந்தால், செல்வ வீட்டு மணமகளின் பெற்றோர் அதற்கேற்ற வகையில் சீர் தந்து தன் பெருமையை காட்டிக் கொள்வது இன்றும் நடந்து வருகின்ற உண்மையாகும்.
‘ஏன் என்ற கேள்வி‘ எழாதவரை எதற்கும் விடிவில்லை. பெண் சமுதாயமும் அவ்வாறே ஏனென்ற கேள்வி எழுப்பாமல் எதற்கும் தலையாட்டி வீட்டுக்குள்ளே சிறைப்பட்டு அச்சம், நாணம், மடம் என்ற கடிவாளமிட்ட வாழ்க்கையால் வரன்முறையில் வாழ்ந்து வந்ததினால் தான் பெண் சமுதாயம் முன்னேறாமைக்கும், வரதட்சணை கொடுமைக்கும் காரணமாக இருந்தது.
இன்று முதல்வர், கலெக்டர், விமானி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இருந்தாலும் கூட பெண்ணிற்கு இழைக்கப்படும் தீமைகள் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் தட்டிக் கேட்கப்படுகின்றன. பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாகவும் உள்ளார். மாமியார் கொடுமை இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. மணமான பெண் பிறந்த வீடே கதியாக திருப்பி அனுப்பப்படுவதற்கும் புகுந்த வீட்டில் பெண்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கும் அரசு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் ஆங்காங்கே கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.
பெண்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பெண்கள் நல உரிமை கழகம், மகளிர் முன்னேற்றக் கழகம் முதலியன அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புகள் இந்த சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண்கிறது. வரதட்சணைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு கல்விக்கென பெற்றோர் பணம் செலவழித்திட தயங்குகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.
ஒவ்வொரு ஆண்மகனும் தன்னளவில் சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வரதட்சணை கொடுமையை எதிர்க்கலாம். வறுமையின் நிலையில் வாழும் குடும்பங்களில் ‘வரதட்சணை கொடுமை‘ கோரமாக தாண்டவமாடுகிறது. பெண்ணை பெற்றவர் கடன் வாங்கியாவது திருமணம் நடத்தி வைத்து, திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மணமகன் கேட்டது கிடைக்காததால் மணமகளை வீட்டிற்கு விரட்டியடிப்பதும், அதனால் அங்கு தந்தை மாரடைப்பால் இறப்பதும் சில குடும்பங்களில் நிகழாமல் இல்லை. அதைபோல் வல்லமை பெற்ற மாமியார்களால் எரிவாயு அடுப்பில் எரிந்து பெண் சாம்பல் ஆவாள். வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம் இதுவே ஆகும்.
சமுதாயத்தில் வரதட்சணை என்னும் வளர்ந்து வரும் தீயை அணைக்க முன்வர வேண்டும். வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இளைஞர்கள் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும். எனவே இளைஞர்களே, இதோ நீங்கள் விழித்திட வேண்டிய காலம். வருங்கால இந்தியாவை காப்போம், முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவோம், வரதட்சணை கொடுமையில் இருந்து விடுபட்டு புதிய உலகை படைப்போம்.

கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு கொண்டை கடலை - 1 கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லிதழை - தேவைக்கு

செய்முறை:
கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.